ஒரு மாசம் ஃபுல்லா 1 கார் மட்டுமே வித்திருக்குது! இந்த காரை ஏன் மக்கள் வாங்கல தெரியுமா?

சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் தனது வாகன விற்பனையை துவங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை விற்பனையில் பெரிய அளவில் எந்த புரட்சியையும் செய்யாமல் மிக மோசமான விற்பனையை சந்தித்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் இந்நிறுவனம் பசால்ட் என்ற கூபே எஸ்யூவி காரை அறிமுகப்படுத்திய நிலையில், இந்த கார் ஓரளவுக்கு விற்பனையை அதிகரித்துள்ளது என்றாலும், இந்நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட கார் ஷோரூம்களில் விற்பனையாகாமல் தேக்கமடைந்து கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் அறிமுகமானது முதல் தரமான கார்களை இந்தியாவில் கொண்டு வந்தாலும் இதன் விற்பனை பெரிய அளவில் இல்லை விமர்சன ரீதியாக நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாம் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தாலும், மக்களின் நிறுவனத்தின் கார்களை வாங்க தயாராக இல்லை. இதனால் இந்நிறுவனத்தின் விற்பனை மோசமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் சிட்ரோன் நிறுவனம் பசால்ட் என்ற காரை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது.

citroen c5 aircross sales august 2024

தற்போது சிட்ரோன் பசால்ட் காரின் விற்பனை ஓரளவு மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள நிலையில் இந்த காரை ஏகப்பட்ட மக்கள் வாங்க காத்திருக்கிறார்கள். தற்போது இதனால் சிட்ரோன் நிறுவனத்தின் விற்பனை ஓரளவுக்கு அதிகரித்து இருந்தாலும், இந்நிறுவனத்தின் குறிப்பிட்ட காரின் விற்பனை மிக மோசமாகவே இருந்து வருகிறது. சிட்ரோன் நிறுவனம் விற்பனை செய்து வரும் சி5 ஏர் கிராஸ் என்ற கார் தான் அது.

இந்த கார் மிக மோசமான விற்பனையை கடந்த மாதம் மட்டுமல்ல கடந்த பல மாதங்களாக மோசமான விற்பனை தான் பெற்று வருகிறது. கடந்த ஆறு மாதத்தில் வெறும் இரண்டு கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு காரும் அதற்கு முன்னர் ஏப்ரல் மாதம் ஒரு கார் மட்டுமே விற்பனையாகி உள்ளது.

citroen c5 aircross sales august 2024

கடந்த மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஒரு கார் கூட விற்பனையாகாது. மிக மோசமான நிலை தான் நிலவி வந்தது. மார்ச் மாதம் கூட இந்த கார் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கார் விற்பனையாகவில்லை என்பதால் இது ஒரு மோசமான கார் அல்லது அதிக அம்சங்கள் இல்லாத கார் என நினைத்து விட வேண்டாம். இந்த காரில் ஏகப்பட்ட விஷயங்கள் சிறப்பாக இருக்கிறது.

சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் காரை பொருத்தவரை 1997 சிசி 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 127 பிஎஸ் பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 52.5 லிட்டர் அளவுக்கு பெட்ரோல் டேங்க் வசதி வழங்கப்பட்டுள்ளது.

citroen c5 aircross sales august 2024

இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 4500மிமீ நீளமும், 1969மிமீ அகலமும், 1710மிமீ உயரமும் கொண்டதாக இருக்கிறது. 2730மிமீ வீல்பேஸ் கொண்ட பெரிய காராக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ள அம்சங்களை பொருத்தவரை எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட் , எல்இடி டிஆர்எல், 3டி எல்இடி பின்பக்க லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. காரின் உட்பகுதியில் 31.27சென்டிமீட்டர் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. 25.4சென்டிமீட்டர் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டமும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை 6 ஏர் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக ப்ளைன்ட் ஸ்பாட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ,காபி பிரேக் அலர்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம், ஹில் டிசென்ட் கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோக ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ரிவர்ஸ் பார்க்கிங் மற்றும் முன்பக்க பார்க்கிங்கான சென்சார்கள், 3 பாயிண்ட் கொண்ட ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் மவுண்ட் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன. முக்கியமாக இந்த காரின் மைலேஜ் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இது லிட்டருக்கு 17.5 கிலோமீட்டர் மைலேஜ் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிட்ரோன் நிறுவனத்தின் சி5 ஏர் கிராஸ் கார் விமர்சன ரீதியாக நல்ல விமர்சனத்தை பெற்ற கார் தான். இந்த காரின் அம்சங்கள் போட்டி கார்களை விட சிறப்பாக இருக்கிறது என்றாலும் காரின் விலை அதிகமாக இருப்பதால் இந்த காரை வாங்க தயக்கம் காட்டி வருகிறார்கள். இந்த காரின் விலையில் மற்ற நிறுவனங்களின் கார்கள் பிரபலமான கார்களாக இருப்பதால் அதை வாங்குகிறார்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 5, 2024, 12:29 [IST]
English summary
Citroen c5 aircross sales august 2024 only 1 unit sold
மேலும்... #citroen #state bank of india #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X