27 கிமீ மைலேஜ், 7 பேர் பயணிக்கும் இந்த காரை 10,000 பேர் வாங்கிட்டாங்க! அப்படி என்ன கார் தெரியுமா?
சமீப காலமாக குடும்பத்துடன் பயணிக்கும் கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால் எம்பிவி ரக கார்களை மக்கள் அதிகம் வாங்கி வருகிறார்கள். ஆனால் அந்த ரக கார்களின் விலை அதிகமாக இருக்கிறது. அதனால் மாருதி நிறுவனத்தின் குறிப்பிட்ட ஒரு தயாரிப்பு குறைவான விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் அதிக சீட்டர் கொண்ட காராக இருப்பதால், அந்த காரின் விற்பனை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காண போகிறோம்.
கொரோனாவிற்கு பிறகு குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. இதனால் எம்பிவி ரக செக்மெண்டில் உள்ள கார்களின் விற்பனை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இருந்தாலும் எம்பிவி ரக கார்கள் இந்தியாவில் அதிக விலையில் விற்பனையாகி வருகின்றன.

பட்ஜெட்டில் குடும்பத்துடன் பயணிக்கும் ரக காரை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, இந்தியாவில் இருக்கும் ஒரே ஆப்ஷன் மாருதி நிறுவனத்தின் ஈகோ கார் தான். இந்த கார் தான் குறைந்த விலையில் விற்பனையாகும் குடும்பத்துடன் பயணிக்கும் காராக இருக்கிறது. இதனால் இந்த காரின் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை மாதமே இந்த காரின் விற்பனை எதிர்பாராத அளவுக்கு அதிகமாக இருக்கிறது.
மாருதி நிறுவனத்தின் ஈகோ காரை கடந்த ஜூலை மாதம் 11,916 வாடிக்கையாளர்கள் வாங்கியுள்ளார்கள். இதே கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12,037 வாடிக்கையாளர்கள் வாங்கி இருந்தார்கள். தற்போது 121 கார்கள் குறைவாக விற்பனையாக இருந்தாலும், இந்த எண்ணிக்கை பலமான எண்ணிக்கையாகவே பார்க்கப்படுகிறது. மற்ற செக்மெண்டில் உள்ள கார்கள் எல்லாம் பத்தாயிரம் கார்கள் விற்க திணறி வரும் நிலையில், இந்த கார் அசால்ட்டாக 10,000த்திற்கும் அதிகமாக விற்பனையாகி உள்ளது.

மாருதி நிறுவனத்தின் ஈகோ காரை பொருத்தவரை ஆறு மற்றும் ஏழு சீட்டர் ஆப்ஷன்களில் பெற முடியும். இந்த கார் மொத்தம் 3675 மிமீ நீளமும், 1475 மிமீ அகலமும், 1825 மிமீ உயரமும் கொண்டதாக இருக்கிறது. இதில் ஆம்புலன்ஸ் வெர்ஷன் மட்டும் 1930 மிமீ உயரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கான தேவை இருப்பதால் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாருதி நிறுவனத்தின் ஈகோ காரில் உள்ள இன்ஜினை பொறுத்தவரை கே சிரீஸ் 1.2 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் மொத்தம் 13 விதமான வேரியண்ட்களில் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. இதில் 5 சீட்டர், 7 சீட்டர், கார்கோ, டூர் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகிய பல்வேறு விதமான பாடி ஸ்டைல்களில் இந்த கார் விற்பனையாகி வருகிறது.

இந்த காரில் உள்ள இன்ஜின் திறனை பொறுத்தவரை 80.76 பிஎஸ் பவரையும் 14.4 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் சிஎன்ஜி ஆப்ஷனிலும் விற்பனையாகி வருகிறது. சிஎன்ஜியில் 71.65 பிஎஸ் பவரையும், 95 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கார் அதிகமாக விற்பனை செய்யப்படுவதற்கு முக்கியமான காரணம் இதன் மைலேஜ் தான். இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 20.2 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜியில் 27.05 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. பயணிகள் வாகனத்தை பொருத்தவரை பெட்ரோலில் 19.7 கிலோமீட்டர் மைலேஜ் 26.78 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கப்படுகிறது.
ஈகோ காரின் விலையைப் பொறுத்தவரை ரூபாய் 5.32 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரின் 11 விதமான பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனால் பாதுகாப்பு அம்சம் குறித்து பெரிதாக கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. சமீபத்தில் இந்த காரில் பல்வேறு விதமான அப்டேட்டுகள் செய்யப்பட்டன. முக்கியமாக இதன் ஸ்டேரிங் மற்றும் ஏசி கண்ட்ரோல் எல்லாம் அப்டேட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கும் விதமாக குறைந்த பட்ஜெட்டில் கார் வாங்க விரும்பினால் உங்களுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் இந்த மாதிரி நிறுவனத்தின் ஈக்கோ கார் தான். இந்த கார் இந்திய மிடில் கிளாஸ் குடும்பங்களை அதிகம் கவர்ந்துள்ளது. பெரிய குடும்பமாக அல்லது கூட்டுக் குடும்பமாக வாழ்பவர்கள் இந்த காரை அதிகம் விரும்பி வாங்கி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications









