இந்தியாவில் டாடா எலக்ட்ரிக் காரின் விலையில் புதிய எலக்ட்ரிக் கார் அறிமுகம்!! கண்ணை பறிக்கும் ஆரஞ்சு நிறத்தில்!

சிட்ரோன் இசி3 (Citroen eC3) எலக்ட்ரிக் காரில் புதியதாக விலையுயர்ந்த வேரியண்ட் 'ஷைன்' (Shine) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த புதிய இசி3 எலக்ட்ரிக் காரில் கூடுதலாக என்னென்ன வசதிகளை பெறலாம் என்பதையும், இதன் விலையை பற்றியும் இந்த செய்தியில் இனி விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் விற்பனையில் உள்ள மிகவும் சில எலக்ட்ரிக் கார்களுள் ஒன்று சிட்ரோன் இசி3 ஆகும். 2021ஆம் ஆண்டில் சி5 ஏர்கிராஸ் மூலமாக இந்திய மார்க்கெட்டிற்குள் நுழைந்த சிட்ரோன் நிறுவனம் கடந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்தியாவில் அதன் முதல் எலக்ட்ரிக் காராக இசி3 மாடலை அறிமுகப்படுத்தியது.

citroen ec3 shine variant launched

ஏற்கனவே விற்பனையில் இருந்த சிட்ரோன் சி3 ஹேட்ச்பேக் காரின் எலக்ட்ரிக் வெர்சனாக இசி3 அறிமுகம் செய்யப்பட்டது. 2023 பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்ட இசி3 எலக்ட்ரிக் கார் லைவ் மற்றும் ஃபீல் என இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.11.61 லட்சத்தில் இருந்து ரூ.12.99 லட்சம் வரையில் உள்ளன.

இந்த நிலையில் தற்போது, சிட்ரோன் இசி3 எலக்ட்ரிக் காரில் ஷைன் என்கிற பெயரில் புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இசி3 காரின் புதிய டாப் வேரியண்ட் ஆகும். அதாவது, லைவ் மற்றும் ஃபீல் வேரியண்ட்களை காட்டிலும் இதன் விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய இசி3 ஷைன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.13.20 லட்சத்தில் இருந்து ரூ.13.50 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

citroen ec3 shine variant launched

சிட்ரோன் இசி3 ஷைன் காரில் கூடுதலாக எலக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்டபிள் விங் மிரர்ஸ், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் 15-இன்ச் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்களை பெறலாம். இவற்றுடன், முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தில் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்கள் மற்றும் லெதரால் மூடப்பட்ட ஸ்டேரிங் சக்கரத்தையும் இசி3 ஷைன் காரில் பெற முடியும்.

இந்த விலைமிக்க வேரியண்ட்டின் டேஸ்போர்டில் 10.2 இன்ச்சில் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்க்ரீன் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி உடன் உள்ளது. இவை மட்டுமின்றி, இசி3 ஃபீல் வேரியண்ட்டில் கிடைக்கக்கூடிய 4-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் மற்றும் ஹைட்-அட்ஜெஸ்டபிள் டிரைவர் இருக்கையும் இந்த புதிய டாப் வேரியண்ட்டில் பெற முடியும்.

citroen ec3 shine variant launched

மேலும், இசி3 ஃபீல் வேரியண்ட்டை போல், புதிய ஷைன் வேரியண்ட்டும் வைப் பேக் மற்றும் ட்யூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷனில் கிடைக்கும். சிட்ரோன் நிறுவனம் இசி3 ஹேட்ச்பேக் காருக்கு 3 வருட/ 1,25,000 கிமீ உத்தரவாதத்தை வழங்குகிறது. புதிய இசி3 ஷைன் காருக்கு விற்பனையில் நேரெதிர் போட்டியாக டாடா டியாகோ இவி எலக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட் இருக்கும்.

ஆனால், டியாகோ இவி டாப் வேரியண்ட்டில் க்ரூஸ் கண்ட்ரோல், மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள், பவர் டெயில்கேட், கூல்டு க்ளோவ் பாக்ஸ் மற்றும் ஆட்டோ-டிம்மிங் IRVM போன்றவை கூடுதலாக கிடைக்கும். ஆனால், டியாகோ இவி டாப் வேரியண்ட்டின் விலை ஆனது புதிய இசி3 ஷைன் காரின் விலையை விட ரூ.1 லட்சம் - 1.5 லட்சம் குறைவாக உள்ளது.

citroen ec3 shine variant launched

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா டியாகோ இவி என விற்பனையில் போட்டியாக மற்ற எலக்ட்ரிக் கார்கள் இருந்தாலும், சிட்ரோன் இசி3 காரின் சிறப்பம்சமே அதன் ஸ்டைலான தோற்றம் ஆகும். தற்போது, புதிய ஷைன் டாப் வேரியண்ட்டின் மூலம் தொழிற்நுட்ப அம்சங்களையும் கூடுதலாக பெற்றுள்ளது. இதன்பின், சிட்ரோன் இசி3 எலக்ட்ரிக் காரின் விற்பனை சூடுப்பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 25, 2024, 12:00 [IST]
English summary
Citroen ec3 shine variant launched at rupees 13 20 lakhs check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X