3 மாசமா ஒருத்தரு கூட இந்த காரை வாங்கல! ஷோரூம்ல பாழடைஞ்சு போய் நிக்குது! இது தான் உண்மையான காரணம்!
ஒவ்வொரு மாதமும் வாகனம் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கார்களை கடந்த மாதத்தை விட அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்ய வேண்டும் என பல்வேறு விதமான யுக்திகளை பின்பற்றுவார்கள். இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை எண்ணிக்கை என்பது அதிகரிக்கும். ஆனால் சிட்ரோன் நிறுவனத்தின் குறிப்பிட்ட ஒரு காரை எந்த ஒரு வாடிக்கையாளரும் நீண்ட நாட்களாக வாங்காமல் இருக்கிறார்கள். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சிட்ரோன் நிறுவனம் சி5 ஏர்கிராஸ் என்ற எஸ்யூவி காரை விற்பனை செய்து வருகிறது. இந்த காரை கடந்த ஜூலை மாதம் யாருமே வாங்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஜூலை மாதம் மட்டுமல்ல கடந்த ஆறு மாதத்தில் இந்த காரை வெறும் ஒரு நபர் மட்டுமே வாங்கி உள்ளார். சிட்ரோன் நிறுவனமும் மிக குறைவான வாகனங்களை கடந்த ஜூலை மாதம் விற்பனை செய்துள்ளது.

சிட்ரோன் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் முழுவதும் மொத்தம் 335 கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் சிறப்பான எண்ணிக்கையில் வாகனங்களை விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிக குறைவான வாடிக்கையாளர்களே இந்த நிறுவனத்தின் கார்களை வாங்கி வருகிறார்கள். குறிப்பாக இந்த நிறுவனத்தின் சி5 ஏர்கிராஸ் காரை கடந்த மாதம் ஒருவர் கூட வாங்கவில்லை.
இதில் ஆச்சரியமான விஷயம் கடந்த மூன்று மாதமாக இந்த காரை யாருமே வாங்காமல் தொடர்ந்து 0 என்ற விற்பனையில் தான் இந்த கார் விற்பனையாகி வருகிறது. கடைசியாக இந்த காரை கடந்த ஏப்ரல் மாதம் ஒரே ஒருவர் வாங்கி இருந்தார். கடந்த ஆறு மாதங்களாக ஒரு காரை மட்டுமே இந்நிறுவனத்தில் விற்பனை செய்ய முடிந்தது. அதாவது கடந்த பிப்ரவரி முதல் ஜூலை வரை வெறும் ஒரு கார் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

சிட்ரோன் நிறுவனத்தின் சி5 ஏர் கிராஸ் காரை பொருத்தவரை பல்வேறு விதமான சொகுசு அம்சங்கள் நிறைந்த காராக இருக்கிறது. இந்த காரின் உட்பக்கம் 10 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 360 டிகிரி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பேனராமிக் சன் ரூஃப், 12.3 இன்ச் கொண்ட டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, டூயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் இந்த காரில் ஒயர்லெஸ் போன் சார்ஜர் கண்ட்ரோல் பவர்டெயில் கேட், ரெயின் சென்சிங் வைப்பர் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்த காரில் எக்கோ மற்றும் ஸ்போர்ட் ஆகிய இரண்டு டிரைவ் மோடுகளும் பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரம் இந்த காரில் பாதுகாப்பு அம்சத்திற்காக டிராக்ஷன் கண்ட்ரோல் மோட் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்டாண்டர்ட், ஸ்னோ மற்றும் அனைத்து விதமான சாலைகளிலும் பயன்படுத்தும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் பாதுகாப்பு அம்சத்திற்காக எலெக்ட்ரானிக்ஸ் ஸ்டெபிலிட்டி புரோகிராம், 6 ஏர் பேக்குகள், டிரைவர் தூங்குவதை கண்காணிக்கும் கருவி, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் அசிஸ்ட் பார்க், அசிஸ்ட் ரியர் பார்க்கிங் கேமரா, உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.
இந்த சிட்ரோன் காரை பொறுத்தவரை இந்திய மார்க்கெட்டில் ரூபாய் 36.91 லட்சம் முதல் ரூ 37.67 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இவ்வளவு அதிக விலை இருப்பதால் இந்த காரை பலர் வாங்க விரும்புவதில்லை. இந்த பட்ஜெட்டிற்கு அவர்கள் இதைவிட மற்ற நிறுவனங்களின் வேறு கார்களை வாங்க விரும்புகிறார்கள். மேலும் இந்த விலை மதிப்பில் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிக குறைவுதான்.
இந்த காரில் உள்ள இன்ஜினை பொறுத்தவரை 2 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 177 பிஎஸ் பவரையும் 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கார் சிறப்பான பெர்ஃபார்மென்ஸை வெளிப்படுத்தும் காராக இருக்கிறது. இந்த காரின் விலை தான் விற்பனை இல்லாததற்கு முக்கியமான காரணம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிட்ரோன் நிறுவனம் இந்திய மக்கள் மனதில் முதலில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் குறைந்த விலையில் தரமான கார்களை அறிமுகப்படுத்த வேண்டும். இப்படியான கார்களை தான் இந்தியர்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதன்பிறகு அந்நிறுவனம் ப்ரீமியம் கார்களை கொண்டு வரும்போது நிச்சயம் விற்பனை அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications









