இந்தியாவிலேயே சொகுசு காரை தயாரிக்க தொடங்கிட்டாங்க! பணக்காரர்களுக்கு இனி கொண்டாட்டம்தான்!
சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான லேண்ட் ரோவர் (Land Rover). சமீபத்தில் அதன் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Range Rover Sport) கார் மாடலின் உற்பத்தியை இந்தியாவில் தொடங்கியது. மஹாராஷ்டிரா மாநிலம் புனேவிலேயே இந்த கார் உற்பத்தி நடைபெறுகின்றது. இதற்கு முன்னதாக வெளிநாடுகளில் இருந்தே இந்த கார் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைச் செய்யப்பட்டது. இந்தநிலையிலேயே இந்தியர்களிடத்திடம் இந்த கார் மாடலுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியது. இந்த வரவேற்பை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டும், அதை இரட்டிப்பாக்கும் பொருட்டே இந்த காரின் உற்பத்தியை உள்ளூர் மயமாக்கும் முயற்சியில் நிறுவனம் களமிறங்கியது.
தற்போது அந்த பணிகள் வெற்றிகரமாக இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியாவில் வைத்து தயாரிக்கப்பட்ட லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரின் டெலிவரி பணிகள் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உள்ளூரில் வைத்து தயாரிக்கப்படும் இந்த கார் மாடலுக்கு ரூ. 1.4 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இந்த கார் மாடலை லேண்ட் ரோவர் நிறுவனம் இரண்டு விதமான எஞ்சின் தேர்வுகளில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. 3.0 லிட்டர் பெட்ரோல் டைனமிக் எஸ்இ மற்றும் 3.0 லிட்டர் டீசல் டைனமிக் எஸ்இ ஆகியவையே அவை ஆகும். இதில் முதலில் பார்த்த மோட்டார் அதிகபட்சமாக 294 kW மற்றும் 550 என்எம் டார்க்கை உருவாக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இருக்கும் இந்த ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் சாலையில் தென்படும் போது தனித்துவமான லுக்கை வழங்கும் என நிறுவனத்தால் கூறப்படுகின்றது. இதற்கேற்ப பெரிய வீல்கள், கவர்ச்சிகரமான பாடி பேனல், டோருடன் டோராக ஒட்டிக் கொண்டிருப்பதை போல இருக்கும் ஃப்ளஷ் வகை கைப் பிடிகள், டிஆர்எல் உடன் கூடிய ஹெட்லைட், முறுக்கு மூசை போன்ற கிரில், குறுந்தாடி போன்ற பம்பர் உள்ளிட்டவற்றை இந்த கார் பெற்றிருக்கின்றது.
தொடர்ந்து, இந்த காருக்கு கூடுதல் கவர்ச்சியான தோற்றத்தை வழங்கும் விதமாக கருப்பு நிற மேற்கூரை, கருப்பு நிற கண்ணாடி ஆகியவற்றையும் லேண்ட் ரோவர் வழங்கியிருக்கின்றது. இவையே சாலையில் இந்த கார் பயணிக்கும்போது பார்வையாளர்களைக் கவரக் கூடியதாக இருக்கின்றது. இந்த காரை தன்னுடைய புகழ் பெற்ற எம்எல்ஏ ஃப்ளக்ஸ் பிளாட்பாரம் தளத்தைப் பயன்படுத்தியே ரேஞ்ஜ் ரோவர் தயார் செய்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த தளத்தின் வாயிலாக அது மிகுந்த அதிக சொகுசு வசதிகள் மற்றும் கவர்ச்சியான காராகவும் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் எல்இடி ஹெட்லைட் மிகவும் மெல்லியதாக தோன்றினாலும் அது அதிக பார்வை திறனை வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
தொடர்ந்து, இந்த காரில் மிக சிறந்த ரைடு அனுபவத்தை வழங்கும் விதமாக ப்ரீ-எம்ப்டீவ் வகை சஸ்பென்ஷன் செட்-அப்பே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோலும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, இன்னும் பல அட்வான்ஸ்டு அம்சங்களையும் இந்த கார் தன்னுள் தாங்கி இருக்கின்றது.
அந்தவகையில், பிவி ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டாஷ்போர்டின் மையத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது. 33.27 செமீ அளவுக் கொண்ட அது தொடுதிரை வசதிக் கொண்டது. இந்த திரை வாயிலாக மீடியாவைக் கன்ட்ரோல் செய்தல் மற்றும் கார் சிறப்பம்சங்களைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவற்றைச் செய்துக் கொள்ள முடியும்.
இவை பயணிகளுக்கு வேற லெவல் பயண அனுபவத்தை வழங்கும். இத்துடன் கூடுதல் பிரீமியமான ரைடு அனுபவத்தை வழங்கும் பொருட்டு இந்த காரில் அடுத்த தலைமுறை கேபின் ஏர் ப்யூரிஃபிகேஷன் கருவி, அனைத்து பயணிகளுக்கும் நல்வாழ்வை உறுதி செய்யும் உகந்த ஓட்டுநர் சூழலை பராமரிக்கிறது.
இந்த அம்சம் ரேஞ்ச் ரோவரின் ஆடம்பரமான ஓட்டுநர் அனுபவத்தை வழங்குவதற்கான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த புதிய மாடலின் அறிமுகமானது, வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப உலகத்தரம் வாய்ந்த சொகுசு வாகனங்களை வழங்கும் அதே வேளையில், இந்தியாவில் அதன் தடத்தை விரிவுபடுத்துவதில் ரேஞ்ச் ரோவரின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் இந்தியாவில் உள்ள புனே ஆலையில் வைத்தே தயாரிக்கப்படுகின்றது. இந்தியர்களின் ஃபேவரிட் கார் சொகுசு கார் மாடலாக ரேஞ்ச் ரோவர் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, திரைப் பிரபலங்களின் மிகவும் பிரியமான கார் மாடலாக இது இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே உள்ளூரில் வைத்து உற்பத்தி செய்யப்பட்ட ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்டின் டெலிவரி பணிகள் தொடங்கி இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








