இது என்னங்க புது கதையா இருக்குது? பெட்ரோல் காரை விட இவியில் டயர் தேய்மானமாகுமா?

சமீப ஆண்டுகளாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதால் பெட்ரோல் டீசல் வாகனங்களை விட எலெக்ட்ரிக் வாகனங்களில் டயர் தேய்மானம் அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அது எப்படி பெட்ரோல், டீசல் வாகனங்களை விட எலக்ட்ரிக் வாகனங்களில் அதிக டயர் தேய்மானம் இருக்கும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இது குறித்த விரிவான விபரங்களை காண்போம்.

இந்தியாவில் சமீப காலமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை என்பது கணிசமான அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகின்றனர். தற்போது டாடா நிறுவனம் தான் இந்தியாவில் அதிகமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் நிறுவனமாக இருக்கிறது.

Electric Vehicle Tyres Wear Out Faster

கடந்த 2023-ம் ஆண்டு நடந்த எலெக்ட்ரிக் வாகன விற்பனை என்பது அதற்கு முந்தைய ஆண்டை விட 82 சதவீதம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் லெட்டருக்கு வாகனங்களின் விற்பனை மிகப்பெரிய அளவில் உயர்ந்த என எதிர்பார்க்கப்படுகிறது. வாகனங்களின் விற்பனையை பொறுத்தவரை தற்போது டூவீலர்கள் தான் எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகின்றன.

எலெக்ட்ரிக் வாகனங்களை பொருத்தவரை தற்போது சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது என்ற நன்மை மட்டும் அல்லாமல் குறைவான பராமரிப்பு செலவு காரணமாகவும் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை தேர்வு செய்து வருகின்றனர். இப்படியாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கிய பலர் சாதாரண பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்படுத்தும் போது எவ்வளவு விரைவாக டயர் தேய்மானம் ஆகும். அதைவிட எலெக்ட்ரிக் வாகனங்களில் விரைவாக தேய்மானமாகிவிடுகிறது.

Electric Vehicle Tyres Wear Out Faster

இதைப்பற்றி நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் டயர் தேய்மானம் பற்றி விரிவாக பார்க்க வேண்டும். ஒரு வாகனத்தின் டயர் விரைவாக தேய்மானமாக முக்கியமான காரணம் அது எவ்வளவு வேகமாக பயணிக்கிறது. எவ்வளவு பிரேக் பிடிக்கிறது,என்பதை பொறுத்து எல்லாம் வாகனங்களின் டயரின் தேய்மானம் என்பது இருக்கும்? அப்படி பார்த்தால் தற்போது பெட்ரோல் டீசல் வாகனங்களை விட எலெக்ட்ரிக் வாகனங்கள் 20% அதிகமாக தேய்மானமாக வாய்ப்புகள் உள்ளன.

வாகன டயர் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பிரத்தியேகமான டயர்களை தயாரிக்க துவங்கி விட்டன. குறிப்பாக டயரில் உள்ள திரட்டு பேட்டன்கள், ரப்பர் காம்பவுண்டுகள், உள்ளிட்ட ஏகப்பட்ட விஷயங்களை பார்த்து பார்த்து கவனமாக வடிவமைக்க துவங்கி விட்டனர். இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்கள் சிறப்பான பெர்ஃபார்மன்ஸ் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்படுகிறது.

இதன் மூலம் சிறப்பான பெர்ஃபார்மன்ஸ் செய்யும் குறைவான ரோலிங் ரெசிஸ்டன்ஸ் செய்யும் வெளிப்படுத்தும் வகையிலும் அதே நேரம் டயரிலிருந்து வெளிவரும் சத்தமும் குறைவாக இருக்கும் படியும் வடிவமைக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல் டீசல் காரைகளை விட எலக்ட்ரிக் கார்களில் தேய்மானம் அதிகம் இருப்பதை உணர்ந்த நிறுவனங்கள் கூட தற்போது அதற்கான பிரத்தேகமான தொழில்நுட்பத்தை வடிவமைக்க துவங்கிவிட்டனர்.

இதனால் எதிர்காலங்களில் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள டயர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தனி டயர், பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தனி டயர் என பிரித்து பிரித்து விற்பனைக்கு வந்தாலும் வரலாம் என தெரிகிறது. தற்போது டயர் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த மாற்றத்திற்காக தயாராகி வருகின்றனர்.

எலெக்ட்ரிக் வாகனங்களில் பொருத்தப்படும் டயர்களில் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் செய்யலாம். இந்த மாற்றங்களால் எப்படி தேய்மானத்தை தடுக்க முடியும் என டயர் தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு ஆய்வுகளையும் செய்து வருகின்றனர். இதனால் வருங்காலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு என பிரத்தியேகமாக டயர் தயாரிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 7, 2024, 20:31 [IST]
English summary
Electric vehicle tyres wear out reasons
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+