ஸ்கோடாவுக்கு குஷாக் அவ்ளோ ஸ்பெஷலா.. பெருசா மனித தலையீடே இல்லாமல் உருவாகும் கார்.. இதோ முழு விபரம்!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக சிறந்த எஸ்யூவி (SUV) ரக கார் மாடல்களில் ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq)-ம் ஒன்றாகும். மைலேஜ், பாதுகாப்பு, பிரீமியம் அம்சம் மற்றும் திறன் வெளிப்பாடு என அனைத்திலும் இந்த எஸ்யூவி கார் மிக சிறந்த வாகனமாகக் காட்சியளிக்கின்றது. இதனால்தான் இந்தியாவில் விற்கப்படும் சிறந்த எஸ்யூவி கார்களில் ஒன்றாக குஷாக்கும் பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, பாதுகாப்பு தருவதில் இந்த கார் பலமடங்கு சிறந்ததாகக் காட்சியளிக்கின்றது. இந்த விஷயத்தில் ஸ்கோடா குஷாக் 5 நட்சத்திரங்களைப் பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த காம்பேக்ட் எஸ்யூவி ரக காருக்கு பிரீமியம் அம்சங்களை அதிகம் விரும்புவோர் மத்தியிலேயே மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.இத்தகைய கார் மாடலை ஸ்கோடா நிறுவனம் ஏதேனும் தனி கவனம் செலுத்தி தயாரித்துக் கொண்டிருக்கின்றதா என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, ஸ்கோடாவின் மற்ற கார் மாடல்களின் உற்பத்தி உடன் குஷாக்கின் உற்பத்தியையே ஒப்பிட்டு பார்க்க உள்ளோம். இதுபற்றிய கூடுதல் தகவலை பார்க்கலாம், வாங்க.

Skoda kushaq production

ஸ்கோடா குஷாக் தயாரிப்பு செயல்முறை: ஸ்கோடா குஷாக் இந்தியாவின் புனே அருகே உள்ள சக்கன் உற்பத்தி ஆலையில் வைத்தே தயாரிக்கப்படுகின்றது. இந்த ஆலை தனித்துவமானது, ஏனெனில், இது அதிக அளவு ஆட்டோமேஷனையேப் பயன்படுத்துகிறது. ஆகையால், மனித தலையீடு மிகவும் குறைவாகவே இங்கு உள்ளது. குறிப்பாக, உற்பத்தி செயல்முறையில் கிட்டத்தட்ட 95 சதவீதம் தானியங்கிகளே பயன்படுத்தப்படுத்தப்படுகின்றன. எனவே, நிலையான தரம் ஸ்கோடாவின் ஒவ்வொரு யூனிட்டுகளிலும் உறுதி செய்யப்படுகின்றது.

குறிப்பாக, ஸ்கோடா குஷாக் தயாரிப்பில் மேம்பட்ட ரோபாட்டிக்ஸ் பயன்படுத்தப்படுகின்றது. வெல்டிங் மற்றும் பெயிண்டிங் போன்ற பெரும் பணிகளை இவையே கையாளுகின்றன. இந்த ரோபோக்கள் அசெம்பிளி செயல்பாட்டில் துல்லியமாக இருக்க உதவுகின்றன. மனிதர்கள் சிறு சிறு பிழையை செய்ய நேரிடலாம். ஆனால், இந்த ஆட்டோமேஷனில் சின்ன தவறுகூட இழைக்கப்படாது. எனவே, கார்கள் ஒவ்வொன்றும் நம்பகமானதாக இருக்கும்.

உற்பத்தி செயல்முறைகளை ஒப்பிடுதல்: ஸ்கோடா குஷாக்கின் உற்பத்தியை மற்ற ஸ்கோடா மாடல்களுடன் ஒப்பிடும் போது, ​​முக்கிய வேறுபாடுகள் உள்ளன. உதாரணமாக, குஷாக் உற்பத்தி உள்ளூர்மயமாக்கலுக்கு முன்னுரிமை அளிக்கிறது. மற்ற ஸ்கோடா மாடல்களை விட அதன் 95%க்கும் அதிகமான பாகங்கள் உள்நாட்டிலேயே பெறப்படுகின்றன. இந்த அணுகுமுறை செலவுகளைக் குறைக்க உதவுகிறது மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை ஆதரிக்கிறது.

மற்ற ஸ்கோடா மாடல்கள், குறிப்பாக, ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்டவை பெரும்பாலும் தானியங்கு மற்றும் கைமுறை செயல்முறைகளின் கலவையால் உருவாக்கப்பட்டவை. ஐரோப்பாவில் ஆட்டோமேஷன் அதிகமாக இருந்தாலும், கார் உற்பத்தியில் முக்கிய பங்களிப்பை வழங்கும் பல்வேறு பாகங்கள் வெளியில் இருந்தே பெறப்படுகின்றன. எனவேதான் இந்த நிலை ஐரோப்பாவில் காணப்படுகின்று.

தர கட்டுப்பாடு: சக்கன் உற்பத்தி ஆலையில் தரக் கட்டுப்பாடு கடுமையாக உள்ளது. ஒவ்வொரு ஸ்கோடா குஷாக்கும், ஸ்கோடாவின் தரநிலைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்காக கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படும். இங்கு தரம் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே விற்பனைக்கு வெளியேற்றப்படும். இங்கு சில தானியங்கி சிஸ்டம்கள் தங்களின் முக்கிய வேலையைப் பார்க்கின்றன. பெயிண்ட்டுடைய தடிமன் தொடங்கி இயந்திரத்தின் செயல்திறன் வரை அனைத்தையும் அவை சரிபார்க்கின்றன. இந்த விரிவான தரச் சரிபார்ப்பு ஒவ்வொரு காரும் உட்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடா குஷாக்கின் தயாரிப்பு செயல்முறையானது உயர் மட்ட ஆட்டோமேஷன் மற்றும் உள்ளூர் ஆதாரங்களைக் கொண்ட மேற்கொள்ளப்படுகின்றது. மற்ற ஸ்கோடா மாடல்களுடன் ஒப்பிடுகையில், இது உள்ளூர் அணுகுமுறை மற்றும் கடுமையான தர சோதனைகளுக்காக தனித்து நிற்கிறது. குறிப்பாக, சக்கன் ஆலை, வாகன உற்பத்தியில் ஒரு புதிய தரநிலையை அமைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, May 31, 2024, 17:08 [IST]
English summary
Comparing the skoda kushaq production with other skoda models
மேலும்... #skoda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+