கை மாறும் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்.. எந்த நாட்டை சேர்ந்தவங்க வாங்க போறாங்க தெரியுமா?..
உலக புகழ்பெற்ற சூப்பர் கார் உற்பத்தி நிறுவனங்களில் மெக்லாரன் ஆட்டோமோட்டிவ் (McLaren Automotive)-ம் ஒன்றாகும். பஹ்ரைனை தளமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனமே வேறொருவரின் கைகளுக்கு மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிஒய்விஎன் ஹோல்டிங்ஸ் (CYVN Holdings) நிறுவனமே மெக்லாரன் நிறுவனத்தை வாங்க இருப்பதாகக் கூறப்படுகின்றது. நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்க இருப்பதாக அது உறுதியளித்திருக்கின்றது. சிஒய்விஎன் ஓர் அபுதாபி-யை மையமாகக் கொண்டு இயங்கும் முதலீட்டு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமே தற்போதைய மெக்லாரனின் உரிமையாளர்களான மும்தலகட் ஹோல்டிங் கம்பெனி (Mumtalakat Holding Company)யிடம் இருந்து வாங்க இருக்கின்றது.
பிரிட்டிஷ் மோட்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் மற்றும் மோட்டார் வாகன உலக வரலாற்றில் மிக முக்கியமான பங்கினை ஆற்றி வரும் நிறுவனமாக மெக்லாரன் உள்ளது. இதையே வேறொருவரின் கைகளுக்கு மாற்ற தற்போதைய உரிமையாளர்கள் முன் வந்திருக்கின்றனர். எனவே ஒட்டுமொத்த வாகன உலகின் கவனத்தையும் ஈர்க்கக் கூடிய ஓர் நிகழ்வாக இது அமைந்திருக்கின்றது.

மேலும், கொள்முதலுக்கு பின்னர் இந்த நிறுவனத்தை மிகப் பெரிய வளர்ச்சியை பாதையை நோக்கி புதிய உரிமையாளர்கள் அழைத்துச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மெக்லாரன் நிறுவனம் மட்டுமல்ல இந்த நிறுவனத்தை 100 சதவீதம் கையகம் செய்திருப்பதால் மெக்லாரன்-க்கு சொந்தமான ஃபார்முலா ஒன் (Formula One), ஃபார்முலா இ (Formula E), எக்ஸ்ட்ரீம் இ/எச் (Extreme E/H) மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்கள் (Sports Cars) உள்ளிட்ட ரேசிங் அமைப்புகளும் அவர்களுக்கு சொந்தமாக மாற இருக்கின்றது.
பிரபல கார் பந்தய வீரர் ப்ரூஸ் மெக்லாரனால் கடந்த 1963 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஓர் நிறுவனமே மெக்லாரன் ஆகும். இந்த 60 ஆண்டுகள் பழைமையான நிறுவனம் இந்தியாவில் சமீபத்திலேயே அதிகாரப்பூர்வமாக கால்தடம் பதித்தது. அது இந்தியாவில் இரண்டே கார் மாடல்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
ஆற்சுரா, ஆற்சுரா ஸ்பைடர், 750எஸ் மற்றும் 750எஸ் ஸ்பைடர் ஆகிய கார் மாடல்களையே அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் மிக மிக அதிக விலைமிக்கவையாகக் காட்சியளிக்கின்றன. 5-6 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலைக் கொண்டதாகவே நிறுவனத்தின் சூப்பர் கார்கள் நாட்டில் விற்கப்படுகின்றன.
உதாரணமாக நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான மெக்லாரன் ஆர்சுரா இந்தியாவில் ரூ. 6 கோடி எனும் தொடக்க விலையில் இருந்து விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மணிக்கு 330 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்ட காரே இதுவாகும்.
இத்தகைய கார் மாடலையே சமீபத்தில் ஓர் தொழிலதிபர் டெலிவரி பெற்றிருந்தார். டீடெய்லிங் டெவில்ஸ் உரிமையாளர் சௌரப் அஹூஜா என்பவருக்கே இந்த கார் சமீபத்தில் டெலிவரி வழங்கப்பட்டது. இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்ட வெறும் 3 செகண்டுகளே போதுமானது. இத்தகைய அதிக வேகத்தில் செல்லும் திறன் கொண்ட கார்களையே இந்த உலகத்தில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது மெக்லாரன்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன உலகின் மிக முக்கியமான நிகழ்வாக இது அமைய இருக்கின்றது. 60 ஆண்டுகள் பழைய வாகன உற்பத்தி நிறுவனம் வேறொரு நிறுவனத்தின் கைகளுக்கு மாற இருக்கின்றது. அதாவது, பிரிட்டிஷ் நிறுவனம் இனி வரும் நாட்களில் அபுதாபி நிறுவனம் என அழைக்கப்பட இருக்கின்றது. கடந்த காலத்தில் இதேபோல் இங்கிலாந்தைச் சேர்ந்த எம்ஜி நிறுவனம் சீன நிறுவனத்தின் கைகளுக்கு மாறியது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








