இவி வாங்குற ஐடியால இருக்கீங்களா? உடனே வாங்கிடுங்க! நிதின்கட்கரி சொன்ன ரகசிய தகவல்
இந்தியாவில் தற்போதைய எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களுக்கு மானியம் தேவை இல்லை என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார். இது தற்போது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மிகப்பெரிய அளவில் மானியம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய அமைச்சர் இப்படி பேசி உள்ளது. பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவின் காலமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு விதமான மானியங்களை வழங்கி வருகிறது. முக்கியமாக ஃபேம் என்ற மானியத்தை வழங்கி வந்தது. இந்த ஃபேம் மானியத்தில் இரண்டு கட்டங்கள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், மூன்றாவது கட்ட ஃபேம் மானியம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது.

இரண்டாம் கட்ட ஃபேம் மானியம் கடந்த மார்ச் மாத இறுதியில் முடிவடைந்தது. அதன் பிறகு இடைக்கால மானியமாக தற்போது இஎம்பிஎஸ் என்ற மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியமும் ஃபேம் மானியம் வழங்கும் வரை மட்டுமே வழங்கப்படும் மானியமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் ஃபேம் மானியத்தின் மூன்றாம் கட்ட அறிவிப்புகள் வெளியான பிறகு அந்த மானியம் வழங்கப்படும் என எதிர்பார்க்கும் நிலையில், மக்கள் பலர் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவிப்பதற்காக ஃபேம் மானியத்தில் பல்வேறு விதமான அம்சங்கள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது அறிமுகமாகவுள்ளது.
இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க சமீபத்தில், நடந்த மாநாட்டில் மத்திய போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியம் இனிமேல் தேவை இல்லை என பேசி உள்ளார்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனையை அதிகரிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகவும் 2030-ம் ஆண்டிற்குள் ஒட்டுமொத்தமாக விற்பனையாகும் வாகன எண்ணிக்கையில் 30 சதவீதம் எலெக்ட்ரிக் வாகனமாக இருக்க வேண்டும் என திட்டமிட்டு வருவதாகவும் கூறினார். இதற்கான திட்டங்கள் எல்லாம் வகுக்கப்பட்டு வருகின்றன.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியங்கள் குறித்து அவர் பேசும் போது எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு இனிமேல் மானியங்கள் தேவை இல்லை எனக் கூறியுள்ளார். ஏற்கனவே எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் அதிக டிமாண்டையும் குறைவான தயாரிப்பு செலவையும் பெற்று வருகின்றனர். ஒரு காலத்தில் ஒரு கிலோ வாட் ஹவர் பேட்டரிக்கு 150 அமெரிக்க டாலர் செலவாகி வந்த நிலையில், தற்போது 108 அமெரிக்க டாலர் தான் செலவாகிறது.
இதன் மூலமே எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் நல்ல வருமானத்தை பெற்று வருகிறார்கள். மேலும் தற்போது மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் சிஎன்ஜி வாகனங்கள் மீதான தேர்வு அதிகமாகி வருகிறது. இதனால் இந்த ரக வாகனங்களுக்கு இனி மானியங்கள் தேவை இல்லை என அவர் பேசியுள்ளார்.
இது மட்டுமல்ல தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியும் மிக குறைவாக இருக்கிறது. பெட்ரோல், டீசல், ஹைபிரிட், சிஎன்ஜி வாகனங்களை விட எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி குறைவாக இருக்கிறது. தற்போது 5% ஜிஎஸ்டி மட்டுமே எலெக்ட்ரிக் வாகன விற்பனையாளர்கள் பெற்று வருகிறார்கள். மற்ற வாகனங்களுக்கு 28% வரை ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரிக்க ஃபேம் மானியம் வரும்போது அதிகமான மானியம் கிடைக்கும். இதனால் ஏற்று வாகனங்களின் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது இந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் தவிடு பொடியாக்கும் வகையில் மத்திய அமைச்சர் பேசி இருப்பது பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தற்போது மத்திய அமைச்சர் பேசுவதை பார்த்தால் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இருக்கும் மானியத்தை விட எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களும் மீதான மானியம் குறைவதற்கான வாய்ப்புகள் தான் இருக்கிறது. இப்படியாக குறைந்தால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகரிக்கும். இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விற்பனை சரிவை சந்திக்க வாய்ப்பு உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மானியத்தை நிறுத்தினாலோ குறைத்தாலோ அதை எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இன்னும் சில காலங்களுக்கு மானியங்கள் தேவைப்படுகிறது. அப்போதுதான் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான விழிப்புணர்வும் நம்பிக்கையும் மக்கள் மத்தியில் ஏற்படும்.


Click it and Unblock the Notifications








