6 லட்ச ரூபாயில் ஸ்டைலான கார்... புக்கிங் துவங்கியாச்சு!! மேட்-இன்-தமிழ்நாடு

சிட்ரோன் (Citroen) நிறுவனம் அதன் சி3 (C3) காரில் புதிய ஆட்டோமேட்டிக் (Automatic) கியர்பாக்ஸ் ஆப்ஷனை சமீபத்தில்தான் அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் விலை குறைவான சிட்ரோன் காராக விளங்கும் சி3 -இல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் கஸ்டமர்களை ஈர்க்கும் என்கிற எதிர்பார்ப்பில் இந்த காரை சிட்ரோன் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த நிலையில், சி3 ஆட்டோமேட்டிக் காருக்கான முன்பதிவுகளை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக சிட்ரோன் துவங்கியுள்ளது. புதிய சி3 ஆட்டோமேட்டிக் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரெஞ்சு கார் நிறுவனமான சிட்ரோன் இந்திய கார்கள் மார்க்கெட்டில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடந்த சில வருடங்களாக போராடி வருகிறது. அதன் முயற்சியாக, கடந்த 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் தனது 2வது காராக சி3 என்கிற ஹேட்ச்பேக் காரை சிட்ரோன் அறிமுகம் செய்தது.

citroen c3 automatic bookings open

சி3 கார் அறிமுகம் செய்யப்பட்டு 2 வருடங்கள் ஆன நிலையில், சமீபத்தில் சிட்ரோன் சி3 கார் அப்டேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சி3 காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.6.16 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2024 சிட்ரோன் சி3 காரில் மிக முக்கியமான அம்சமாக 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சி3 ஆட்டோமேட்டிக் காரின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், சி3 ஆட்டோமேட்டிக் காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன. விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் 2024 சி3 காரை சிட்ரோன் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கம் அல்லது லே மேசன் சிட்ரோன் டீலர்ஷிப்களில் முன்பதிவு செய்யலாம்.

citroen c3 automatic bookings open

முன்பதிவு செய்தவர்களுக்கு கார் டெலிவிரி கொடுக்கும் பணிகள் வருகிற செப்டம்பர் மாதத்தில் இருந்து துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செயல்திறன்மிக்க புதிய 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமல்லாமல், 2024 சிட்ரோன் சி3 காரில் சில அதிநவீன அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதனால், 2024 சிட்ரோன் சி3 காரை ஓட்டுபவர்களுக்கு மேம்பட்ட டிரைவிங் அனுபவம் கிடைக்கும் என சிட்ரோன் தெரிவிக்கிறது.

2024 சி3 காரில் பாதுகாப்பு அம்சங்களாக 6 ஏர்பேக்குகள், ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான ஹேங்கர் மற்றும் 3-பாயிண்ட் சீட் பெல்ட் உள்ளிட்டவை அடங்குகின்றன. புதிய சி3 காரில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவற்றின்படி, காரின் கதவுகளில் பவர் விண்டோவிற்கான ஸ்விட்ச்கள் வழங்கப்பட்டுள்ளன. டிரைவருக்கு அருகே அமரும் முன் இருக்கை பயணி பிடித்து கொள்வதற்காக புதியதாக கைப்பிடி கொடுக்கப்பட்டுள்ளது.

citroen c3 automatic bookings open

பின்பக்கத்தை பார்க்க காருக்கு வெளியே வழங்கப்படும் பக்கவாட்டு கண்ணாடிகள் எளிமையாக பொத்தானின் மூலம் மடக்கக்கூடியதாக மாற்றப்பட்டுள்ளன. இவற்றுடன், எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் ஆட்டோமேட்டிக் ஏசி உள்ளிட்டவையும் 2024 சி3 காரில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், காருடன் கூடுதல் தொகையை செலுத்தி மை சிட்ரோன் கனெக்ட்டிவிட்டி பேக் -ஐயும் பெறலாம். இந்த பேக் மூலமாக 40 விதமான கனெக்ட்டிவிட்டி வசதிகள் கிடைக்கும்.

மற்றப்படி, சிட்ரோன் சி3 காரில் வழங்கப்படும் 1.2 லிட்டர் ஜென்ரேஷன் 3 ப்யூர்டெக் பெட்ரோல் என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. புதிய 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 110 பிஎஸ் மற்றும் 205 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறைந்த விலையில் கிடைக்ககூடிய ஸ்டைலான தோற்றம் கொண்ட காராக இருந்தாலும், சிட்ரோன் சி3 காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படாதது ஒரு சிறிய குறையாகவே இருந்தது. தற்போது அந்த குறையும் நீங்கி உள்ளது. ஆதலால், சிட்ரோன் சி3 காரின் விற்பனை இனி மேலும் அதிகரிக்கும். சி3 ஆட்டோமேட்டிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் எந்த அளவில் நிர்ணயிக்கப்பட உள்ளன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, August 23, 2024, 8:00 [IST]
English summary
Citroen c3 automatic car bookings open in india check all details here
மேலும்... #citroen #automatic car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X