ரூ 1லட்சம் விலை குறைஞ்சிடுச்சு! சிட்ரோன் சி3 காரை வாங்க இது தான் சரியான டைம்!

சிட்ரோன் நிறுவனம் இந்தியாவிற்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் நிலையில் தனது சி3 மற்றும் சி3 ஏர்கிராஸ் ஆகிய கார்களின் விலையை ரூபாய் ஒரு லட்சம் வரை குறைத்துள்ளது. மேலும் இந்த காரின் ப்ளூ எடிஷன் கார்களும் அறிமுகமாகியுள்ளன. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

சிட்ரோன்நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முதல் முறையாக இந்தியாவில் தனது கார்களை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் மூன்றாவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சிட்ரோன் நிறுவனம் தனது என்ட்ரி லெவல் சி3 காம்பேக்ட் ஹேட்ச்பேக் காருக்கும் சி3 ஏர்கிராஸ் என்ற மிட் சைஸ் எஸ்யூவி காருக்கு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. மேலும் தனது சி3 மற்றும் இசி 3 ஆகிய கார்களில் ப்ளூ எடிசன்களையும் லிமிடெட் எடிஷன் காராக அறிமுக அறிமுகப்படுத்தியுள்ளது.

Citroen C3 Aircross Price Drop

தற்போது சிட்ரோன் சி3 கார் ரூபாய்5.99 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது ரூபாய்17,000 விலை குறைக்கப்பட்டுள்ளது. இதுவே சி3 ஏர்கிராஸ் காரை பொருத்தவரை ரூபாய் ஒரு லட்சம் வரை விலை குறைக்கப்பட்டு ரூபாய்8.99 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகமாகி உள்ளது. இந்த விலை குறைப்பு என்பது குறுகிய கால விலை குறைவாக இருக்கிறது. ஏப்ரல் மாதம் முழுவதும் கார் வாங்குபவர்கள் இந்த குறைந்த விலையில் காரை வாங்கலாம்.

இந்த விலை தள்ளுபடி என்பது வேரியண்ட் வாரியாக மாறுபடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சிட்ரோன் நிறுவனம் இதுவரை சரியான விலை பட்டியலை வெளியிடவில்லை. ஒவ்வொரு வேரியன்ட்டின் விலை என்ன என்ற அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் போய் ஒரு லட்சம் வரை தள்ளுபடி என்ற தகவல் மட்டும் தற்போது வெளியாகி உள்ளது. இந்த தள்ளுபடி என்பது புதிய வாடிக்கையாளர்களுக்காக இருக்கிறது.

Citroen C3 Aircross Price Drop

ஏற்கனவே சிட்ரோன் கார்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு இந்த மூன்றாம் ஆண்டு கொண்டாட்டத்தை கொண்டாடும் வகையில் அந்த வாடிக்கையாளர்கள் தங்கள் கார்களை இலவசமாக கார் சர்வீஸ் செய்து கொள்ளலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் ஏற்கனவே கார் வாங்கிய வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு இந்த காரை பரிந்துரை செய்தால் அவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் வரை ஒவ்வொரு பரிந்துரைக்கும் வவுச்சர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையிலும் அதே நேரம் நம்பகமான வாடிக்கையாளர்களை பெறும் வகையிலும்., சிட்ரோன் நிறுவனம் இந்த தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் சிட்ரோன் நிறுவனம் இந்தியா முழுவதும் தனது டீலர்ஷிப் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 200 இடங்களில் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் பாயிண்ட்டுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Citroen C3 Aircross Price Drop

இது மட்டுமல்லாமல் இந்த மூன்றாம் ஆண்டு கொண்டாட்டத்திற்காக சிட்ரோன் சி3 மற்றும் இசி 3 ஆகிய கார்களில் ப்ளூ எடிசன் கார்களை லிமிடெட் எடிசனாக அப்டேட் செய்துள்ளது 500 முதல் 600 கார்கள் மட்டுமே இந்த ப்ளூ எடிசன் கார்களாக விற்பனைக்கு வர உள்ளன. இந்த கார்களில் ஏற்கனவே உள்ள மாடலில் உள்ள காஸ்மெட்டிக் மட்டும் அப்டேட் செய்யப்படுகிறது. மற்ற அம்சங்கள் எல்லாம் அதேபோலவே இருக்கும்.

முக்கியமாக இந்த ப்ளூ எடிஷன் காரின் நிறம் காஸ்மோ ப்ளூ நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் உட்புறமும் இந்த கலர் நீட்டிக்கப்பட்டுள்ளது. காரின் உள்ளே உள்ள நெக் ரெஸ்ட், சீட் பெல்ட் குஷன், இலுமினேட்டர் கப் ஹோல்டர், ஏர் பியூரிஃபையர், சீட் கவர்கள், ஸ்டில் பிளேட்டுகள் ஆகிய இடங்களிலும் நீல நிறம் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை எந்தவிதமான மெக்கானிக்கல் மாற்றமும் இல்லை 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் தான் சி3 காரில் தொடர்கிறது. சி3 ஏர் கிராஸ் காரை பொருத்தவரை முற்றிலுமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ப்ளூ எடிஷன் காருக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் வாகன தயாரிப்பை செய்து வாகனங்களை விற்பனை செய்து வருவது இந்திய மக்கள் மத்தியில் அந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்து வருகிறது. வரிசையாக தரமான கார்களை இறக்கி வருவதால் விரைவில் நிறுவனத்தின் தயாரிப்புகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 6, 2024, 7:00 [IST]
English summary
Citroen c3 and aircross price drop 8 99 lakh lakh price drop
மேலும்... #சிட்ரோன் #citroen
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X