100, 200 என கார்களை விற்பனை செய்யும் நிறுவனம்.. கம்மி விலை காரை வாங்கவும் கூட்டம் வரலையா! எல்லாமே வேஸ்ட்!!

பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பிரீமியம் கார் உற்பத்தி நிறுவனம் சிட்ரோன் (Citroen). உலகின் மிகவும் பழைமையான கார் உற்பத்தி நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். இது இந்தியாவில் காலடி எடுத்து வைத்து சில ஆண்டுகளே ஆகின்றன. தற்போது சி3 ஏர்கிராஸ் (C3 Aircross), சி3 (C3), இ-சி3 (eC3), பசால்ட் (Basalt) மற்றும் சி5 ஏர்கிராஸ் (C5 Aircross) ஆகிய கார் மாடல்களை சிட்ரோன் நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. தான் ஓர் பிரீமியம் தர கார் தயாரிப்பு நிறுவனமாக இருந்தாலும், இந்தியாவிற்காக (இந்தியர்களுக்காக) விலை குறைவான கார் மாடல்கள் சிலவற்றையும் தன்னுடைய விற்பனைப் பட்டியலில் அது சேர்த்திருக்கின்றது.

அந்தவகையில், ஏற்கனவே சி3 எனும் பட்ஜெட் விலைக் கொண்ட கார் மாடலை அது விற்பனைக்கு வழங்கி வந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னரே புதிய பசால்ட் கார் மாடலையும் அது இணைத்தது. இது ஓர் கூபே எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும்.

Citroen november 2024 sales report

இதன் உருவத்திற்கு் விலைக்கும் சம்பந்தமே இருக்காது என கூறலாம். அந்த அளவிற்கே குறைவான விலையில் இக்காரை சிட்ரோன் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. குறிப்பாக, இந்தியர்கள் எதிர்பார்த்ததை போலவே கம்மியான விலையிலேயே அதனை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, பாதுகாப்பு விஷயத்திலும் அதிகம் தரம்மிக்கதாக இந்த கார் காட்சியளிக்கின்றது ஐந்துக்கு நான்கு ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கை அது பெற்றிருக்கின்றது.

இருப்பினும், இந்த காருக்கு இந்தியாவில் வரவேற்புக் குறைந்துக் காணப்படுவது தெரிய வந்திருக்கின்ரது. மிக முக்கியமாக இந்த காருக்கு குறைவான வரவேற்பு கிடைத்து வந்தாலும் ஓரளவிற்கு நல்ல வரவேற்பே நாட்டில் கிடைத்து வந்தது. ஆனால், தற்போது அதுவும் இல்லாமல் போயிருப்பதாகவே அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை உறுதிப்படுத்தும் விதமாக 2024 நவம்பர் மாத விற்பனை புள்ளி விபரம் அமைந்துள்ளது. சிட்ரோன் நிறுவனத்தின் தயாரிப்புகள் போன மாதத்தில் ஒட்டுமொத்தமாகவே 509 யூனிட்டுகள் வரை மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன. நிறுவனத்தின் ஒவ்வொரு மாடலும் 100, 200 என்கிற வீதத்திலேயே விற்பனையாகி இருக்கின்றன.

குறிப்பாக, சிட்ரோனின் விலை குறைவான கார் மாடல்களான சி3 மற்றும் பசால்ட்-ம் கூட போதிய அளவில் விற்பனை வரவேற்பைப் பெறவில்லை. சி3 கார் மாடல் 200 யூனிட்டுகளும், பசால்ட் வெறும் 47 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன. கடந்த 2024 அக்டோபர் மாதத்தில் 221 யூனிட்டுகள் வரை இதே பசால்ட் கார் மாடல் விற்பனையாகி இருந்தது கவனிக்கத்தகுந்தது.

இதேபோல், 300 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருந்தது. ஆனால், தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. சி3 33.33 சதவீதம் விற்பனை வீழ்ச்சியையும், பசால்ட் 78.3 சதவீத விற்பனை வீழ்ச்சியையும் 2024 அக்டோபரைக் காட்டிலும் குறைவாக பெற்றிருக்கின்றது. இதைவிட மோசமான தகவல் என்னவென்றால், நிறுவனத்தின் அதிக சிறப்பம்சங்கள் தாங்கிய சி5 ஏர்கிராஸ்-ஸை வாங்க ஒருவர்கூட முன் வரவில்லை என்பதுதான்.

2024 நவம்பரில் ஒரு யூனிட்கூட இந்த கார் மாடல் விற்பனையாகவில்லை. சென்ற அக்டோபர் மாதத்தில்கூட 4 யூனிட்டுகள் வரையாவது இந்த கார் மாடல் விற்பனையாகி இருந்தது. ஆனால், போன நவம்பர் மாசத்திலோ அது 100 சதவீத விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து இருக்கின்றது.

இதேபோல், 2024 அக்டோபருடன் ஒப்பிடுகையில் இ-சி3 எலெக்ட்ரிக் கார் மாடலும் விற்பனை வீழ்ச்சியையேச் சந்தித்து இருக்கின்றது. அது போன அக்டோபர் மாதத்தில் 89 யூனிட்டுகள் வரை விற்பனையாகிய நிலையில், நவம்பர் மாதத்தில் 61 யூனிட்டுகளாக குறைந்து விற்பனையாகி இருக்கின்றது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் நிறுவனத்தின் சி3 ஏர்கிராஸ் மட்டும் ஓரளவுக்கு நல்ல விற்பனை எண்ணிக்கையைப் பெற்றிருக்கின்றது.

அது 103 யூனிட்டுகள் வரை மட்டுமே போன அக்டோபரில் விற்பனையான நிலையில், நவம்பரில் 201 யூனிட்டுகளாக அதிகரித்திருக்கின்றது. இது 95.15 சதவீதம் அதிக விற்பனை வளர்ச்சியாகும். அனைத்து கார் மாடல்களும் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து வந்த நிலையில் சி3 ஏர்கிராஸ் மட்டும் ஆறுதலிக்கும் விதமாக இந்த சிறப்பான விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது.

சிட்ரோனின் தயாரிப்புகள் மதத்தில் இருந்து மாதம் ஒப்பிடுகையில் மட்டுமல்ல ஆண்டில் ஆண்டு உடன் ஒப்பிடுகையிலும் குறைவான எண்ணிக்கையிலேயே விர்பனையாகி இருக்கின்றன. 2023 நவம்பர் மாதத்தில் ஒட்டுமொத்தமாக சிட்ரோன் கார்கள் 537 யூனிட்டுகள் வரை விற்பனையான நிலையில், 2024 நவம்பரில் 509 யூனிட்டுகளாக குறைந்திருக்கின்றன.

நிறுவனம் குறைவான விலைக் கொண்ட பசால்ட்டை 2024 ஆம் ஆண்டில் புதிதாக விற்பனைக்குக் கொண்டு வந்த போதிலும் விற்பனையில் அதற்கு பெரிய கை கொடுக்கவில்லை. முக்கியமாக சி5 ஏர்கிராஸ் காருக்கு வரவேற்பு என்பதே கிடைக்காத நிலை இந்தியாவில் உள்ளது. ஆகையால், சிட்ரோன் நிறுவனம் இந்தியாவை வெளியேறிவிடுமோ என்கிற சூழல் உருவாகி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிட்ரோன் நிறுவனத்தின் தயாரிப்புகள் மிக மோசமான நிலையிலேயே விற்பனையைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆகையால், சிட்ரோன் நிறுவனம் எப்போது வேண்டுமானாலும் சந்தையை விட்டு வெளியேறலாம் என்கிற அபாயம் உருவாகி இருக்கின்றது. அதேவேளையில், ஏதேனும் மாற்று நடவடிக்கையை அது மேற்கொள்ளலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, December 13, 2024, 14:40 [IST]
English summary
Citroen november 2024 sales report basalt suv struggles with only 47 units
மேலும்... #citroen #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+