இது செம சூப்பரான கார் ஆனா வாங்க ஆளே இல்லை! ஒரு காரை மட்டுமே வித்துருக்காங்க!

வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் ஒவ்வொரு மாதமும் தங்கள் வாகனங்கள் எவ்வளவு எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது என்ற விபரங்களை ஒவ்வொரு மாத துவக்கத்திலும் முந்தைய மாத நிலவரங்களை வெளியிடும். இதில் பல நிறுவனங்கள் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் மாறி மாறி சந்தித்து வரும். ஆனால் சிட்ரோன் நிறுவனத்தின் கார் ஒன்று மிக மோசமான விற்பனையை சந்தித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிறுவனம் சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் ஆலையை அமைத்து வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்திடம் உள்ள சிட்ரோன் சி 5 ஏர்கிராஸ் என்ற கார் மார்க்கெட்டில் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த காரில் ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கின்றன. ரிவ்யூ ரீதியாகவும் இந்த கார் நல்ல விமர்சனங்களையும் பெற்றது. இருந்தாலும் இந்த காரை வாங்க பலர் தயாராக இல்லை.

citroen c5 aircross

கடந்த ஆறு மாதமாகவே இந்த காரின் விற்பனை மிக மோசமான நிலையில் இருக்கிறது. எந்த மாதத்திலும் ஐந்து கார்களுக்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்பனையாகவில்லை. பல மாதங்கள் ஒரு கார் கூட விற்பனையாக சூழ்நிலை கூட இருந்துள்ளது. இதன்படி கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் வெறும் ஐந்து கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன. டிசம்பர் மாதம் இரண்டு கார்கள் விற்பனையாகி இருந்தன.

2024ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு வாகனம் மட்டுமே விற்பனையாக இருந்தது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஒரு வாகனம் கூட விற்பனையாகவில்லை. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு வாகன மட்டுமே விற்பனையாகியுள்ளது. இந்த வாகனம் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்த பின் இதுவரை மொத்தமே 404 வாகனங்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனையாகி உள்ளன.

citroen c5 aircross

இந்த காரின் மிக மோசமான விற்பனைக்கு இந்த காரின் விலை தான் முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. இந்த காரை பொருத்தவரை ரூபாய் 36.91 லட்சம் முதல் ரூபாய் 37.67 லட்சம் என்ற விலையில் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இந்த விலைக்கு வாங்கும் அளவிற்கு இந்தியாவில் இருக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிக குறைவு தான். அவர்கள் இந்த காரை தேர்வு செய்யும் வாய்ப்பும் குறைவுதான்.

இந்தக் காரில் அதிகமான பிராக்டிகல் அம்சங்கள் நிறைந்த காராக இருக்கிறது. அதிக ஸ்டோரேஜ் வசதி இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த செக்மெண்டில் உள்ள வேறு எந்த காரிலும் இல்லாத அளவுக்கு இந்த காரில் பிராக்டிகல் அம்சங்கள் இருக்கிறது. அடுத்ததாக பூட் வசதியை பொருத்தவரை 580 லிட்டர் முதல் 720 லிட்டர் வரையிலான பூட் வசதி இருக்கிறது. இதுவும் மிகப்பெரிய இட வசதி ஆகும்.

citroen c5 aircross

அதேபோல இந்த காரின் ரைடு குவாலிட்டியும் மிக சிறப்பாக இருக்கும். 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும்போதும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் ஸ்மூத்தாக கார் பயணம் செய்யும். காரின் உள்ளே இருப்பவர்களுக்கு எந்த விதமான அதிர்வு இருக்காது. அந்த அளவிற்கு இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கார் மிக சிறந்த வடிவமைப்பு கொண்ட காராக இருக்கிறது.

அதே நேரம் இந்த காரில் சில பிரச்சினைகளும் இருக்கிறது. முக்கியமாக இன்ஜினிலிருந்து வந்து வரும் சத்தம் அதிகமாக இருக்கிறது. இந்த கார் அதிக வேகம் செல்ல செல்ல இன்ஜினில் இருந்து அதிகமாக சத்தம் வருகிறது. இந்த சத்தம் காரில் உள்ள பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் இருக்கிறது. இது ஒரு பிரச்சினையாக பார்க்கலாம்.

அடுத்ததாக குறைந்த வேக ரைட் செல்லும்போது காரில் உள்ளே இருப்பவர்களுக்கு சிறந்த அனுபவம் கிடைக்கவில்லை. பள்ளமேடுகளில் கார் குறைந்த வேகத்தில் பயணிக்கும் போது காருக்குள்ளே இருப்பவர்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. இதுவும் ஒரு பிரச்சனையை தான் அடுத்து வேகமாக கார் பயணிக்கும் போது கார் திரும்புவதால் பாடி ரோல் அதிகமாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காரில் உள்ள சிறப்பம்சங்களை பொருத்தவரை மற்ற காரை விட மிக அதிகமான சிறப்பம்சங்கள் இருக்கிறது. இந்த காரில் உள்ள பிரச்சனைகளை பொருத்தவரை மற்ற அனைத்து கார்களிலும் இருக்கும் பெரும்பாலான பிரச்சினை தான் இந்த காரிலும் இருக்கிறது. இதனால் இதன் பிரச்சனைகளை பற்றி பெரிதாக பேச வேண்டிய அவசியம் இல்லை. இதன் விற்பனை வீழ்ச்சிக்கு விலை மட்டுமே காரணமாக இருக்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 15, 2024, 17:41 [IST]
English summary
Citroen c5 aircross april 2024 sales report
மேலும்... #சிட்ரோன் #citroen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X