இந்த ஹூண்டாய்க்கு இவ்ளோ துணிச்சல் ஆகாதுங்க.. இனி அவங்களோட இந்த கார் வித்த மாதிரிதான்..
இந்தியாவின் செடான் கார் (Sedan Car) மார்க்கெட்டை ஆக்கிரமிப்பு செய்யும் பணியில் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் சில தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றன. இதன் அடிப்படையிலேயே சமீபத்தில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் புதிய தலைமுறை டிசையர் (New Gen Dzire) கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. பல விஷயங்களில் சிறப்பு பெற்ற கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது. உதாரணமாக, மைலேஜ், பாதுகாப்பு திறன் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றில் மிக சிறந்த கார் மாடலாக புதிய டிசையர் உள்ளது.
இந்த வாகனத்தைத் தொடர்ந்து இன்னும் சில செடான் ரக கார் மாடல்களும் இந்தியாவின் செடான் கார் பிரிவை அலங்கரிக்கும் விதமாக களமிறங்க இருக்கின்றன. இவ்வாறு இந்த பிரிவு சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கின்ற இந்த வேளையிலேயே முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஒன்று அதன் புகழ்பெற்ற செடான் கார் மாடல் விலையை அதிரடியாக உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹூண்டாய் நிறுவனமே அதன் வெர்னா (Hyundai Verna) கார் மாடலின் விலையை உயர்த்தி இருக்கின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னரே இந்த காரை லேசான அப்டேட்டிற்கு ஹூண்டாய் உட்படுத்தியது. இந்த நிலையிலேயே இதன் விலைகள் உயர்த்தப்பட்டு இருக்கின்றன. ஆரம்ப நிலை வேரியண்ட்டை தவிர மற்ற அனைத்து வேரியண்டுகளின் விலையையும் ஹூண்டாய் நிறுவனம் உயர்த்தி இருக்கின்றது.
ஆகையால், அதே ரூ. 11 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலேயே ஹூண்டாய் வெர்னா விற்கப்படுகின்றது. அதேவேளையில், மற்ற வேரியண்டுகளின் விலை ரூ. 6 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கின்றது. விலை உயர்வால் இதன் உயர்நிலை தேர்வின் விலை மாறி இருக்கின்றது. ரூ. 17.48 லட்சமாகவே உயர்நிலை தேர்வின் விலை மாறியிருக்கின்றது.
இது அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது. மாருதி சுஸுகி அதன் டிசையர் கார் மாடலை மிகவும் குறைவான ரூ. 6.79 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்ற நிலையில், ஹூண்டாயோ தன்னுடைய வெர்னா காரின் விலையை உயர்த்தி இருக்கின்றது.
இதனால் இந்த காரின் விற்பனை லேசாகப் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், இந்த காருக்கு என தனி வரவேற்பு நிலவிக் கொண்டிருப்பதால் விற்பனை பாதிப்படைவதற்கான சூழலே ஏற்படாது என்றும் கூறப்படுகின்றது. அதற்கேற்பவே அதிகம் பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய காராக வெர்னா காட்சியளிக்கின்றது.
தொடர்ந்து, காஸ்ட்லியான கார்களுக்கு இணையான கவர்ச்சியான தோற்றத்தையும் அது கொண்டிருக்கின்றது. சிறப்பம்சங்களாக இந்த காரில் 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதியுடன் வழங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், வென்டிலேட் மற்றும் சூடாகும் திறன் கொண்ட இருக்கைகள் உள்ளிட்ட அம்சங்கள் புதிய ஹூண்டாய் காரில் வழங்கப்பட்டு உள்ளன.
இதுதவிர, எட்டு ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் ஆடியோ சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டமும் ஹூண்டாய் வெர்னாவில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த காரை மூன்று விதமான எஞ்சிந் தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும். 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் ஆகிய ஆப்ஷன்களிலேயே வெர்னா விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன், 1.5 லிட்டர் சிஆர்டிஐ டீசல் எஞ்சின் தேர்விலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் சிறந்த செடான் ரக கார் மாடல்களில் வெர்னாவும் ஒன்றாகும். இதுவும் ஓர் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற செடான் என்பது கவனிக்கத்தகுந்தது. எனவேதான் விலை உயர்ந்திருந்தாலும் இதன் விற்பனையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








