வெறும் 6 பேர் மட்டுமே வாங்கிய இந்த காரின் விற்பனையை ரகசியமாக நிறுத்திய நிறுவனம்!ஏன் விக்கல தெரியுமா?

சிட்ரோன் நிறுவனம் தனது சி5 ஏர்கிராஸ் காரின் பேஸ் வேரியண்ட்டை யாருக்கும் தெரியாமல் இரகசியமாக தனது அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் இருந்து நீக்கி உள்ளது. இதன் மூலமாக தற்போது விற்பனையில் இல்லை என தெரிய வருகிறது. தற்போது டாப் வேரியன்ட் கார் மட்டுமே விற்பனையாகி வருகிறது. இப்படியாக இந்த பேஸ் வேரியன்ட் காரின் விற்பனையை நிறுவனம் ஏன் நிறுத்தியது என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.

சிட்ரோனின் நிறுவனம் இந்தியாவில் காலடித்தடத்தை எடுத்து வைத்து அறிமுகப்படுத்திய முதல் கார் சி5 ஏர்கிராஸ் என்ற காரணத்தினால் இந்த கார் பெரிய சைஸ் கொண்ட எஸ்யூவி காராகவும் இந்த கார் அதிக அம்சங்கள் மற்றும் அதிக தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த காராக இருக்கிறது. இதனால் இந்த கார் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.

citroen c5 aircross

கடந்த 2021ம் ஆண்டு தான் இந்த கார் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த காரின் விற்பனை மந்தமாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் தான் இந்த காரின் விலையை ரூபாய் 3 லட்சம் வரை நிறுவனம் உயர்த்தியது. இந்நிலையில் இந்த காரின் பேஸ் வேரியண்ட்டை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் இருந்து நீக்கி உள்ளது.

இதிலிருந்து அந்நிறுவனம் தனது அந்த காரின் பேஸ் வேரியன்டை விற்பனையிலிருந்தும் நீக்கி உள்ளது என நாம் தெரிந்து கொள்ளலாம். தற்போது இந்த கார் டாப் வேரியன்ட் மட்டுமே விற்பனையாகி வருகிறது. இது ரூபாய் 39.99 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரின் விலை அதிகம் என்ற காரணத்திற்காக இந்த காரின் விற்பனையும் குறைவாகவே இருக்கிறது.

citroen c5 aircross

இந்த காரின் விற்பனையை அதிகரிக்க நிறுவனம் இந்த காருக்கு ரூபாய் 1.75 லட்சம் அளவுக்கு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இது 2023ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மாடல் கார்களுக்கு மட்டுமான தள்ளுபடி ஆகும். இவ்வளவு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டாலும் இந்த காரின் விற்பனை மிக மந்தமாகவே இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் வெறும் 6 கார்கள் மட்டுமே விற்பனை ஆகி உள்ளன.

சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் காரை பொறுத்தவரை 1977 சிசி 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 177 பிஎஸ் பவரையும் 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 52.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் ஒரு லிட்டருக்கு 17.5 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

citroen c5 aircross

இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 4500 மிமீ நீளமும், 1969 மிமீ அகலமும், 1710 மீமி உயரமும், 2730 மிமீ வீல் பேஸூம் கொண்டதாக இருக்கிறது. இந்த காரில் எல்இடி புரொஜெக்டர் ஹெட் லைட்டுகள், எல்இடி டிஆர்எல் 3டி எல்இடி பின்பக்க லைட்டுகள், எல்இடி இண்டிகேட்டர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த காருக்குள்ளே 31.24 சென்டிமீட்டர் கொண்ட டிஎப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும், 25.4 சென்டிமீட்டர் அளவு கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மண்ட் சிஸ்டமும் வழங்கப்படுகிறது. இது ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவை சப்போர்ட் செய்யும் அம்சம் கொண்டதாக இருக்கிறது. இந்த காரின் உட்பக்கத்தை பார்க்கும்போது நாம் இது காராக பார்க்க முடியாத ஒரு கப்பலாக பார்க்கலாம் அந்த அளவுக்கு இட வசதி இருக்கிறது.

இந்த காரில் இருக்கும் முக்கியமான அம்சமே இதில் உள்ள பூட் வசதி தான் இந்த காரில் 580 லிட்டர் பூட் வசதி இருக்கிறது. பின்பக்க சீட்டை மடக்கிவிட்டால் 720 லிட்டர் அளவிற்கு பூட் வசதியை விரிவுபடுத்திக்கொள்ள முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காரில் உள்ள அம்சங்கள் எல்லாம் சிறப்பான அம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன. முக்கியமாக டூயல் சவுண்ட் எலெக்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் டெம்பரேச்சர் கண்ட்ரோல், கார்பன் ஏர் ஃபில்டர் கொண்ட பின்பக்க ஏசி வென்ட்கள் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிட்ரோன் நிறுவனம் சிறப்பான காராக வடிவமைத்து இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தினாலும், இந்த காரின் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் பலர் அந்த காரை வாங்க யோசித்து வருகிறார்கள். அதற்கு பதிலாக போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகள் மீது மக்களின் கவனம் செல்கிறது. இதனால் இந்த காரின் விற்பனை குறைவாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 21, 2024, 17:47 [IST]
English summary
Citroen c5 aircross base variant delisted low sales last 3 months
மேலும்... #citroen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X