கடன் வாங்காமலேயே கார் வாங்கலாம்! இவ்வளவு கம்மி ரேட்டுக்கு வித்தா ஃபுல் கேஷ் குடுத்துடலாமே!

இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில், பலர் இந்த காலகட்டத்தில் புதிதாக வாகனம் வாங்கும் எண்ணத்தில் இருப்பார்கள். இதனால் இந்த காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் விற்பனையாகும் குறிப்பாக தீபாவளி, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு பலர் புதிய வாகனங்களை வாங்குவார்கள். இந்த காலகட்டத்தில் விற்பனையை அதிகரிக்க வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தள்ளுபடிகளை அறிவித்துள்ளன. அதன்படி ரூபாய் 1 லட்சத்துக்கு அதிகமான தள்ளுபடிகளை அறிவித்துள்ள கார்கள் குறித்த பட்டியலில் காணலாம்.

ஹோண்டா சிட்டி என்ற செடான் காருக்கு ரூபாய் 1.14 லட்சம் வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த கார் தற்போது இந்திய மார்க்கெட்டில் ரூபாய் 11.82 லட்சம் முதல் ரூபாய் 16.32 லட்சம் வரை விற்பனையாகிறது. ஹைபிரிட் மாடல் மட்டும் ரூபாய் 20.55 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது.

Diwali Car Discount

அடுத்ததாக டாடா நெக்ஸான் காரை பொறுத்தவரை ரூபாய் 1.15 லட்சம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த கார் மார்க்கெட்டில் ரூபாய் 8 லட்சம் முதல் ரூபாய் 15.8 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. பலர் இந்த காரை வாங்க வாய்ப்புள்ளது.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை பொருத்தவரை 1.2 லட்சம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த கார் மார்க்கெட்டில் ரூபாய் 10.90 லட்சம் முதல் 19.15 லட்சம் என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது. நிஸான் மேக்னைட் காரை பொருத்தவரை பொருத்தவரை ரூ1.25 லட்சம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த கார் ரூபாய் 6 லட்சம் முதல் ரூபாய் 10.66 லட்சம் என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது.

Diwali Car Discount

மாருதி நிறுவனத்தின் கிராண்டு விட்டாரா காருக்கு ரூபாய் 1.27 லட்சம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த கார் மார்க்கெட்டில் 10.99 லட்சம் முதல் 19.93 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.கியா செல்டோஸ் காரை பொருத்வரை 1.3 லட்சம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த கார் 10.90 லட்சம் முதல் ரூபாய் 20.34 லட்சம் என்ற விலையில் மார்க்கெட்டில் விற்பனையாகி விடுகிறது.

சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் காரை பொருத்தவரை ரூபாய் 1.5 லட்சம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த கார் ரூபாய் 8.49 லட்சம் முதல் 14.55 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது. டாடா சஃபாரி காரை பொறுத்தவரை ரூபாய் 1.65 லட்சம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த கார் மார்க்கெட்டில் ரூ 15.49 லட்சம் முதல் ரூ 27.34 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது.

Diwali Car Discount

எம்ஜி ஹெக்டர் காரை பொறுத்தவரை ரூபாய் 2 லட்சம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி இந்த கார் ரூபாய் 13.9 லட்சம் முதல் ரூபாய் 22.93 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. எம்ஜி ஜிம்னி காரை பொருத்தவரை 2.5 லட்சம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த கார் மார்க்கெட்டில் ரூ 12.74 லட்சம் முதல் ரூ 14.79 லட்சம் வரையில் விற்பனையாகி வருகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 400 காரை பொறுத்தவரை ரூ3 லட்சம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி இந்த கார் ரூ 16.74 லட்சம் முதல் ரூ 17.49 லட்சம் என்ற விலையில் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. அடுத்ததாக மெர்சிடிஸ் ஏ கிளாஸ் லிமோஷைன் காருக்கு ரூபாய் 3 லட்சம் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அதேபோல மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் காருக்கும் ரூபாய் 3 லட்சம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த கார் ரூபாய் 61.85 லட்சம் முதல் ரூபாய் 69 லட்சம் வரை மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. டொயோட்டா கேம்ரி காரை பொருத்தவரை ரூ 3 லட்சம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த கார் ரூபாய் 46.17 லட்சம் என்ற விலையில் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு வருகிறது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரை பொருத்தவரை ரூ 3.07 லட்சம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த கார் ரூபாய் 10.90 லட்சம் முதல் ரூ18.70 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. அடுத்ததாக ஜீப் காம்பஸ் காரை பொறுத்தவரை ரூ 3.15 லட்சம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த கார் ரூ18.99 லட்சம் முதல் ரூபாய் 32.42 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

அடுத்ததாக எம்ஜி குளோஸ்டர் காருக்கு ரூபாய் 6 லட்சம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த கார் 38.80 லட்சம் முதல் ரூபாய் 43.16 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது.டொயோட்டா ஹில்லிக்ஸ் காருக்கு ரூ 7 லட்சம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த கார் ரூ 30.40 லட்சம் முதல் ரூபாய் 37.90 லட்சம் என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது.

கியா நிறுவனத்தின் இவி6 காரை பொருத்தவரை ரூபாய் 10 லட்சம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த கார் ரூபாய் 60.7 லட்சம் முதல் ரூபாய் 65.97 லட்சம் என்ற வேளையில் விற்பனையாகி வருகிறது.இருப்பதிலேயே அதிகபட்சமாக ஜீப் நிறுவனத்தின் கிராண்டு செரோக்கி காருக்கு ரூபாய் 12 லட்சம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி இந்த கார் ரூபாய் 80.50 லட்சம் என்ற விலையில் இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தீபாவளிக்கு நீங்கள் புதிதாக கார் வாங்கும் எண்ணத்தில் இருந்தால் இந்த பட்டியலில் உள்ள ஏதாவது ஒரு காரை நிச்சயம் தேர்வு செய்யலாம். இது உங்களுக்கு குறைந்த விலையில் காரை வாங்குவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். தீபாவளி காலங்களில் இப்படியான ஆஃபர்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கி தங்கள் விற்பனையை அதிகப்படுத்தி கொள்ள முயற்சி செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 3, 2024, 17:10 [IST]
English summary
Diwali car discount 20 cars over rs 1 lakh festive season
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X