இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...

காம்பெக்ட் எஸ்யூவி கார்களுக்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருவதை பற்றி நான் கூற வேண்டியது இல்லை. ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் உள்ளிட்ட பிரபலமான கார்கள் இந்த பிரிவில் இருந்துதான் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 1 ஆண்டில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட காம்பெக்ட் எஸ்யூவி கார்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

எஸ்யூவி ரக கார்கள் பல்வேறு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. அதில் ஒரு வகையே காம்பெக்ட் எஸ்யூவி ஆகும். இந்த வகை எஸ்யூவி கார்கள் 4 மீட்டருக்கும் அதிகமான நீளத்தை கொண்டவைகளாக உள்ளன. இந்தியாவில் இத்தகைய எஸ்யூவி கார்களுள் அதிகம் விற்பனை செய்யப்படும் மாடல் ஹூண்டாய் கிரெட்டா ஆகும்.

compact suv car sales 2023-24

2023 ஏப்ரலில் இருந்து 2024 மார்ச் மாதம் வரையில் மொத்தம் 1 லட்சத்து 62,773 கிரெட்டா கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதாவது, சராசரியாக ஒரு மாதத்தில் 13,564 கிரெட்டா கார்கள் கடந்த நிதியாண்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஒரு வருடத்தில் அதிகப்பட்சமாக கடந்த 2024 மார்ச் மாதத்தில் 16,458 கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

குறைந்தப்பட்சமாக கடந்த ஆண்டு இறுதி டிசம்பர் மாதத்தில் வெறும் 9,243 கிரெட்டா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வரிசையில் கிரெட்டாவுக்கு அடுத்து, இந்தியாவில் நடந்து முடிந்த 2023-24 நிதியாண்டில் அதிகம் விற்பனை செய்ய காம்பெக்ட் எஸ்யூவி காராக 2வது இடத்தில் மாருதி சுஸுகியின் கிராண்ட் விட்டாரா உள்ளது. இது, சமீப காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மாடர்ன் மாருதி கார் ஆகும்.

compact suv car sales 2023-24

கடந்த ஒரு வருடங்களில் மொத்தம் 1 லட்சத்து 21,169 கிராண்ட் விட்டாரா கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதாவது, சராசரியாக ஒரு மாதத்தில் 10,097 கிராண்ட் விட்டாரா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 1 வருடத்தில் அதிகப்பட்சமாக கடந்த 2024 ஜனவரி மாதத்தில் 13,438 கிராண்ட் விட்டாரா கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

குறைந்தப்பட்சமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெறும் 6,988 கிராண்ட் விட்டாரா கார்களை மட்டுமே மாருதி சுஸுகி நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்தது. ஹைப்ரீட் டெக்னாலஜி உடன் விற்பனை செய்யப்படும் கிராண்ட் விட்டாரா காரை முழுவதுமாக எலக்ட்ரிக் பவரிலும் இயக்க முடியும். இந்த லிஸ்ட்டில், இந்த மாருதி காருக்கு அடுத்து 3வது இடத்தில் கியா செல்டோஸ் உள்ளது.

compact suv car sales 2023-24

ஹூண்டாய் கிரெட்டாவை போன்று, கொரியன் ஸ்டைல் எஸ்யூவி காரான செல்டோஸ் கடந்த 1 வருடங்களில் 1 லட்சத்து 423 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், கடந்த 12 மாதங்களில் சராசரியாக ஒவ்வொரு மாதத்திலும் 8,369 செல்டோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. செல்டோஸ் கார்கள் விற்பனை கடந்த 6 மாதங்களில் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளது.

கடந்த 12 மாதங்களில் அதிகப்பட்சமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 12,362 செல்டோஸ் கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. குறைந்தப்பட்சமாக கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெறும் 3,578 கியா செல்டோஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கிரெட்டா, கிராண்ட் விட்டாரா & செல்டோஸ் இவை மூன்றும் தான் இந்தியாவின் டாப்-3 காம்பெக்ட் எஸ்யூவி கார்களாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த 3 மாடல்கள் மட்டுமின்றி, டொயோட்டா ஹைரைடர், ஹோண்டா எலிவேட், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் எம்ஜி அஸ்டர் உள்ளிட்ட காம்பெக்ட் எஸ்யூவி கார்களும் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், இவற்றின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் 50 ஆயிரத்தை கூட தாண்டவில்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, April 18, 2024, 11:38 [IST]
English summary
Compact suv car sales 2023 24 fy hyundai sold 162773 creta cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X