இந்த காருக்கு இவ்வளவு டிமாண்டா? 0 ஸ்டார் வாங்குனாலும் வெளிநாட்டுகாரங்க எல்லாம் விரும்பி வாங்குறாங்க!

சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்படும் இசி3 என்ற எலெக்ட்ரிக் காரை இந்தோனேசியா நாட்டிற்கும் ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி இந்நிறுவனம் தமிழகத்திலிருந்து இதை ஏற்றுமதியை செய்ய உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிறுவனம் சிட்ரோன் இந்நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைத்து வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுள்ளது. சிறப்பான வடிவமைப்பு கொண்ட கார்களை நிறுவனம் தயாரிப்பதால் மக்கள் பலர் இந்நிறுவனத்தின் கார்களை விரும்பி வாங்கி வருகிறார்கள்.

citroen ec3 export

இந்நிலையில் சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கும் தனது எலக்ட்ரிக் காரன இசி 3 என்ற காரை இந்தியாவில் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது. இதன்படி இந்தோனேஷியா நாட்டிற்கு இந்த காரை ஏற்றுமதி செய்வதற்கான முதல் திட்டத்தை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கும் 500 இசி 3 கார்களை சென்னையில் உள்ள துறைமுகம் வழியாக இந்தோனேசியாவிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. சிட்ரோன் நிறுவனத்தின் இசி 3 கார் சமீபத்தில் தான் குளோபல் என்கேப் சோதனையில் உட்படுத்தப்பட்டது. இந்த சோதனையில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் இந்த கார் 0 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது.

citroen ec3 export

அதே நேரம் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் இந்த கார் ஒரு ஸ்டாரை மட்டுமே பெற்ற காராக இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் இந்த காரில் பெரிய அளவில் பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என்பது தான் இந்த காரில் இரண்டு ஏர்பேக் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இதில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் அம்சமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இந்த சிட்ரோன் இசி 3 காரை பொறுத்தவரை ரூபாய் 12.70 லட்சம் முதல் ரூபாய் 13.50 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் உள்ள மோட்டாரை பொருத்தவரை 57 பிஎஸ் பவரையும் 143 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

citroen ec3 export

இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி பேக்கை பொருத்தவரை 29.2 கிலோ வாட் ஹவர் லித்தியம் அயன் ஏர்கூல்டு பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது 0 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.8 நொடியில் பிக்கப் செய்து விடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இந்த கார் 107 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் சார்ஜரை பொறுத்தவரை 10 முதல் 100% பேட்டரியை சார்ஜ் செய்ய 10 மணி நேரம் 30 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்கிறது. இதற்காக 15ஆம்ஸ் பிளக் பாயிண்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது. இதுபோக பத்து முதல் 80 சதவீத பேட்டரியை 57 நிமிடத்தில் சார்ஜ் செய்ய டிசி பாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது. இது 3.3 கிலோ வாட் சார்ஜர் மூலம் நடக்கிறது.

இந்த காரில் உள்ள பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 320 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஏற்றுமதி செய்யும் முதல் எலெக்ட்ரிக் கார் இதுதான் ஆனால் இதற்கு முன்னர் சி3 என்ற பெட்ரோல் இன்ஜின் கொண்ட காரை இந்தியாவில் தயாரித்து தெற்காசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருவதில் சிரமப்பட்டு வருகிறது. இருந்தாலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களை உலக அளவில் ஏற்றுமதி செய்து இந்தியாவிற்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவின் தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் கார்களுக்கு வெளிநாடுகளில் நல்ல மவுசை ஏற்படும் டிரெண்டை இந்நிறுவனம் பயன்படுத்தி வருகிறார்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, April 12, 2024, 12:46 [IST]
English summary
Citroen ec3 export to indonesia made in india electric car
மேலும்... #சிட்ரோன் #citroen
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X