சென்னை சாலையில் முழுசா மறைத்தபடி பார்க் செய்யப்பட்டிருந்த மர்ம கார்.. டாடாவுக்கு இதுதான் போட்டியா!
இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி மின்சார கார் பிரிவின் தலைவனாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-ஸே இருக்கின்றது. இந்த பிராண்டே அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடல்களை நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. மேலும், மலிவு விலையிலும் அது எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே டாடாவின் விலை குறைவான எலெக்ட்ரிக் காருக்கு போட்டியளிக்கும் விதமாக ரெனால்ட் (Renault) நிறுவனம், அதன் மலிவு விலை எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதை உறுதிப்படுத்தும் விதமாக டாசியா (Dacia)-வின் சிறிய உருவம் கொண்ட எலெக்ட்ரிக் கார் ஒன்று இந்தியா கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இந்தியாவில் வைத்து சோதனையோட்டம் செய்யவே இந்த வாகனத்தை ரெனால்ட் கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சோதனையோட்டம் வெற்றிக்கு பின் அந்த கார் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Source: Team BHP நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் கார் மாடல்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. சென்னையிலேயே இந்த சோதனையோட்ட கார் மாடல் காட்சி தந்திருக்கின்றது. மேலும், அது டாசியாவின் எம்பளத்துடன் இருப்பதையும் நம்மால் காண முடிகின்றது. உடல் முழுக்க ஸ்டிக்கர்களால் மறைக்கப்பட்டு இருந்தாலும், எம்பளம் மட்டும் தெளிவாக தெரியும் வகையில் இருக்கின்றது.
ஆனால், இது விற்பனைக்கு வரும்போது ரெனால்ட் கார் பிராண்டில் க்விட் இவி (Kwid EV) எனும் பெயரிலேயே விற்பனைக்கு வரும். உலக சந்தையில் டாசியா ஸ்பிரிங் இவி-யின் விற்பனை ஏற்கனவே தொடங்கிவிட்டது. பல நிலைகளில் க்விட் கார் மாடலுடன் ஒத்துப்போகின்ற வகையிலேயே இதன் தோற்றம் இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதை உறுதிப்படுத்தும் விதமாகவே இப்போது வெளியாகி இருக்கும் படங்கள் அமைந்திருக்கின்றன. குறிப்பாக, குட்டியான உருவ தோற்றத்தில் இரண்டு கார் மாடல்களும் ஒத்துப்போகின்றன. அழகிய எல்இடி ஹெட்லைட், பம்பருடன் பொருத்தப்பட்ட நிலையில் இந்த காரில் இடம் பெற்றிருக்கும். இதுதவிர, தனித்துவமான லுக்கிலான டிஆர்எல்கள் ஹெட்லைட்டிற்கு மேலே இடம் பெற்றிருக்கும்.
இவையே இந்த காருக்கு தனித்துவமான தோற்றத்தை வழங்குகின்றன. தொடர்ந்து, இந்த காருக்கு கூடுதலாக கவர்ச்சியான லுக்கை வழங்கும் விதமாக கருப்பு நிற பிளாஸ்டிக் கிளாடிங், 'சி' வடிவ வீல் ஆர்ச்சுகள் மற்றும் ஸ்டைலான அலாய் வீல்கள் ஆகியவை இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன.

வெளிப்புறத்தைப் போலவே இந்த காரின் உட்பக்கமும் கவர்ச்சிக்கும், பிரீமியம் அம்சங்களுக்கும் குறைச்சலின்றி காணப்படுகின்றது. அந்தவகையில், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல், ஃப்ரீ ஸ்டாண்டிங் வகை தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் கார் இணைப்பு தொழில்நுட்பம் ஆகியவையே டாசிய ஸ்பிரிங் இவி கொண்டிருக்கின்றது.
இதேபோல், இந்த கார் ரேஞ்ஜை தருவதிலும் தலை சிறந்ததாக இருக்கும் என கூறப்படுகின்றது. அதாவது, குட்டியான எலெக்ட்ரிக் காராக இருந்தாலும் இந்த காரில் ஓர் முழு சார்ஜில் 220 கிமீ தூரம் வரை பயணிக்க முடியுமாம். இதற்காக 26.8 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் இந்த காரில் வழங்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது.
உலக சந்தையில் டாசியா ஸ்பிரிங் இவி இரண்டு விதமான எலெக்ட்ரிக் மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இரண்டிலும் இந்த பேட்டரி பேக் தேர்வு மட்டுமே வழங்கப்படுகின்றன. இதே ஆப்ஷன்களுடனேயே ரெனால்ட் க்விட் இவி-யும் இந்தியாவை அலங்கரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இப்போதைக்கு இந்த காரின் துள்ளியமான வருகை நாள் பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. விரைவில் இதுபற்றிய தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. க்விட் இவி விற்பனைக்கு வரும்பட்சத்தில் இந்தியாவில் டாடா டியாகோ இவி (Tata Tiago EV)-க்கு போட்டியாக அமையும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெனால்ட் பிராண்டை டாசியா நிறுவனம் 1999 ஆம் ஆண்டிலேயே கையகப்படுத்திவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் அடிப்படையிலேயே ரெனால்ட் பிராண்டில் டாசியாவின் கார்கள் ரீ-பேட்ஜ் செய்யப்பட்டு உலக சந்தைகள் சிலவற்றில் விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையிலேயே இந்தியாவில் ஸ்பிரிங் இவி, க்விட் இவி எனும் பெயரில் விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









