தல தோனிக்கு 7கோடி ரூபாயும் கொடுத்து, முக்கிய பொறுப்பையும் கொடுத்த பிரெஞ்சு கார் நிறுவனம்..

இந்தியாவில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் உலக புகழ்பெற்ற கார் (Car) உற்பத்தி நிறுவனங்களில் சிட்ரோன் (Citroen)-ம் ஒன்றாகும். இந்த நிறுவனமே தற்போது தன்னுடைய பிராண்ட் அம்பாசிடராக பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரரான மஹேந்திர சிங் தோனியை நியமித்து இருப்பதாக அறிவித்து இருக்கின்றது.

சமீபத்தில் இதேபோல் ஓர் நடவடிக்கையை உலக புகழ்பெற்ற மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனமான அப்ரில்லா எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. அது பிரபல இந்தி திரைப்பட நடிகர் ஜான் ஆபிரகாமை பிராண்ட் அம்பாசிடராக நியமித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே சிட்ரோன் மஹிந்திர சிங் தோனியை தன்னுடைய பிராண்ட் அம்பாசிடராக நியமித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Citroen

இதைத்தொடர்ந்து, அவருக்கு ரூ. 7 கோடி தொகையை முதல்கட்டமாக வழங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுதவிர, வரும் நாட்களில் அவருக்கு சிட்ரோன் கார்கள் சிலவற்றையும் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், எந்த கார் மாடல் அவருக்கு வழங்கப்படும் என்பது தெரியவில்லை.

இப்போதைய நிலவரப்படி சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் நான்கு கார் மாடல்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. சி3, சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி, சி5 ஏர்கிராஸ் எஸ்யூவி ஆகியவையே அவை ஆகும். இவை அனைத்தும் ஐசிஇ (எரிபொருளில் இயங்கும்) வாகன மாடல்கள் ஆகும்.

Ms dhoni

இத்துடன், ஓர் எலெக்ட்ரிக் கார் மாடலையும் சிட்ரோன் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், இ-சி3 மாடலே அதுவாகும். சி3 ஏர் கிராஸ் எஸ்யூவி ரூ. 9.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த கார் மாடலின் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வெர்ஷன் ரூ. 12.85 லட்சம் எனும் விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கிறது.

அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இந்த காரில் டிரைவருடன் சேர்த்து 7 பேர் வரை பயணிக்க முடியும். அந்த அளவிற்கு அதிக இட வசதிக் கொண்டதே சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி ஆகும். இதனை சிட்ரோன் நிறுவனம் சி3 கார் மாடலை தழுவியே உருவாக்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

சி3 ஏர்கிராஸ் இதுவே நிறுவனத்தின் மலிவு விலை கார் மாடல் ஆகும். இந்தியாவில் இந்த கார் ரூ. 6.16 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் உச்சபட்ச விலையே ரூ. 9.07 லட்சம் மட்டுமே ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

சிறிய குடும்பங்களுக்கான ஓர் சிறிய கார் மாடலே இதுவாகும். ஐந்து பேர் வரை தாராளமாக அமர்ந்து இந்த காரில் பயணிக்கலாம். மேலும், இந்த இரண்டு கார் மாடல்களைக் காட்டிலும் சற்று அதிக விலைக் கொண்ட கார் மாடலாக சி5 ஏர்கிராஸ் எஸ்யூவி காட்சியளிக்கின்றது.

இதன் ஆரம்ப விலையே ரூ. 36.91 லட்சம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். நிறுவனத்தின் ஒரே ஒரு எலெக்ட்ரிக் கார் மாடலாக இ-சி3 இருக்கின்றது. இது ரூ. 12.69 லட்சம் தொடங்கி ரூ. 1.34 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. ஒட்டுமொத்தமாக ஏழு விதமான தேர்வுகளில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதன் அதிகபட்ச விலையே ரூ. 13.49 லட்சம் மட்டுமே ஆகும். இந்த விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய அதிக விலைமிக்க கார்களை விற்பனைச் செய்துக் கொண்டிருக்கும் சிட்ரோன் நிறுவனமே நம்ம தல தோனியை தன்னுடைய பிராண்ட் அம்பாசிடராக நியமித்து இருக்கின்றது.

இந்தியர்களை இவர் வாயிலாகக் கவர்ந்து விற்பனையை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே இந்த வேலையை அது பார்த்திருக்கின்றது. இந்தியாவில் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு பெரிய அளவில் அல்லாமல் கணிசமான அளவில் மட்டுமே வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. எனவேதான் அது இந்தியர்களைக் கவரும் விதமாக சில வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது.

அதில் ஒன்றே தற்போதைய சம்பவம். எனவே இனி நிறுவனத்தின் விளம்பரங்களில் தல தோனி காட்சி தருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலை சென்னையை அடுத்துள்ள திருவள்ளூரிலேயே அமைந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே தமிழகத்துடன் நெருக்கமாக இருப்பதைக் காண்பிக்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த தோனியை அது அம்பாசிடராக நியமித்து இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முன்னணி நிறுவனங்கள் இதுபோல் பிரபலங்களை தங்களின் பிரதிநிதிகளாக இந்தியாவில் முன்னிறுத்துவது புதிதல்ல. அந்தவகையில், சமீபத்தில் பிரபல தென்கொரிய கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாயும் அதன் பிராண்ட் அம்பாசிடராக இந்தி பட நடிகை தீபிக படுகோனை நியமித்திருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, April 22, 2024, 15:37 [IST]
English summary
Cricketer dhoni appointed as citroen india brand ambassador
மேலும்... #சிட்ரோன் #citroen #Local
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+