பெட்ரோல் காரை விட சிஎன்ஜி கார்கள் விலை ஏன் ஜாஸ்தியா இருக்குது? உண்மையான காரணம் இது தான்!
இந்தியாவில் சமீப காலமாக சிஎன்ஜி கார்களின் விற்பனை மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில், தற்போது மக்கள் மத்தியில் சிஎன்ஜி கார்களை விட பெட்ரோல் கார்கள் விலை கம்மியாக இருக்கிறது. இதற்கு காரணம் என்ன சிஎன்ஜி கார்கள் மட்டும் ஏன் அதிக விலைக்கு விற்பனையாகிறது? என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. இதில் இருக்கும் பல குழப்பங்களையும் சந்தேகங்களையும் தீர்ப்பதற்காக சில முக்கியமான தகவல்களை இங்கே உங்களுக்காக வழங்கி உள்ளோம்
இன்று இந்தியாவில் பெட்ரோல் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. என்னதான் அரசு தேர்தல் நேரத்தில் பெட்ரோல் விலையை குறைத்து இருந்தாலும், அது பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். தினம்தோறும் பெட்ரோல் போடும் பலர் அதிக விலை காரணமாக அவஸ்தைப்பட்டு வருகிறார்கள். இதனால் புதிதாக வாகனம் வாங்கும்போது பெட்ரோலுக்கு பதிலாக சிஎன்ஜியில் இயங்கும் வாகனங்களை பலர் தேர்வு செய்து வருகிறார்கள்.

பெட்ரோல் கார்களை விட சிஎன்ஜி கார்கள் பல்வேறு விதங்களில் பலனளிக்க கூடியதாக இருக்கிறது. பெட்ரோல் காரை விட சிஎன்ஜி வெளியேற்றும் மாசு என்பது குறைவாக இருக்கிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு குறைவான தீங்கு ஏற்படுகிறது. இது மட்டுமல்ல பெட்ரோல் வாகனங்களை விட சிஎன்ஜி வாகனங்கள் அதிக மைலேஜ் தருகின்றன இதனால் செலவும் குறைகிறது.
இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் மார்க்கெட்டில் சிஎன்ஜி கார்களின் விலை பெட்ரோல் கார்களின் விலையை விட 1 முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை அதிகமாக இருக்கிறது. பெட்ரோல் வாகனத்தையும் சிஎன்ஜி வாகனத்தையும் ஒப்பிட்டு பார்க்கும்போது பெட்ரோல் வாகனத்தில் இருக்கும் அனைத்து அம்சங்களும் சிஎன்ஜி வாகனங்களில் அப்படியே இருக்கின்றன. புதிதாக சிஎன்ஜி வாகனங்களில் பெரும்பாலும் தனி அம்சங்கள் எதுவும் சேர்க்கப்படுவதில்லை.

இப்படி இருக்கும்போது பெட்ரோல் வாகனங்களை விட சிஎன்ஜி வாகனங்கள் ஏன் விலை அதிகமாக இருக்கின்றன? என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருக்கிறது இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. நீங்கள் ஒரு சிஎன்ஜி வாகனத்தை வாங்க திட்டமிட்டு இருந்தால் இந்த காரணங்களை எல்லாம் தெரிந்து கொண்டு அதன் பின் நீங்கள் முடிவு செய்வது சிறப்பானதாக இருக்கும்.
அடிப்படையில் பெட்ரோல் வாகனங்களை தயாரிக்க ஆகும் செலவு விட சிஎன்ஜி வாகனங்களை தயாரிக்க அதிகம் செலவாகிறது என்பது ஒரு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. பெட்ரோல் வாகனங்களை விட சிஎன்ஜி வாகனங்களில் அதிக பிரஷர் ஸ்டோரேஜ் டேங்க், சிஎன்ஜி எரிபொருளை நிரப்பக்கூடிய நாசில், பிரஷர் ரெகுலேட்டர் பைப்புகள் ஆகிய பெட்ரோல் வாகனங்களை விட இதில் கூடுதலாக இருக்கும் பாகங்களாக உள்ளன.

சிஎன்ஜி வாகனங்களில் பயன்படுத்தப்படும் பைப்லைன்கள் துருப்பிடிக்காத பைப் லைன்களாக உருவாக்கப்பட வேண்டும். இதன் விலை அதிகமாக இருக்கிறது. சிஎன்ஜி வாகனங்களில் பொருத்தப்படும் இன்ஜின் என்னதான் பெட்ரோல் இன்ஜினாக இருந்தாலும் அது சிஎன்ஜிக்கு இயங்குவதற்கு ஏற்ப சில மாற்றங்களை செய்ய வேண்டும் முக்கியமாக ஸ்ட்ராங்கான பிஸ்டன்கள் கொண்டு வடிவமைக்கப்பட வேண்டும். ஃப்யூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். இது எல்லாம் இந்த காரின் விலையை அதிகரிப்பதற்கான காரணமாக இருக்கிறது.
சிஎன்ஜி எரிவாயு என்பது எளிதில் தீப்பற்ற கூடிய எரிவாயுவாக இருக்கிறது. இதனால் சிஎன்ஜி டேங்கிலிருந்து லேசான லீக் ஏற்பட்டாலும் ஒட்டுமொத்த வாகனமே வெடித்து சிதற வாய்ப்பு இருக்கிறது. அதனால் சிஎன்ஜி வாகனங்களை தயாரிக்கும் போது அதிக பாதுகாப்பு தர கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். இது வாகனத்தின் விலையை அதிகரிப்பதற்கு மற்றொரு காரணமாக இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க நீங்கள் சிஎன்ஜி வாகனத்தை வாங்கிய பின்பு அதை பெட்ரோல் வாகனம் போல பராமரிக்க முடியாது என தனி சர்வீஸ் மற்றும் பராமரிப்பு காலம் இருக்கிறது. மேலும் சிஎன்ஜி வாகனங்களில் ஏதாவது உதிரி பாகங்கள் மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதன் விலை மார்க்கெட்டில் அதிகமாக இருக்கும். அதிக விலை கொடுத்து வாங்கி அதை பொருத்த வேண்டிய கட்டாயம் இருக்கும்.
அதே நேரம் சிஎன்ஜி வாகனங்களை சர்வீஸ் செய்யக்கூடிய மெக்கானிக்கல் மிக குறைவாக இருக்கிறார்கள். இதனால் நிகழ் மெக்கானிக்கை தேடி பிடிக்க வேண்டும் மெக்கானிக்கல் காண செலவும் அதிகமாக இருக்கும். மிகக் குறைவான மெக்கானிக்கல் இருப்பதால் அவர்கள் உடனடியாக உங்க காரை சர்வீஸ் செய்வார்களா என்பது சந்தேகம்தான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிஎன்ஜி வாகனங்களையும் பெட்ரோல் வாகனங்களையும் ஒப்பிடும்போது சிஎன்ஜி வாகனங்கள் அதிக குழப்பமான விஷயங்களைக் கொண்டதாக இருக்கிறது. இவ்வளவு குழப்பமான விஷயங்களை செய்து உங்களுக்கு லாபம் கிடைக்கும் என நீங்கள் கருதினால் சிஎன்ஜி வாகனங்களை தேர்வு செய்யலாம். இல்லை என்றால் பெட்ரோல் வாகனங்கள் சிஎன்ஜியை விட சிறப்பாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









