அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போடும் இந்தியா... உலகத்தையே திரும்பி பாக்க வெச்சுட்டாங்க...
இந்தியாவில் பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) வாகனங்களால் சுற்றுச்சூழல் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாட்டை அரசு ஊக்குவித்து கொண்டுள்ளது. முக்கியமாக பொது போக்குவரத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகளவில் புகுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த விஷயத்தில் டெல்லி (Delhi), இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்கிறது. டெல்லியில் ஏற்கனவே நிறைய எலெக்ட்ரிக் பஸ்கள் (Electric Buses) இயங்கி வருகின்றன. இந்த சூழலில், தற்போது புதிதாக 350 எலெக்ட்ரிக் பஸ்கள் அங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் டெல்லியில் இயங்கும் ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கை 1,650 ஆக உயர்ந்துள்ளது.

புதிய எலெக்ட்ரிக் பஸ்கள் அறிமுக நிகழ்ச்சியில், டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) மற்றும் கவர்னர் வினய் குமார் சக்ஸேனா (Vinai Kumar Saxena) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ''தற்போது 350 எலெக்ட்ரிக் பஸ்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் டெல்லி சாலைகளில் இயங்கும் ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கை 1,650 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படும் நகரம் என்ற பெருமையை டெல்லி பெற்றுள்ளது. இது நிச்சயமாக சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்தும்'' என்றார்.

இது குறித்து கவர்னர் வினய் குமார் சக்ஸேனா கூறுகையில், ''சுற்றுச்சூழலை பாதுகாப்பதில், இந்த எலெக்ட்ரிக் பஸ்கள் பெரிய அளவில் பங்களிப்பை வழங்கும். இது போன்ற நடவடிக்கைகள் மூலமாக சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்துவோம்'' என்றார். டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய எலெக்ட்ரிக் பஸ்களில், ஜிபிஎஸ், டிஸ்க் பிரேக்குகள் உள்பட ஏராளமான வசதிகள் உள்ளன.
தீ பிடித்தால் அதை கண்டறிந்து, அலாரம் அடித்து எச்சரிக்கை செய்யும் வசதியும் இந்த புதிய எலெக்ட்ரிக் பஸ்களில் இருக்கிறது. இந்திய அளவில் பார்த்தால், அதிக அளவு எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படும் நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. அதே நேரம் உலக அளவில் பார்த்தால், இந்த பட்டியலில் டெல்லி தற்போது 3வது இடத்தில் இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எலெக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்து கொண்டே செல்லும் நடவடிக்கை உண்மையிலேயே மிகவும் பாராட்டுக்குரியது. இந்தியாவின் மற்ற நகரங்களிலும் இதே போன்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்தாக உள்ளது. இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்னையை சமாளிக்கலாம்.
டெல்லியில் தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள எலெக்ட்ரிக் பஸ்களின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) சுமார் 250 கிலோ மீட்டர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் கொண்ட எலெக்ட்ரிக் பஸ்கள், நகர பகுதிகளில் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால், 2 முக்கியமான நன்மைகள் கிடைக்கும். சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்னையை குறைக்கலாம் என்பது முதல் நன்மை. பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடும் தொகையை குறைக்கலாம் என்பது 2வது நன்மை ஆகும்.


Click it and Unblock the Notifications








