இந்தியாவில் யாரும் பெருசா கண்டுக்குறது இல்ல... வெளிநாட்டில் மஹிந்திரா காருடன் நிற்கும் இவர் யாரென்று தெரிகிறதா
மஹிந்திரா (Mahindra), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்று. இந்தியாவை தாண்டி, சில வெளிநாடுகளிலும் தனது நெட்வொர்க்கை மஹிந்திரா விரிவுப்படுத்தி உள்ளது. அத்தகைய நாடுகளுள் ஒன்றுதான் ஆஸ்திரேலியா ஆகும். ஆஸ்திரேலியாவில் மஹிந்திரா கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனை வெளிப்படுத்தும் விதமாக முன்னாள் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஒருவர் தனது மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Scorpio-N) காரை பிளாக் எடிசன் (Black Edition)-க்கு அப்கிரேட் செய்துக் கொண்டுள்ளார். யார் அந்த கிரிக்கெட் வீரர் என்பதையும், எவ்வாறு தனது ஸ்கார்பியோ-என் காரை அப்கிரேட் செய்துக் கொண்டுள்ளார் என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவை போன்று ஆஸ்திரேலியாவும் பெரிய மார்க்கெட் என்பதால் அங்கு தனது ஆதிக்கத்தை வலுப்படுத்த மஹிந்திரா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாகவே, முன்னாள் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் (Matthew Hayden)-ஐ அந்த நாட்டிற்கான பிராண்ட் தூதராக மஹிந்திரா நியமித்தது.

மேத்யூ ஹைடன் கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கான மஹிந்திராவின் பிராண்ட் தூதராக செயல்பட்டு வருகிறார். வழக்கமான பிராண்ட் தூதராக மட்டுமில்லாமல், மஹிந்திரா நிறுவனத்துடன் இன்னும் நெருங்கிய பிணைப்புடன் ஹைடன் பணியாற்றி வருகிறார். இதுவே அவரை 9 வருடங்களாக மஹிந்திரா உடன் பிணைத்து வைத்துள்ளது. இந்த 9 வருடங்களில் பல்வேறு மஹிந்திரா கார்களை மேத்யூ ஹைடன் மாற்றிவிட்டார்.
அதாவது, மார்க்கெட்டிற்கு புதியதாக வரும் மஹிந்திரா காரை உடனடியாக வாங்கிவிடும் பழக்கத்தை ஹைடன் கொண்டுள்ளார். இதன்படி, ஆஸ்திரேலியாவில் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் அறிமுகம் செய்ய உடனேயே அதனை வாங்கிய முதல் கஸ்டமர்களுள் மேத்யூ ஹைடனும் ஒருவர். இந்த நிலையில், தனது மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரை பிளாக் எடிசனுக்கு ஹைடன் தற்போது மாற்றிக் கொண்டுள்ளார்.

அதாவது, காரின் வெளிப்புற மற்றும் உட்புற தோற்றத்தில் சில மாற்றங்களை செய்துக் கொண்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ மஹிந்திரா ஆஸ்திரேலியா யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவின்படி பார்க்கும்போது, மேத்யூ ஹைடன் தனது ஸ்கார்பியோ-என் காரின் முன் மற்றும் பின்பக்க பம்பர்களை முன்பை காட்டிலும் ரக்ட்டான தோற்றத்திற்கு மாற்றியுள்ளார். இதற்கு ஏற்றாற்போல், வழக்கமான டயர்களுக்கு பதிலாக ஆஃப்-ரோடு டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இத்தகைய டயர்களை பெற்றுள்ள அலாய் சக்கரங்கள் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. காரை மேலும் ரக்டான தோற்றத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக ரூஃப் ரெயில்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் பொருட்களை வைத்து கொண்டு செல்லலாம். உண்மையில், மேத்யூ ஹைடன் இதனை காட்டிலும் ரக்டான தோற்றத்திற்கு தனது ஸ்கார்பியோ-என் காரை மாற்ற வேண்டும் என முதலில் விரும்பினார். ஆனால், அதன்பின் தனது சில முடிவுகளை மாற்றிக் கொண்டார்.

அதாவது, மற்ற வாகனங்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் காரின் முன்பக்கத்தில் பெரிய அளவில் புல் ராடை பொருத்த திட்டமிட்டார். நம் தமிழ்நாட்டில் இவ்வாறான புல் ராடை வாகனங்களில் பொருத்துவது அபராதத்திற்குரிய குற்றமாகும். இந்த புல் ராட் மட்டுமின்றி, இரவு நேரங்களில் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் செல்வதற்கு உதவியாக கூடுதல் விளக்குகளை வாகனத்தில் பொருத்தவும் ஆரம்பத்தில் திட்டமிட்டார்.
இரவு நேரங்களிலும் கரடு முரடான ஆஃப்-ரோடு பயணங்களை மேற்கொள்வது மேத்யூ ஹைடனுக்கு பிடித்தமான விஷயமாகும். ஆனால், புல் ராட் மற்றும் கூடுதல் விளக்குகளை பொருத்தும் திட்டத்தை பின்னர் மேத்யூ ஹைடன் தவிர்த்துள்ளார். இந்த ஸ்கார்பியோ-என் கார் தொடர்பான வீடியோவில், ஆஸ்திரேலியாவில் கொடுக்கும் பணத்திற்கு மஹிந்திரா ஸ்கார்பியோ-என் எந்த அளவிற்கு ஏறற கார் என்பதை மேத்யூ ஹைடன் புகழ்ந்து பேசியுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆஸ்திரேலியாவில் ஸ்கார்பியோ-என் காரின் விலை ஆனது 45 ஆயிரம் ஆஸ்திரேலியன் டாலர்கள் ஆகும். இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.26 லட்சம். நம் இந்தியாவில் இதனை காட்டிலும் குறைந்த விலையில் இந்த மஹிந்திரா கார் கிடைக்கிறது. பிராண்ட் தூதரான மேத்யூ ஹைடன் தற்போது மேற்கொண்டிருக்கும் மாடிஃபிகேஷன்களுக்கு ஆன செலவு எவ்வளவு என்பது வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications









