தோனியின் இந்த புதிய டீம் சிஎஸ்கே-வுக்கே டஃப் கொடுக்கும் போலையே! யார் யாரெல்லாம் இதோட ஃபேனா மாற போறாங்களோ!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பல கோடிக்கான மக்கள் ரசிகர்களாக இருக்கின்றார்கள் என்றால் அதற்கு தல தோனி தான் காரணம். இவர் மீது தீராத பற்றுக் கொண்டவர்களே சிஎஸ்கே அணியின் தீவிர ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இந்த மாதிரியான சூழல் இருப்பதை அறிந்தே பிரபல கார் உற்பத்தி நிறுவனமான சிட்ரோன், அவரை (எம்எஸ் தோனியை) தன்னுடைய பிராண்ட் அம்பாசிடராக சமீபத்தில் நியமித்தது. இதனைத் தொடர்ந்து தோனிக்கு புகழ் சேர்க்கும் விதமாகவும், தோனியின் ரசிகர்களையும் தன் வசம் ஈர்க்கும் பொருட்டு ஓர் புதிய அணியை திரட்ட இருக்கின்றது.

அதாவது, புதிய சிறப்பு பதிப்பு கார்களை அது அறிமுகம் செய்ய இருக்கின்றது. அந்த சிறப்பு பதிப்பு 'தோனி எடிசன்' எனும் பெயரிலேயே சந்தையில் களம் காண இருக்கின்றன. நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களான சி3 மற்றும் சி3 ஏர்கிராஸ் ஆகியவற்றிலேயே தோனி எடிசன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எனவே இந்த கார் மாடல்களின் விற்பனை வரும் மாதங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Citroen unveils dhoni edition

குறிப்பாக, இந்த சிறப்பு பதிப்பின் வாயிலாக நிறுவனத்தின் விற்பனை லேசாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்ப தோனியால் ஈர்க்கப்பட்ட அணிகலன்கள் பலவற்றைக் கொண்டே தோனி எடிசனை சிட்ரோன் அலங்கரிக்க இருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஆகையால், கட்டாயம் அவருடைய தீவிர ஃபேன்களின் மனதை இந்த வெர்ஷன்கள் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக தோனியின் ஜெர்சி எண்ணான 7-ஐ தன்னுடைய புதிய தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்தும் என தெரிகின்றது.

இதேபோல் ஒரு சில அலங்கார விஷயங்களில் இந்த தோனி எடிசன் சி3 மற்றும் சி3 ஏர்கிராஸ் ஆகியவற்றிற்கு இடையே தென்படும் என்பது தெரிய வந்திருக்கின்றது. மற்றபடி வேறு எந்தம மாற்றத்தையும் இந்த கார் மாடல்கள் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, எஞ்சின் விஷயத்தில் அனைத்தும் ஒரே மாதிரியாகவே இருக்கும்.

சிட்ரோன் சி3 மற்றும் சி3 ஏர்கிராஸ் இந்த இரு கார் மாடல்களும் அடித்தளத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டவை எனப்து குறிர்பிபடத்தகுந்தது. இரண்டு மாடல்களிலும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனே வழங்கப்படுகின்றது. அதேவேளையில், சி3 ஹேட்ச்பேக் மாடலில் 1.2 லிட்டர் நேச்சுரல்லி ஆஸ்பிரேட்டட் மோட்டார் வழங்கப்படுகின்றது.

இதில் 1.2 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் 108 பிஎச்பி மற்றும் 190 என்எம் டார்க் வரையிலான ஆற்றை வெளியேற்றும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இந்த மோட்டாருடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதேபோல், 1.2 லிட்டர் நேச்சுரல்லி ஆஸ்பிரேட்டட் மோட்டார் 82 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இரண்டு மாடல்களிலும் சிறப்பம்சங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் மிக அதிக அளவில் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன.

அந்தவகையில், 10.2 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓஆர்விஎம் (ORVM)கள், மேனுவல் ஏர் கண்டிஷனிங், டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் கூடிய இபிடி, இஎஸ்பி (ESP), ஹில் ஹோல்ட் அசிஸ்ட், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் ரியர்வியூ கேமரா ஆகியவற்றையே இந்த கார் மாடல்கள் கொண்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிட்ரோயன் சி3 மற்றும் சி3 ஏர்கிராஸ் தோனி பதிப்புகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது இப்போது விற்பனையில் இருக்கும் வழக்கமான பதிப்புகளைக் காட்டிலும் சற்று அதிக விலையில் விற்பனைக்குக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், துள்ளியமான விலை விபரம் வெளியாகவில்லை. விரைவில் அதுபற்றிய விபரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 5, 2024, 23:00 [IST]
English summary
Citroen launches dhoni inspired edition cars soon to attract fans
மேலும்... #citroen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+