இத்தோட நான்காவது மாசம்.. தொடர் வீழ்ச்சியில் பயணிகள் மின்சார கார் விற்பனை.. அரசாங்கம் கை கொடுக்குமா?..
மின்சார வாகனங்கள், பெட்ரோல் - டீசல் வாகனங்களை விற்பனையில் ஓரங்கட்டிவிடும் என எதிர்பார்த்தால், ஒற்றை ஸ்கீம் இல்லாத காரணத்தினால் கடந்த நான்கு மாதங்களாக அவை விற்பனையில் மிகப் பெரிய சரிவைச் சந்தித்து வருகின்றன என்பது தெரிய வந்திருக்கின்றது. மின்சார வாகனம் மற்றும் ஹைபிரிட் வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டு அறிமுகம் செய்யப்பட்ட ஓர் திட்டமே 'ஃபேம்' (FAME) ஆகும். இந்த திட்டம் இல்லாமல் போனதன் காரணத்தினாலேயே மின்சார வாகன விற்பனை தற்போது சரிவைச் சந்தித்துக் கொண்டு இருக்கின்றன.
ஃபடா (Federation of Automobile Dealers Associations) வெளியிட்டிருக்கும் புள்ளி விபரங்களும் இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே இருக்கின்றன. 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டில் கடைசியாக கடந்த ஏப்ரல் மாதத்திலேயே பயணிகள் மின்சார வாகனங்கள் அதிக அளவில் விற்பனையாகி இருக்கின்றன.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் 2023 ஏப்ரல் மாதத்தில் 6,039 யூனிட்டுகள் மட்டுமே பயணிகள் மின்சார வாகனங்கள் விற்பனையான நிலையில், 2024 ஏப்ரலில் 7,415 யூனிட்டுகள் வரை அவை விற்பனையாகின. இது 23 சதவீதம் விற்பனை வீழ்ச்சி என்பது கவனிக்கத்தகுந்தது.
ஆனால், இதற்கு அடுத்தடுத்த மாதங்களில் தொடர்ச்சியாக பயணிகள் மின்சார வாகனங்களின் விற்பனையானது சரிவையே சந்தித்து வருகின்றன. குறிப்பாக, 2023 ஜூன் மாதத்தைக் காட்டிலும் 2024 ஜூன் மாதத்தில் சந்தித்த விற்பனை சரிவு என்பது மாபெரும் சரிவாக உள்ளது. 13.51 சதவீதம் விற்பனை சரிவை அது அந்த மாதத்தில் சந்தித்தது.
அதாவது, 7,971 யூனிட்டுகள் வரை 2023 ஜூனில் விற்பனையாகியநிலையில், 2024 ஜூன் மாதத்தில் 6,894 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகின. இதேபோல், ஜூலை மாதத்தில் 2.92 சதவீத விற்பனை சரிவையும் (7,768 யூனிட்டில் இருந்து 7,541 யூனிட்டுகளாக அது குறைந்தது), கடந்த ஆகஸ்டு மாதத்தில் 10 சதவீத விற்பனை வீழ்ச்சியையும் (7,040 யூனிட்டுகளில் இருந்து 6,338 யூனிட்டுகள் குறைவை) சந்தித்து இருக்கின்றன.
இந்த விற்பனை வீழ்ச்சியானது கடந்த மே மாதத்தில் தொடங்கியது என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. அந்த மாதத்தில் 1.24 சதவீதம் மட்டுமே பயணிகள் மின்சார வாகனம் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து இருந்தது என்பது கவனிக்கத்தகுந்தது. 7,734 யூனிட்டுகளில் இருந்து 7,638 யூனிட்டுகளாக அது குறைந்திருக்கின்றது.
மின்சார பிவி சந்தை முன்னணி டாடா மோட்டார்ஸ் ஆகஸ்ட் மாதத்தில் 4,086 யூனிட் சில்லரை விற்பனையைப் பதிவு செய்தது, இது ஆகஸ்ட் 2023 இல் 4,783 யூனிட்டுகளுடன் ஒப்பிடுகையில் ஆண்டுக்கு ஆண்டு 14.57 சதவீதம் குறைவு. ஆகஸ்ட் மாதத்தில் மின்சார பிவி விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 10 சதவீதம் குறைந்து 6,338 யூனிட்டுகளாக இருந்தது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 7,040 யூனிட்டுகளுடன் ஒப்பிடுகையில்.
ஜூலை மாதமும், மின்சார பிவிக்களின் சில்லரை விற்பனை, ஜூலை 2023 இல் 7,768 ஆக இருந்ததற்கு எதிராக, ஆண்டுக்கு ஆண்டு சுமார் மூன்று சதவீதம் குறைந்து 7,541 யூனிட்டுகளாக இருந்தது. மிக முக்கியமாக இந்தியாவின் மின்சார வாகன உலகின் ஜாம்பவானாக மாறியிருக்கும் டாடா மோட்டார்ஸ்-கூட மிகப் பெரிய விற்பனை வீழ்ச்சியை கடந்த மாதத்தில் சந்தித்து இருக்கின்றது என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது.
இந்த நிறுவனத்தின் பயணிகள் மின்சார வாகனங்கள் கடந்த 2023 ஆகஸ்டு மாதத்தில் 4,783 யூனிட்டுகள் விற்பனையாகிய நிலையில், நடப்பாண்டு ஆகஸ்டு மாதத்தில் 4,086 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன. இது 14.57 சதவீதம் விற்பனை வீழ்ச்சி ஆகும். இதேபோல், மஹிந்திரா நிறுவனத்தின் மின்சார கார்களும் 22 சதவீதம் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து இருக்கின்றது.
அதாவது, 406 யூனிட்டில் இருந்து அது 317 யூனிட்டுகளாக குறைந்திருக்கின்றது. அதேநேரத்தில் ஆச்சரியமளிக்கும் விதமாக சீன கார் உற்பத்தி நிறுவனமான எம்ஜி-யின் மின்சார கார்கள் மட்டும் விற்பனையில் நல்ல வளர்ச்சியைச் சந்தித்து இருக்கின்றன. நிறுவனத்தின் மின்சார கார்கள் 2023 ஆகஸ்டில் 1208 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையான நிலையில் அது இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 1,353 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன.
இந்த விற்பனை வீழ்ச்சிக்கு ஃபேம் திட்டம் இல்லாமல் போனதே முக்கிய காரணம் என ஆட்டோ துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக, வாகனங்கள் சார்ந்த தொழிலை கண்காணிக்கும் நிபுணர்கள் குழு, 'ஜிஎஸ்டி வரியை ஐந்து சதவீதமாக குறைத்திருப்பதை தவிர வேறு எந்த பலன்களையும் (சப்சிடிகளும்) மின்சார பயணிகள் வாகனங்களுக்கு வழங்காததே அதன் விற்பனைச் சரிவிற்கு மிக முக்கியமான காரணமாக தெரிவித்திருக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த வாரம் சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டபோது, "பெட்ரோல்/டீசல் வாகனங்களின் மீதான ஜிஎஸ்டி 48 சதவீதம், ஆனால், மின்சார வாகனத்தின் மீதான ஜிஎஸ்டி வரி வெறும் 5 சதவீதம் மட்டுமே.
5 சதவீதம் ஜிஎஸ்டி பெற்ற பிறகும் யாராவது அரசாங்கத்திடமிருந்து சப்சிடி எதிர்பார்த்தால், என்னுடைய நேர்மையான கருத்து சப்சிடிகள் தேவையில்லை என்பதுதான்" என்றார். இதன் வாயிலாக வரும் நாட்களிலும் சப்சிடி கிடைக்காது என்பதும், பயணிகள் மின்சார கார்கள் விற்பனை மேலும் சரியக் கூடும் என்றும் அஞ்சப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








