6 மாசத்துல வெறும் 4 கார் தான் வித்திருக்குது! இவ்வளவு நல்ல காரா இருந்தும் மக்கள் ஏன் வாங்கல தெரியுமா?

சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் சி5 ஏர் கிராஸ் என்ற காரின் சகாப்தம் முடிவடைய போவதற்கான அறிகுறிகள் அனைத்தும் தென்பட துவங்கி விட்டன. இந்த கார்களின் விற்பனை மிக மோசமான அளவுக்கு சரிவை சந்தித்து வருகிறது. இந்த காரின் விற்பனை சரிவிற்கு இதன் விலை ஒரு பக்கம் என்றாலும், எதிர்பார்த்த அளவுக்கு கூட இந்த கார் விற்பனையாக வில்லை என்பது இன்னொரு பட்சமாக இருக்கிறது. இப்படியாக இந்த காரை மே மாதம் யாருமே வாங்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் தனது காலடி தடத்தை எடுத்து வைத்து சிறப்பான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வரும் சி5 ஏர் கிராஸ் கார் எஸ்யூவி கார் செக்மெண்டிலேயே மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த காரின் வடிவமைப்பு முதல் ஏகப்பட்ட அம்சங்கள் சிறப்பாக இருந்தன. இதன் ரிவ்யூ எல்லாம் பாசிட்டிவாகவே இருந்தது.

citroen c5 aircross sales

இருந்தாலும் இந்த காரின் விலை காரணமாக பலர் இந்த காரை வாங்காமல் இருந்து வந்தவர்கள். இருந்தாலும் சிட்ரோன் நிறுவனத்திற்கு அதிக விலை இருப்பதால் காரின் விற்பனை ஓஹோ என்று இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த நம்பிக்கையை தவிடு பொடியாக்கும் வகையில் அந்நிறுவனத்தின் விற்பனை பட்டியலில் இந்த காரின் இடம் மிக மோசமாக உள்ளது.

கடந்த மே மாதம் முழுவதும் இந்த சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் காரை ஒரு வாடிக்கையாளர் கூட வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏதோ கடந்த மே மாதம் தான் இந்த நிலைமை என்ன வேண்டாம் கடந்த ஆறு மாதங்களில் வெறும் நான்கு கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன.

citroen c5 aircross sales

கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டு கார்களும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு காரும் விற்பனையானது. அதன் பிறகு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் ஒரு கார் விற்பனையாகியுள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் வரும் நான்கு கார்களை மட்டுமே விற்பனை செய்து இந்த காரின் விற்பனை மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. ஆனால் இந்த காரில் உள்ள அம்சங்கள் மற்றும் வசதிகளை பற்றி பார்த்தால் நிச்சயம் பலருக்கு இந்த காரை வாங்க ஆசை வரும். இந்த காரில் 1997 சிசி 4சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 177பிஎஸ் பவரையும், 400என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

citroen c5 aircross sales

இந்த இன்ஜின் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 52.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் இந்திய சாலைகளில் 17.5 கிலோ மீட்டர் அளவுக்கு மைலேஜ் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 4500மிமீ நீளமும், 1969 மிமீ அகலமும், 1710மிமீ உயரமும், 2730மிமீ வீல் பேஸூம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி டே டைம் ரன்னிங் லைட், 3டி எல்இடி பின்பக்க லைட்டுகள்,ஓஆர்விஎம் பகுதியில் எல்இடி இண்டிகேட்டர் என லைட்டிங் செட்டப் இருக்கிறது. இந்த காரின் உட்புறம் 31.24செ.மீ கொண்ட டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக 25.4செ.மீ கொண்ட கெப்பாசிட்டிவ் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் செய்யும் வசதியும் உள்ளது.

இந்த காரின் டிரைவர் சீட்டை எலெக்ட்ரிகலி அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரின் பின்பக்கம் கேட் என்பது கையால் திறக்கப்பட தேவையில்லை. சைகை மொழியிலேயே தெரிந்துகொள்ள ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் மொத்தம் 580 லிட்டர் பூட் ஸ்பேஸ் வசதி இருக்கிறது. பின்பக்க சீட்டுகளை மடித்துவிட்டால் 720 லிட்டர் வரை பூட் வசதி கிடைக்கும்.

இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை ப்ளைன்ட் ஸ்பாட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம், ஆறு ஏர் பேக்குகள், காபி பிரேக் அலர்ட், ஹில் டிசென்ட் கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், டிராக்சன் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், முன் பக்கமும் பின்பக்கமும், பார்க்கிங் சென்சார் மற்றும் கேமரா உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிட்ரோன் நிறுவனத்தின் சி5 ஏர் கிராஸ் கார் நல்ல விமர்சனங்களை பெற்றாலும், இதன் விலை ரூபாய் 37 லட்சம் என்ற விலையில் விற்பனையாவதால் இந்திய மார்க்கெட்டில் இந்த காரை வாங்குவதற்கான வாடிக்கையாளர்கள் மிக குறைவாக இருக்கிறார்கள். இதன் காரணமாக இதன் விற்பனை மிக மந்தமாக இருக்கிறது. விரைவில் இந்த கார் இந்தியாவில் விற்பனை நிறுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 12, 2024, 12:08 [IST]
English summary
Citroen c5 aircross 0 units sold in may 2024 know full details
மேலும்... #citroen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X