நாளை முதல் சென்னை விமான நிலையத்தில் வரப்போகும் மாற்றம்! இனி பயணிகளுக்கு தொல்லையே இல்லை!

சென்னை விமான நிலையத்தில் வரும் மார்ச் 31-ம் தேதி முதல் டிஜி யாத்ரா ஆப் மூலம் பயணிகள் பிரச்சனை இல்லாத என்று அனுபவத்தை பெற முடியும் என தற்போது சிவில் ஏவிகேசன் அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பொதுவாக ஒரு பயணி விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்றால் அவர் விமான டிக்கெட்டை புக் செய்தவுடன் விமான நிலையத்திற்கு செல்லும் போது அங்கு பல்வேறு விதமான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவர் டிக்கெட்டை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் காட்டினால், தான் அவர் விமானத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படுவார். பின் அங்கிருந்து அவர் செக்கின், போர்டிங் பாஸ் என பல்வேறு நிலைகளைக் கடந்து தான் விமானத்தில் ஏற வேண்டும்.

digi yatra in chennai airport

இப்படியாக விமானத்தில் ஒரு பயணி பயணிக்க ஏகப்பட்ட ஆவணங்களை வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இந்நிலையில் பயணிகள் பிரச்சனை இல்லாமல் விமானத்தில் ஏறுவதற்காக டிஜி த்ரா என்ற புதிய ஆப் ஒன்றை மத்திய அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது. இந்த ஆப் மூலம் பயணிகள் தங்கள் தரவுகளை ஒரு தடவை அப்டேட் செய்தால் எங்கு சென்றாலும் அங்கு இந்த ஆப் மூலம் தனது தரவுகளை சரி பார்த்துக் கொள்ள முடியும்.

இப்படியாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை விமான நிலையத்தில் சோதனை முயற்சியாக இந்த ஆப் மூலம் பயணிகள் விமானத்திற்குள் நுழையும் வரை அனைத்து சேவைகளும் சோதனை செய்யப்பட்டன. இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் வரும் 31 ஆம் தேதி முதல் சென்னை விமான நிலையத்தில் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் டிஜி யாத்ரா ஆப்பை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

digi yatra in chennai airport

இந்த டிஜி யாத்திரா ஆப் மூலம் காண்டாக்ட் இல்லாத சிரமம் இல்லாத மூவ்மெண்ட்டை பல்வேறு செக் பாயிண்ட்களில் பயன்படுத்த முடியும். முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பமும் இதில் உட்பகுவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியா முழுவதும் 13 விமான நிலையங்களில் இந்த டிஜி யாத்திரை சேவை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அதில் சென்னை விமான நிலையமும் இணைந்துள்ளது.

இந்த அறிவிப்பை தான் தற்போது சிவில் ஏவியேஷன் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி வரை இந்த டிஜி யாத்திரை ஆப்பை சுமார் 45.8 லட்சம் பயணிகள் தங்கள் செல்போனில் இன்ஸ்டால் செய்துள்ளனர். இதுவே ஜனவரி 1ம் தேதி வெறும் 38 லட்சம் தான் இருந்தது. ஒரே மாதத்தில் சுமார் 20.5% இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.

மொத்தம் உள்ள 45.8 லட்சம் டவுன்லோட்களில் 21.1 லட்சம் டவுன்லோட் ஆண்ட்ராய்டு போன்களிலும் 24.6 லட்சம் டவுன்லோட் ஆப்பிள் ஐஓஎஸ் செல்போன்களிலும் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிஜி யாத்ரா ஆப் முதன்முதலில் டெல்லி, பெங்களூரு மற்றும் வாரணாசி விமான நிலையங்களில் கடந்த 2022-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு 10 விமான நிலையங்களில் இது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

மேலும் அடுத்த 14 விமான நிலையங்களில் இது அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து புவனேஸ்வர்,கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களிலும் இந்த டிஜி யாத்ரா சேவை வரும் மார்ச் மாதம் அறிமுகம் ஆகிறது. தொடர்ந்து இது இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டிஜி யாத்திரா சேவை இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் அமலுக்கு வந்து விட்டால் இனி இந்தியாவில் ஒவ்வொரு முறையும் டிக்கெட் கிடைக்கும் அல்லது மற்ற ஆவணங்களை கையில் வைத்துக் கொண்ட ஒரு விமான நிலையங்களுக்குள் பயணிகள் செல்ல வேண்டிய தேவை இருக்காது. நேரடியாக இந்த ஆப் மூலமே விமான நிலையத்திற்கு செல்லலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது டிஜிட்டல் மையமாகக்கள் என்பது அதிகரித்து வருகிறது. அதன் ஒரு படியாக மத்திய அரசு என்ற ஆப்பை விமான நிலையங்களுக்காக அறிமுகப்படுத்தியது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது. எதிர்காலத்தில் இது அனைவருக்கும் ஒரு முக்கிய அழகாக மாறும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, March 30, 2024, 7:00 [IST]
English summary
Digi yatra chennai airport contactless travel starts march 31
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+