புது டிசையர் vs பழைய டிசையர்.. மாருதி இந்த அளவுக்கு முன்னேறும்னு யாருமே எதிர்பாக்கல!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம், அதன் புதிய தலைமுறை டிசையர் (Dzire) கார் மாடலை இந்தியாவில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. விலையில், பாதுகாப்பில் மற்றும் சிறப்பம்சங்களில் என அனைத்திலும் மிக சிறந்த வாகனமாக இதனை மாருதி சுஸுகி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. குறிப்பாக, முன்னதாக விற்பனையில் இருந்த டிசையர்-ரைக் காட்டிலும் பலநிலைகளில் சிறப்பு வாய்ந்த வாகனமாக புதிய டிசையர் தயார் செய்யப்பட்டு உள்ளது. இதனாலேயே இந்தியர்களின் கவனத்தை மிகப் பெரிய அளவில் கவர்ந்திருக்கின்றது புது டிசையர்.

இந்த பதிவில் புதிய டிசையர் மற்றும் பழைய டிசையர் இரண்டிற்கும் இடையில் உள்ள வித்தியாசங்களையே நாங்கள் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். அதாவது, என்னென்ன மாற்றங்களை புதிய தலைமுறை டிசையர் காரில் மாருதி சுஸுகி செய்திருக்கின்றது என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Current maruti dzire vs new dzire

புதிய டிசையர் தோற்றம் vs பழைய டிசையர் தோற்றம்: ஸ்விஃப்ட் காரை தழுவி உருவாக்கப்பட்ட சப்-4 மீட்டர் வகை செடான் ரக கார் மாடலே டிசையர் ஆகும். இதனாலேயே ஸ்விஃப்ட்-டை பிரதிபலிக்க டிசையர் தவறியதில்லை. ஆனால், புதிய டிசையர் அப்படி அல்ல. முற்றிலும் மாறுபட்ட லுக்கைக் கொண்டதாக இருக்கின்றது.

சொல்லப்போனால், மாருதி சுஸுகியின் புதிய தயாரிப்பைப் போல இது காட்சியளிக்கின்றது. இதற்கேற்ப தனித்துவமான அணிகலன்கள் மற்றும் அம்சங்களை மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது. கிரில், ஹெட்லைட், எல்இடி டிஆர்எல், குரோம் அணிகலன்கள், புதிய அலாய் வீல், கருப்பு நிற ஓஆர்விஎம் மற்றும் பி-பில்லர் உள்ளிட்டவற்றை தனித்துவமானதாக இது கொண்டிருக்கின்றது.

மிக முக்கியமாக இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் முன்பக்க முகப்பு லைட், பழைய ஆடி கார்களின் லைட் அமைப்பை பிரதிபலிக்கம் வகையில் இருக்கின்றது. இதேபோல், இதன் பின் பக்க அமைப்பையும் வேற லெலுக்கு மாற்றி இருக்கின்றது மாருதி சுஸுகி. 'ஒய்' வடிவ ஸ்டாப் லைட்டையும், குரோம் பூச்சுக் கொண்ட பட்டையையும் வழங்கி இருக்கின்றனர்.

அதேவேளையில், பழைய டிசையர் கார் மாடலில் இந்த அம்சங்கள் எதையும் பார்க்க முடியாது. முந்தைய தலைமுறை ஸ்விஃப்ட் எப்படி இருக்குமோ அப்படியே இதுவும் இருக்கும். கிரில், பான்னெட் மற்றும் ஹெட்லைட் செட்-அப் என அனைத்தும் அதையே பிரதிபலிக்கும். ஆனால், இப்போது விற்பனைக்கு வந்திருப்பது பெட்டி போன்ற பாக்ஸியான அமைப்பைக் கொண்டிருக்கும்.

பெரிய ரேடியேட்டர் வகை கிரில் மற்றும் ஸ்வெப்ட் பேக் வகை ஹெட்லேம்ப்பே ஆகியவையே பழைய டிசையரில் இடம் பெற்றிருக்கும். இத்துடன் பெரிய பனி மின் விளக்கும் தனியாக பம்பருக்கு அருகில் வழங்கப்பட்டு இருக்கும். இன்டிகேட்டர்கள் பின் பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகளில் வழங்கப்பட்டு இருக்கும். இந்த அம்சங்களே அப்போதைக்கு டிசையரை அதிக கவர்ச்சியான வாகனமாக காண்பித்தது. ஆனால், இதைவிட அழகானதாக புதிய டிசையர் தற்போது காட்சியளிக்கின்றது.

புதிய டிசையர் சிறப்பம்சம் vs புதிய டிசையர் சிறப்பம்சம்: இந்த விஷயத்தில் பல நிலைகளில் புதிய டிசையர் மேம்பட்டு காணப்படுகின்றது. பழைய டிசையர் கார் மாடலில் 7 அங்குல திரை மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், புதிய ஒன்றில் 9 அங்குல அளவிலான பெரிய திரை வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர, வயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதி, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, வயர்லெஸ் செல்போன் சார்ஜிங் மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், இந்த அம்சங்களை பழைய டிசையர் கார் மாடலில் பார்க்க முடியாது.

இதேபோல், புதிய டிசையர் கார் மாடலில் தட்டையான அடிப்பக்கம் கொண்ட ஸ்டியரிங் வீல், புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் வசதி, க்ரூஸ் கன்ட்ரோல், நடுத்தர டிஜிட்டல் திறன் கொண்ட கார் இணைப்பு அம்சம், ஒன்றுக்கும் மேற்பட்ட யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

தொடர்ந்து பாதுகாப்பு அம்சங்களையும் இந்த காரில் மிக தாராளமாக வாரி வழங்கி இருக்கின்றது மாருதி சுஸுகி. அந்தவகையில், 6 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுமாதிரியான அம்சங்களும், இந்த காரின் உறுதியான கட்டமைப்பின் காரணமாகவும் தற்போது 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை குளோபல் என்சிஏபி இடமிருந்து புதிய டிசையர் பெற்றிருக்கின்றது. ஆனால், பழைய டிசையர் பாதுகாப்பு அம்சத்தில் சற்று பின்தங்கியே உள்ளது. 2 ஏர் பேக்குகள், ஹில் ஹோல்டு அசிஸ்ட், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் போன்ற குறைவான அம்சங்களே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

புதிய டிசையர் எஞ்சின் vs பழைய டிசையர் எஞ்சின்: புதிய தலைமுறை டிசையர் கார் மாடலில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் இசட்12இ வகை எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதிலேயே பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில் பெட்ரோல் வெர்ஷன் 82 பிஎஸ் மற்றும 112 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

ஆனால், சிஎன்ஜி தேர்வு சற்றே குறைவாக 69.75 பிஎஸ் மற்றும் 101.8 என்எம் டார்க்கை வெளியேற்றும். முந்தைய வெர்ஷன் டிசையரிலும் இதேபோல் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டன. ஆனால், அதில் பயன்படுத்தப்பட்டது கேசீரிஸ் எஞ்சின் ஆகும். 1.2லிட்டர் 4 சிலிண்டர் மோட்டாரே அதில் பயன்படுத்தப்பட்டது. இது அதிகபட்சமாக 90 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகளே இதில் வழங்கப்பட்டன.

புதிய டிசையர் மைலேஜ் vs பழைய டிசையர் மைலேஜ்: சிறப்பம்சங்கள் பாதுகாப்பு திறனைப் போலவே மைலேஜ் தருவதிலும் புதிய டிசையரே பெஸ்ட்டானதாக உள்ளது. பழைய டிசையர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கே 22.5 கிலோ மீட்டர் வரை மைலேஜை வழங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது.

இதேபோல், சிஎன்ஜி 31.12 கிமீ வரை மைலேஜை தரும். ஆனால், புதிய டிசையர்-இன் பெட்ரோல் ஆப்ஷனோ 24 கிமீ முதல் 25 கிமீ வரையிலும், சிஎன்ஜி ஆப்ஷன் 34 கிமீ வரையிலும் மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இது அராய் சான்றளித்த மைலேஜ் விபரம் ஆகும்.

புதிய டிசையர் விலை vs பழைய டிசையர் விலை: சிறப்பம்சங்கள் அதிகரிப்பு, மைலேஜ் திறன் அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் இதன் விலையும் லேசாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில், ரூ. 6.57 லட்சம் என்கிற ஆரம்ப விலைக்கே கிடைத்து வந்த டிசையர், புதிய தலைமுறையினால் ரூ. 6.79 லட்சமாக உயர்ந்திருக்கின்றது. இதேபோல், இதன் உச்சபட்ச விலையும் ரூ. 10.14 லட்சமாக உயர்ந்திருக்கின்றது. முன்னதாக அது 9.34 லட்சமாக இருந்தது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி சுஸுகி டிசையர் கார் 16 ஆண்டுகளாக விற்பனையில் இருக்கின்றது. மிக சிறப்பான விற்பனை வரவேற்பைப் பெற்று வருவதன் காரணத்தினாலேயே இந்த கார் இத்தனை ஆண்டுகளாக சந்தையில் நிலைத்து நின்று வருகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இதற்கு கிடைக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் விதமாக புதிய தலைமுறை களமிறக்கப்பட்டு இருக்கின்றது. நல்ல டிமாண்ட் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 13, 2024, 16:00 [IST]
English summary
Current maruti dzire vs new dzire comprehensive comparison of specs price and design
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+