ஏத்துன வேகத்துலயே விலையை குறைச்சிட்டாங்க! மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியப்போகுது!

மாருதி நிறுவனம் இந்த பிப்ரவரி மாதம் தனது அரேனா ஷோரூம்கள் வழியாக விற்பனை செய்யப்படும் வாகனங்களுக்கான தள்ளுபடி விலையை அறிவித்துள்ளது. அதன்படி ஆல்டோ கே10, எக்ஸ்பிரெஸ்ஸொ, செலிரியோ, ஸ்விஃப்ட், வேகன்ஆர், டிசையர் போன்ற கார்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. பிரெஸ்ஸா மற்றும் எர்டிகா கார்களுக்கு எந்த விதமான தள்ளுபடிகளும் வழங்கப்படவில்லை. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஆல்டோ கே10: மாருதி ஆல்டோ கே10 காருக்கு இந்த பிப்ரவரி மாதம் ரூபாய் 62 ஆயிரம் வரை தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் நேரடி கேஷ் தள்ளுபடி 40,000, எக்சேஞ்ஜ் போனதாக ரூ15,000, கார்ப்பரேட் தள்ளுபடி 7000 தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் சிஎன்ஜி வேரியன்டிற்கு ரூபாய் 40,000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது கேஷ் தள்ளுபடியாக 18,000, எக்ஸசேஞ்ஜ் போனஸ் ரூ 15,000 கார்பரேட் தள்ளுபடி ரூ7000 என பிரித்து வழங்கப்படுகிறது.

Discounts On Maruti Arena Cars Feb 2023

எஸ்பிரெஸ்ஸோ: மாருதி எஸ்பிரெஸ்ஸோ காருக்கு ரூபாய் 61 ஆயிரம் வரை தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி காருக்கு ரூ 39 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் காரை பொருத்தவரை ரூபாய் 40 ஆயிரம் கேஷ் தள்ளுபடியாகவும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியாகவும், ரூபாய் 6000 கார்ப்பரேட் தள்ளுபடியாகவும் வழங்கப்படுகிறது.

சிஎன்ஜி வேரியன்டை பொறுத்தவரையில் ரூ 18,000 கேஷ் தள்ளுபடியும், ரூபாய் 15,000 எக்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூபாய் 6000 கார்பரேட் தள்ளுபடியாக வழங்கப்படுகிறது. இந்த கார் ரூபாய் 4.26 லட்சம் முதல் ரூ 6.11 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

Discounts On Maruti Arena Cars Feb 2023

மாருதி வேகன்ஆர்: மாருதி நிறுவனத்தின் வேகன்ஆர் கார் இந்த மாதம் ரூபாய் 61ஆயிரம் தள்ளுபடி விலையில் விற்பனையாகி வருகிறது. பெட்ரோல் ஏஎம்டி வேரியன்டிற்கு ரூ 40,000 கேஷ் தள்ளுபடியாகவும், எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி ரூ15,000, கார்பரேட் தள்ளுபடி ரூ 6000 தள்ளுபடியாக வழங்கப்படுகிறது.

சிஎன்ஜி காருக்கு ரூ 56,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.கேஷ் தள்ளுபடி ரூ30,000, எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி ரூ20,000, கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூபாய் 6000 வழங்கப்படுகிறது. இந்த கார் தற்போது ரூபாய் 5.54 லட்சம் முதல் ரூபாய் 8.50 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

Discounts On Maruti Arena Cars Feb 2023

மாருதி செலிரியோ: மாருதி நிறுவனத்தின் செவிலியோ காருக்கு ரூ61,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது பெட்ரோல் வேரியன்ட்களுக்கான தள்ளுபடியாகவும் ஏற்கனவே எக்ஸ்பிரெஸ்ஸோ, வேகன் ஆர் கார்களுக்கு எப்படி தள்ளுபடி வழங்கப்படுகிறது அதே போல தான் இந்த காருக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் சிஎன்ஜி வேரியன்டிற்கு ரூ36,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த செலிரியோ கார் தற்போது ரூ5.36 லட்சம் முதல் ரூ7.10 லட்சம் என்ற வேளையில் விற்பனை ஆகி வருகிறது.

ஸ்விஃப்ட் மற்றும் டிசையர்: மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் காருக்கு இந்த பிப்ரவரி மாதம் கூடுதலாக 42 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு 15,000 நேரடியாக கேஷ் தள்ளுபடியாகவும் ₹20,000 எக்ஸ் சேஞ்ச் தள்ளுபடியாகவும் ரூபாய் 7000 கார்பரேட் தள்ளுபடியாகவும் வழங்கப்பட்டுள்ளன. சிஎன்ஜி வேரியண்டிற்கு நேரடியான கேஷ் தள்ளுபடிகள் எதுவும் இல்லை. ஆனால் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியாக ரூபாய் 15,000 மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூ 7000 வழங்கப்படுகிறது.

அடுத்ததாக டிசையர் காரை பொறுத்தவரை ரூபாய் 37,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது நேரடியாக ரூபாய் 15,000 கேஷ் தள்ளுபடியாக ரூபாய் 15,000 எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியாகவும் ரூபாய் 7000 கார்ப்பரேட் தள்ளுபடியாகவும் வழங்கப்படுகிறது. விரைவில் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார் புதுப்பிக்கப்பட்டு விற்பனைக்கு வர உள்ளதால் தற்போது இந்த தள்ளுபடிகள் வழங்கப்பட்டு அதன் விற்பனையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மாருதி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் தான் தனது வாகனங்களுக்கான விலையை ஏற்றிய நிலையில் பிப்ரவரி மாதமே அந்த விலையை குறைக்கும் வகையில் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. ஆனால் இது தற்காலிக தள்ளுபடி தான் இந்த மாதம் மட்டும் தான் இந்த தள்ளுபடி தள்ளுபடியாகும் அடுத்த மாதத்திற்கு தள்ளுபடிகள் அடுத்த மாதம் தான் அறிவிக்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வாகன விற்பனை இலக்கை ஏற்றுவதற்காக அந்த மாத விற்பனை டிரெண்டை பொறுத்து தள்ளுபடிகளை வழங்கி வருகின்றன. தள்ளுபடிகளை வழங்குவதன் மூலம் நாங்கள் எதிர்பார்க்கும் அளவை விட கூடுதல் அளவில் விற்பனையை செய்ய முடியும் என கணக்கிடுகிறது. இதனால் தான் ஒவ்வொரு மாதமும் வேறு வேறு விதமான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனத்தின் கார்களின் விலை கடந்த மாதம் அதிகரிக்கப்பட்ட நிலையில் தற்போது அதை குறைப்பதற்காக தள்ளுபடிகளை அறிவித்துள்ளன விலை அதிகம் இயற்றப்பட்டதால் அதனால் விற்பனை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தற்காலிகமாக இந்த முடிவை மாருதி நிறுவனம் எடுத்துள்ளது. இதுதான் குறைந்த விலையில் மாருதி கார்களை வாங்க ஒரு நல்ல நேரமாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Sunday, February 11, 2024, 16:11 [IST]
English summary
Discounts maruti arena cars feb 2023 details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X