ரூ1.85 லட்சம் கம்மி விலையில் டிசையர் காரை வாங்க இப்படி ஒரு வழி இருக்குதா?
இந்திய ராணுவத்தில் பணியாற்றும் ராணுவ வீரர்கள் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட மாருதி நிறுவனத்தின் டிசையர் காரை ரூபாய் 1.84 லட்சம் வரை குறைவான விலையில் வாங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவ கேண்டீன் மூலம் இந்த காரை வாங்கினால் இவ்வளவு குறைவான விலையில் வாங்க முடியும். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்திய ராணுவ கேண்டீனில் ராணுவ வீரர்களுக்கு குறைவான விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களும் கூட விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ராணுவத்தில் ஒருவர் வகிக்கும் பதவிக்கு ஏற்ப வாகனத்தை சொந்தமாக வாங்கிக் கொள்ள முடியும். இப்படியாக வாகனம் வாங்கும் போது அவர்களுக்கு ஜிஎஸ்டி வரி பிடித்தம் எதுவும் செய்யப்படாமல் குறைவான விலையில் வாகனம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

வெளியில் நாம் ஒரு வாகனத்தை வாங்கினால் அதற்கு 28 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியது இருக்கும். ஆனால் ராணுவ கேண்டீன் மூலம் வாகனத்தை வாங்கினால் அதற்கு 14 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி செலுத்தினால் போதுமானது என அரசு சட்டம் வைத்துள்ளது. அதன்படி மாருதி டிசையர் காரை வாங்கினால் எவ்வளவு மிச்சம் செய்ய முடியும் என்ற விரிவான விபரத்தை பார்ப்போம்.
மாருதி நிறுவனம் சமீபத்தில் அப்டேட் செய்து வெளியிட்ட தனது டிசையர் காரின் அனைத்து வேரியன்ட்களும் ராணுவ கேண்டீனில் விற்பனையாகி வருகின்றன. அதன்படி பேஸ் வேரியன்டான எல்எக்ஸ்ஐ வேரியண்ட் காரை பொருத்தவரை வெளிமார்க்கெட்டில் ரூ6.29 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. ராணுவ கேண்டீனில் ரூ5.8 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது சுமார் ரூ99 ஆயிரம் வரை வித்தியாசம் இருக்கிறது.

அடுத்ததாக விஎஸ்ஐ வேரியன்டை பொறுத்தவரை வெளிமார்க்கெட்டில் ரூ7.79 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதே கார் ராணுவ கேண்டீனில் ரூபாய் 6.24 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதன் வித்தியாசம் ரூ1.05 லட்சம் ஆகும்.
அடுத்ததாக இசட்எக்ஸ்ஐ வேரியன்டை பொறுத்தவரை வெளிமார்க்கெட்டில் ரூபாய் 8.89 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதுவே ராணுவ கேண்டீனில் ரூபாய் 7.35 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இதன் வித்தியாசம் ரூ1.54 லட்சம் ஆகும். மேல் குறிப்பிட்ட எல்லாமே மேனுவல் கியர் ஆப்சன் கொண்ட வேரியன்ட் ஆகும்.

அடுத்ததாக இசட்எக்ஸ்ஐ பிளஸ் வேரியன்ட் என்பது டாப் வேரியன்ட் ஆகும். இதில் மேனுவல் கியர் ஆப்ஷன் கொண்ட கார் வெளிமார்க்கெட்டில் ரூ9.69 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதுவே ராணுவ கேண்டீனில் ரூ 7.99 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இதன் வித்தியாசம் ரூ1.70 லட்சம் ஆகும்.
அடுத்ததாக ஏஎம்டி வேரியன்ட்களை பொறுத்த வரை விஎஸ்ஐ ஏஎம்டி கார் வெளி மார்க்கெட்டில் ரூ 8.24 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதே கார் ராணுவ கேண்டீனில் 7.05 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. வித்தியாசம் ரூ1.19 லட்சம் ஆகும். இதுவே இசட்எக்ஸ்ஐ வேரியன்டை பொருத்தவரை வெளிமார்க்கெட்டில் ரூ 9.34 லட்சம் என்று விலையில் விற்பனையாகிறது. ராணுவ கேண்டீனில் ரூ7.65 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இதன் வித்தியாசம் ரூ1.69 லட்சம் ஆகும்.
அடுத்ததாக இருப்பதிலேயே டாப் வேரியன்டை பொருத்தவரை வெளி மார்க்கெட்டில் ரூ10.14 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. ராணுவ கேண்டினில் ரூ8.3 லட்சம் என்ற விலையில் இந்த காரை வாங்க முடியும். இருப்பதிலேயே அதிகபட்சமாக இந்த காரில் தான் ரூ1.84 லட்சம் மிச்சப்படுத்தி இந்த காரை ராணுவ கேண்டீன் மூலம் வாங்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராணுவ கேண்டீன் மூலம் வாகனங்களை ராணுவ வீரர்கள் வாங்கினாலும், அதை உடனடியாக அவர்களால் விற்க முடியாது. இதற்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் இருக்கிறது. இந்த கட்டுப்பாடுகளுக்கு இணங்க தான் காரை வாங்க முடியும். அது மட்டுமல்லாமல் குறிப்பிட்ட ரேங்கில் இருப்பவர்களுக்கு மட்டுமே கார் வாங்கும் ஆப்ஷன் ராணுவத்தில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications









