வேஷ்டி சட்டையில், சென்னையில் கலக்கிய முன்னாள் சிஎஸ்கே வீரர்!! இதற்காகவா இவ்வளவு தூரம் வந்தாரு...
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் அதன் புத்தம் புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரை கடந்த மே மாதத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கான முன்பதிவுகள் அப்போதே துவங்கப்பட்டுவிட்டன. அதனை தொடர்ந்து சில வாரங்கள் கழித்து கடந்த மே மாத இறுதியில் இருந்து மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார்களை புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கின. முதல் 2 நாள்களிலேயே 2,500க்கும் அதிகமான எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார்கள் டெலிவிரி செய்யப்பட்டுள்ளதாக நமது செய்தித்தளத்தில் கூட தெரிவித்து இருந்தோம்.
முதல் பேட்ஜ் கஸ்டமர்களுக்கு கார் டெலிவிரி கொடுக்கும் பணிகளை மஹிந்திரா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் பிராண்ட்-நியூ மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரை புக் செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் நிகழ்வில் பிரபல முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் கலந்துக் கொண்டு, கஸ்டமர்களுக்கு காருக்கான சாவியை வழங்கியுள்ளார்.

சென்னையில் உள்ள ஒரு மஹிந்திரா ஷோரூமில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் தமிழ்நாட்டு பாரம்பரிய வேஷ்டி மற்றும் துண்டை அணிந்துக் கொண்டு இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் கலந்துக் கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை மோட்டார் விகடன் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது.
இந்த நிகழ்வில் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் எதற்காக வந்தார் என நீங்கள் கேட்கலாம். ஆஸ்திரேலியா நாட்டிற்கான மஹிந்திரா நிறுவனத்தின் பிராண்ட் தூதர் மேத்யூ ஹைடன் ஆவார். இவரிடம் நிறைய மஹிந்திரா கார்கள் உள்ளன. மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த எக்ஸ்யூவி700 மற்றும் ஸ்கார்பியோ-என் கார்கள் மேத்யூ ஹைடனிடம் உள்ளன.

இந்தியாவில் இந்த ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட கார்களுள் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ ஆகும். முன்பு விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி300 காரின் அடுத்த தலைமுறை மாடலாக எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காருக்கான புக்கிங்குகள் கடந்த மே 15ஆம் தேதி துவங்கின.
புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருவதினால் புக்கிங் துவங்கப்பட்டு இன்னும் 1 மாதம் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில் 50,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் இந்த காருக்கு கிடைத்துள்ளது. புக் செய்த கஸ்டமர்களுக்கு எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் டெலிவிரி கொடுக்கும் பணிகள் கடந்த மே 26ஆம் தேதி துவங்கப்பட்டது.

இந்த புதிய காரை வாடிக்கையாளர்களிடத்தில் விரைவாக கொண்டு சேர்க்க மஹிந்திரா நிறுவனம் தீவிரமாக ஈடுப்பட்டு வருவதால், ஏற்கனவே கூறியதுபோல் இந்தியாவில் முதல் 2 நாட்களிலேயே 2,500க்கும் மேற்பட்டோருக்கு எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார்கள் சென்று சேர்ந்துள்ளன. புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஒ காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.7.49 லட்சத்தில் இருந்து ரூ.15.49 லட்சம் வரையில் உள்ளன.
முந்தைய எக்ஸ்யூவி300 காருடன் ஒப்பிடுகையில், இந்த புதிய மாடல் புதுமையான முன்பக்கத்தை பெற்றுள்ளது. இந்த மஹிந்திரா காரில் மிக முக்கியமான அம்சமாக லெவல் 2 அடாஸ் வழங்கப்படுகிறது. இந்த காரில் மொத்தம் 3 ஆற்றல்மிக்க டர்போ என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. சாதாரணமான நேச்சுரலி-அஸ்பிரேட்டட் என்ஜின் ஆப்ஷன்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எல்லா கார் பிராண்ட்களுக்கும் நிறைய நாடுகளில் தூதர்கள் உள்ளனர். இருப்பினும், மேத்யூ ஹைடன் போன்று இந்த அளவிற்கு வேறொரு நாட்டில் எதோ ஒரு மூலையில் டெலிவிரி செய்யப்படும் தங்களது பிராண்ட் கார்களின் டெலிவிரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு சிறப்பிப்பவர்கள் மிகவும் குறைவே. அதிலிலும், தமிழ்நாட்டு பாரம்பரியத்தில் வேஷ்டியில் வந்தார் பாருங்கள்... வீ லைக் யூ மேத்யூ ஹைடன்!!


Click it and Unblock the Notifications









