5 ஸ்டார் பெற்ற இந்த இந்தியா கார் தான் வேணும்னு வெளிநாட்டு காரங்க அடம்பிடிக்க போறாங்க! ஏற்றுமதி எகிற போகுது!
மாருதி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட தனது டிசையர் காரின் டெஸ்ட் சோதனை முடிவுகள் வெளியாகி இருந்தன. இந்த சோதனையில் இந்த கார் 5 ஸ்டார் பெற்ற நிலையில், தற்போது இதன் காரணமாகவே இந்த காரின் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளில் இந்த காரின் விற்பனை அதிகமாக வாய்ப்புகள் உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி நிறுவனம் சமீபத்தில் தனது டிசையர் காரை அப்டேட் செய்து அறிமுகப்படுத்தியது. இந்த கார் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு பெற்றது. ஏற்கனவே இந்த காருக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த கார் அப்டேட் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டதால் பலர் இந்த காரை புக்கிங் செய்து டெலிவரிக்காக காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் மாருதி நிறுவனம் இந்த காரை குளோபல் என்கேப் சோதனைக்கு உட்படுத்தியது. இந்த சோதனையில் இந்த கார் 5 ஸ்டார் பெற்று பாதுகாப்பான கார்களில் ஒன்றாக இடம் பிடித்தது. மாருதி நிறுவனத்திலிருந்து ஒரு கார் தயாரிக்கப்பட்டு குளோபல் என் கேப் சோதனையில் முதன் முதலில் 5 ஸ்டார் பெற்ற கார் என்றால் இதுதான் இதற்கு முன்பு உள்ள மாடல் 3 ஸ்டார் ரேட்டிங் மட்டுமே பெற்றிருந்தது.
மாருதி நிறுவனத்தின் மீது நீண்ட நாட்களாக விமர்சனம் வந்தது மாருதி நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாம் தரமற்ற தயாரிப்புகளாக இருக்கும். பாதுகாப்பு விஷயத்தில் மாருதி நிறுவனம் குறைந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார் அல்லது விபத்து சிக்கினால் அதிக சேதாரம் ஏற்படக்கூடிய காராக தயாரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லும் விதமாக மாருதி நிறுவனம் இந்த காரை உருவாக்கியுள்ளது.

சர்வதேச அளவில் குளோபல் என்கேப் கிராஸ் டெஸ்ட் சோதனை முடிவுகள் பல கார்களின் விற்பனையையே தலைகீழாக மாற்றி உள்ளது. அதன்படி தற்போது மாருதி ஸ்விஃப்ட் டிசையர் கார் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ள நிலையில் இந்த கார் பக்கம் மக்கள் பலர் தங்கள் கவனத்தை திருப்பி உள்ளார்கள். மாருதி நிறுவனத்தில் தரமான பாதுகாப்பு அம்சம் கொண்ட கார் வந்திருப்பதாக மக்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.
இந்தியாவிற்கு என தனியாக தற்போது பாரத் என்கேப் சோதனை நடந்தாலும், இது கிட்டத்தட்ட குளோபல் என்கேப் சோதனை போலவே நடக்கிறது என்பதால் இந்த கார் இந்தியாவில் கிராஸ் டெஸ்ட் சோதனை செய்யப்படும்போதும் ஐந்து ஸ்டார் ரேட்டிங் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது மட்டுமல்லாமல் பாரத் என்கேப் சோதனை துவங்கப்படுவதற்கு முன்னர் மக்கள் பலர் குளோபல் என்கேப் சோதனையே இந்தியாவிலும் கவனித்து வந்ததால் இந்த சோதனை முடிவுகள் இந்தியாவிலும் இந்த காரின் விற்பனையை அதிகரிக்க உதவியாக இருக்கும்.

இந்த குளோபல் என்கேப் சோதனை முடிவுகள் இந்தியா மட்டுமல்லாமல் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகமாக கவனிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த நாடுகளிலும் இந்த காரின் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. சர்வதேச மார்க்கெட்டில் இருந்து இந்த கார்கள் வாங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்படும் கார் தான் சர்வதேச மார்க்கெட்டில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
புதிதாக அப்டேட் செய்யப்பட்ட டிசையர் காரில் முன்பக்க லுக் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதில் எல்இடி ஹெட்லைடுகள் மற்றும் நீள வாக்கிலான டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன. அடிப்படையான வடிவமைப்பு பழைய மாடலில் இருந்து எந்த வித மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. ஆனால் சில முக்கிய அம்சங்கள் மாற்றப்பட்டுள்ளது.
இந்த காரின் உட்புறம் 9 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது ஒயர்லெஸ் முறையில் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவை சப்போர்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பின் பக்க பயணிகளுக்கான தனி ஏசி வேண்டுதல் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த காரில் சிங்கிள் பேன் சன்ரூஃப் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் பாதுகாப்பு அம்சங்கள் குறைந்த காரை தான் உருவாக்கும் என்ற பேச்சு நீண்ட நாட்களாக இருந்து வந்த நிலையில் அவர்களுக்கு பதில் சொல்லும் விதமாக மாருதி நிறுவனம் 5 ஸ்டார் ரேட்டிங் போன்ற ஒரு காரை தயாரித்துள்ளது. இது நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கலாம். இதன் விலையும் குறைவாக இருப்பதால் இந்திய மார்க்கெட் மட்டுமல்லாமல் சர்வதேச மார்க்கெட்டிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.


Click it and Unblock the Notifications









