இனி தடுக்கி விழுந்தா கூட இவங்க ஷோரும்லதான் விழுகணும்! மாருதி, டாடாக்கு போட்டியா கடை திறக்க போறது அவங்களா!
பிரான்ஸை சேர்ந்த உலக புகழ்பெற்ற கார் நிறுவனங்களில் ஒன்று சிட்ரோன் (Citroen). இந்த நிறுவனத்திற்கு இந்தியாவில் தற்போதைய நிலையில் 58 டீலர்ஷிப்கள் (Dealerships) மட்டுமே உள்ளன. ஆனால் இந்த எண்ணிக்கையை நடப்பு 2024ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக 200 ஆக உயர்த்துவதற்கு சிட்ரோன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் சிட்ரோன் நிறுவன கார்களை வாடிக்கையாளர்களால் எளிதாக வாங்க முடியும். அத்துடன் கார்களை சர்வீஸ் செய்து கொள்வதும் எளிமையாக இருக்கும். இவை இரண்டும் இந்திய சந்தையில் சிட்ரோன் நிறுவனத்தின் ஒட்டுமொத்த கார் விற்பனை எண்ணிக்கையை உயர்த்துவதற்கு உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிட்ரோன் நிறுவனம் தற்போதைய நிலையில் சிட்ரோன் சி3 (Citroen C3), சிட்ரோன் இசி3 (Citroen eC3), சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ் (Citroen C3 Aircross) மற்றும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் (Citroen C5 Aircross) உள்ளிட்ட கார்களை விற்பனை செய்து வருகிறது.
இதில் சிட்ரோன் இசி3, எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். 29.2 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ள சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 320 கிலோ மீட்டர்கள் ஆகும். இந்திய சந்தையில் டாடா பன்ச் இவி (Tata Punch EV) மற்றும் டாடா டியாகோ இவி (Tata Tiago EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுடன், சிட்ரோன் இசி3 போட்டியிட்டு வருகிறது.

அத்துடன் எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) எலெக்ட்ரிக் காருக்கும் இது விற்பனையில் சவால் அளித்து கொண்டுள்ளது. வசதிகளை பொறுத்தவரையில், 10.2 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட அம்சங்களை எல்லாம் சிட்ரோன் இசி3 கொண்டுள்ளது.
இதுதவிர கனெக்டட் கார் தொழில்நுட்பம், ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ் உள்ளிட்ட வசதிகளும் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது. எனினும் இந்த எலெக்ட்ரிக் காருக்கு இந்திய சந்தையில் போட்டி அதிகரித்து கொண்டே வருகிறது.
எனவே இசி3 உள்பட தனது பெரும்பாலான கார்களை அப்டேட் செய்ய சிட்ரோன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மாடல்கள் எல்லாம் வரும் மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ளன. அத்துடன் பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான பணிகளை சிட்ரோன் மேற்கொண்டு வருகிறது. எனவேதான் டீலர்ஷிப்களின் எண்ணிக்கையை உயர்த்த சிட்ரோன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஒரு கார் நிறுவனம் வளர்ச்சியடைய வேண்டுமென்றால், சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க் மிக வலிமையாக இருப்பது அவசியம். மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஹூண்டாய் (Hyundai) மற்றும் டாடா (Tata) போன்ற நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்று. எனவேதான் சிட்ரோன் நிறுவனமும் தனது சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க்கை விரிவுபடுத்துகிறது.


Click it and Unblock the Notifications








