எல்லாமே சூப்பரா இருக்கு ஆனா யாருமே இந்த காரை வாங்கல! இந்த விஷயம் தான் பெரிய பிரச்சனையே!
சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் ஆலையை அமைத்து வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வந்தாலும், இந்நிறுவனம் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையை பெற முடியவில்லை. பல்வேறு காரணங்களால் மக்கள் பலர் சிட்ரோன் நிறுவனத்தின் கார்களை வாங்க தயக்கம் காட்டி வருகிறார்கள். அதனால் இந்நிறுவனத்தின் சி5 ஏர் கிராஸ் என்ற காரை கடந்த ஜூன் மாதமும் யாரும் வாங்காத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிறுவனத்தின் மற்ற கார்களின் விற்பனை எப்படி இருக்கிறது உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் காணலாம் வாருங்கள்.
சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைத்து வாகனங்களை தயார் செய்து வருகிறது. இந்நிறுவனம் கடந்த ஜூன் மாத விற்பனை விபரங்களையும் கடந்த 6 மாதம் இந்நிறுவனம் எவ்வளவு வாகனங்களை விற்பனை செய்துள்ளது என்ற விவரங்களையும் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி அந்நிறுவனத்தின் பிளாஸ்டிக் காரான சி5 ஏர்கிராஸ் கார் கடந்த ஆறு மாதங்களில் வெறும் 2 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. கடந்த ஜூன் மாதம் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை.

கடந்த ஜூன் மாதம் சிட்ரோன் நிறுவனத்தின் சி3 ஏர்கிராஸ் காரை பொறுத்தவரை 136 கார்களும், இசி3 காரை பொருத்தவரை 126 கார்களும், சி3 காரை பொருத்தவரை 77 கார்களும் விற்பனையாகி உள்ளன. சி5 ஏர் கிராஸ் கார் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை. மொத்தம் அந்நிறுவனம் 339 கார்களை கடந்த ஜூன் மாதம் விற்பனை செய்துள்ளது.
இந்நிறுவனம் கடந்த மே மாதம் மொத்தம் 515 கார்களை விற்பனை செய்திருந்தது. அப்பொழுது சி3 மற்றும் இசி3 ஆகிய கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாக இருந்தன. தற்போது அந்த கார்களின் விற்பனை குறைந்துள்ளது. இந்நிறுவனம் ஏப்ரல் மாதம் 404 கார்களையும், மார்ச் மாதம் 1,006 கார்களையும், பிப்ரவரி மாதம் 421 கார்களையும், ஜனவரி மாதம் 650 கார்களையும் விற்பனை செய்துள்ளது.

சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் வாகனங்களை விற்பனை செய்வதில் தள்ளாட்டத்தை சந்தித்து வருகிறது. இந்நிறுவனம் கடந்த 6 மாதங்களில் சில மாதங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. சில மாதங்கள் விற்பனை குறைந்துள்ளது. கடந்த 6 மாதத்தில் இருப்பதிலேயே குறைவாக கடந்த ஜூன் மாதம் தான் 339 கார்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் சிட்ரோன் ஏர் கிராஸ் காரை யாருமே வாங்கவில்லை என்பது ஆச்சரியமான விஷயம்.
சிட்ரோன் காரைப் பொறுத்தவரை குளோபல் என்கேப் சோதனையில் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்ற காராக இருக்கிறது. இந்தியாவில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த காருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்ற பேச்சு இருந்தாலும், இந்த கார் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இந்த காரின் விலை தான். இந்த கார் ரூபாய் 37.67 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1997சிசி கொண்ட டிடபிள்யூ10எஃப்சி 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 127பிஎஸ் பவரையும், 400என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 52.5லிட்டர் அளவுக்கு டீசல் நிரப்பும் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரை பயன்படுத்துவதன் மூலம் 17.5கிலோமீட்டர் அளவுக்கு மைலேஜ் பெறலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த காரில் உள்ள அம்சங்களை பொருத்தவரை எல்இடி விஷன் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் எல்இடி டிஆர்எல்களும் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் 3டி எல்இடி டெய்ல் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஓஆர்விஎம் பகுதியிலும் எல்இடி டர்ன் இண்டிகேட்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் உட்பகுதியில் 31.24சென்டிமீட்டர் கொண்ட டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் 25.4சென்டிமீட்டர் அளவு கொண்ட டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது.
மார்க்கெட்டில் உள்ள மற்ற கார்களில் இல்லாத பல்வேறு அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது. இதனால் இந்த காரை சிலர் விரும்பி வாங்கி வருகிறார்கள். இந்த காரின் விலை காரணமாக பலர் இந்த காரை வாங்க தயங்குகிறார்கள். ஆனால் சிட்ரோன் நிறுவனத்தின் மற்ற கார்கள் ஓரளவு விற்பனையாகி வருகிறது. சிட்ரோன் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அந்நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிட்ரோன் நிறுவனம் வெளிநாட்டை சேர்ந்த நிறுவனம் இந்தியாவில் போதுமான அளவுக்கு சர்வீஸ் சென்டர்கள் இல்லை மற்றும் ஷோரூம்கள் இல்லை என்ற காரணத்திற்காக இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்க மக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். இந்நிறுவனம் போதுமான அளவு ஷோரூம்களையும் சர்வீஸ் சென்டர்களையும் திறக்கும் பட்சத்தில் இன்னும் விற்பனை பல மடங்கு அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications









