6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!

சிட்ரோன் இந்தியா (Citroen India) நிறுவனம் அதன் சி-கியூப்டு (C-Cubed) எனும் திட்டத்தின் வாயிலாக புதுமுக கான்செப்ட் (Concept) மாடல் ஒன்றை வெளியீடு செய்திருக்கின்றது. சிட்ரோன் பசால்டு விஷன் கூபே எஸ்யூவி (Basalt Vision coupe SUV) ரக கான்செப்ட் கார் மாடலையே அது வெளியீடு செய்திருக்கின்றது.

இது நிறுவனம் சி-க்யூப்டு திட்டத்தின் வாயிலாக அறிமுகம் செய்யும் நான்காவது கார் மாடல் ஆகும். ஏற்கனவே சி3, இசி3 மற்றும் சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி ஆகிய கார் மாடல்களையே சி க்யூப்டு திட்டத்தின் வாயிலாக விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் வரிசையிலேயே நான்காவதாக விரைவில் பசால்டு விஷன் கூபே எஸ்யூவி ரக கார் இணைக்கப்பட இருக்கின்றது.

Citroen basalt vision

உற்பத்திக்கு தயார் நிலையில் இந்த கார் மாடல் இருப்பதை நம்மால் உணர முடிகின்றது. மேலும், இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, புதிய பசால்டு விஷன் கூபே எஸ்யூவி ரக கார் இந்தியாவில் நடப்பாண்டின் இரண்டாம் அரையாண்டில் அறிமுகமாக இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

மேலும், விற்பனைக்கு வரும்போது அந்த கார் பசால்டு (Basalt) என்கிற பெயரில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகின்றது. இதுதவிர, தற்போது விற்பனையில் இருக்கும் சி3 ஏர்கிராஸ் காரில் உள்ள சிறப்பம்சங்களைக் கொண்டதாகவே பசால்ட்டு விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகின்றது.

Citroen basalt vision rear

ஆனால், உருவ தோற்றத்தில் இந்த கார் சிட்ரோன் நிறுவனத்தின் மற்ற எந்த தயாரிப்புகளையும் பிரதிபலிக்காது. இது தனித்துமான அலங்கார அணிகலன்களையும், பாடி பேனல்களையும் மற்றும் வண்ண தேர்வுகளையும் கொண்டிருக்கும். இதற்கு சான்றாகவே இப்போது வெளியீடு செய்யப்பட்டு இருக்கும் கான்செப்ட் மாடல் காட்சியளிக்கின்றது.

குறிப்பாக, மிகவும் தனித்துவமான ஸ்டைலிலான க்ரில் மற்றும் பம்பர் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் கிரில் இரண்டு பாகமாக காட்சியளிக்கின்றது. ஃபாக்ஸ் சில்வர் நிற ஸ்கிட் பிளேட் இந்த காருக்கு அதிக கவர்ச்சியான தோற்றம் சேர்க்கும் வகையில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Citroen basalt vision side view

இத்துடன், சிட்ரோன் லோகோ மற்றும் அதன் இரு பக்கங்களிலும் குரோம் பூச்சில் வழங்கப்பட்டு இருக்கின்றது. எல்இடி லைட் மற்றும் எல்இடி பகல்நேர லைட் ஆகியவையும் தனித்துவமான தோற்றம் கொண்டதாகவே இருக்கின்றது. மற்ற எந்த கார் மாடலையும் பிரதிபலிக்கும் வகையில் அது இல்லை.

ஆனால், சி3 ஏர்கிராஸ் உடன் அது லேசாக ஒத்துப்போகின்றது. ஹலோஜன் பல்ப்புகளுக்கு பதிலாகவே எல்இடி லைட்டுகள் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல், இந்த கார் மாடலின் பக்கவாட்டு மற்றும் பின் பக்கமும் மிகவும் கவர்ச்சியானதாகக் காட்சியளிக்கின்றது. பக்கவாட்டு பகுதியின் அழகிற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக வீலும், கருப்பு நிற கிளாடிங் (cladding)கும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதைத்தொடர்ந்து, இந்த காரின் மேற்கூரைக்கும் அழகு சேர்க்கும் விதமாக கருப்பு நிறம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, இந்த காரின் மேற்கூரையே தனி அழகானதாகக் காட்சியளிக்கின்றது. முன்பக்கம் உயரமான லுக்கிலும், பின் பக்கம் மென்மையான சருவலையும் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. இந்த தோற்றம் லம்போர்கினி உருஸ்-ஐ பிரதிபலிக்கும் வகையில் இருக்கின்றது.

ஆனால், இதை மிகவும் ஸ்போர்ட்டியான தோற்றத்தை லம்போர்கினி உருஸ் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமாதிரியான பிரத்யேக மற்றும் அழகிய வடிவமைப்புகளையே பசால்ட் பெற்றிருக்கின்றது. ஆனால், எஞ்சின் மற்றும் தொழில்நுட்பங்கள் விஷயத்தில் இந்த கார் மாடல் சி3 ஏர்கிராஸ் உடன் ஒத்துப்போகும். 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரே இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மோட்டாருடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிட்ரோன் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு பெரிய வரவேற்புக் கிடைக்கவில்லை. கணிசமான அளவிலேயே அதற்கு வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழிலிலேயே புதுமுக கார்களின் வாயிலாக இந்தியர்களைக் கவரும் பொருட்டு தற்போது பசால்டு கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் சிட்ரோன் களமிறங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 27, 2024, 18:07 [IST]
English summary
Citroen revealed basalt vision coupe suv concept globally
மேலும்... #சிட்ரோன் #citroen
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X