எல்ட்ரா சிட்டி இ-ஆட்டோவ பற்றிய இந்த தகவல் தெரிஞ்சா மின்சார கார்-பைக்கை யாருமே வாங்க மாட்டாங்க! சாதிச்சிருச்சு!

இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர், பைக் மற்றும் கார்களுக்கு மட்டுமல்ல எலெக்ட்ரிக் ஆட்டோக்களுக்கும் நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவின் இ-ஆட்டோ (e-Auto) தேவை பலதரப்பட்ட நிறுவனங்களால் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. அதில் ஓர் முன்னணி நிறுவனமாக கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி (Greaves Electric Mobility) இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் மிக முக்கியமான மின்சார மூன்று சக்கர வாகனமாக எல்ட்ரா சிட்டி (Eltra City) உள்ளது. இதுவே வரலாற்று சிறப்புமிக்க சாதனையைப் படைத்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

எல்ட்ரா சிட்டி எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா ஓர் முழு சார்ஜில் 225 கிமீ தூரம் டிராவல் செய்திருக்கின்றது. இந்த அளவு நீண்ட தூரத்தை வேறு எந்த எலெக்ட்ரிக் ஆட்டோவும் ஒற்றை முழு சார்ஜில் பயணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், நாட்டில் விற்பனையில் உள்ள விலை உயர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விட அதிக ரேஞ்ஜ் திறன் இதுவாகும்.பெங்களூரு தொடங்கி மைசூர் வரையே அது பயணித்திருக்கின்றது.

Eltra city sets new record with 225km

இடையில் வேறு எங்குமே எலெக்ட்ரிக் ஆட்டோவை சார்ஜ் செய்வதற்காக நிறுத்தவில்லை என கூறப்படுகின்றது. இந்த சாதனையையே தற்போது கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் பெறுமையுடன் அறிவித்திருக்கின்றது. இத்தகைய திறனை இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ கொண்டிருப்பதால், அது ஓட்டுநர்களுக்கு மிக சிறந்த லாபத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என தெரிகின்றது.

சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே சமீபத்தில் கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் "எல்ட்ரா சிட்டி ஃப்ரீடம் ரைடு" எனும் பெயரில் அந்த எலெக்ட்ரிக் ஆட்டோவை சாதனை பயணத்திற்கு உட்படுத்தியது. அப்போதே எதிர்பாராத விதமாக ஓர் முழு சார்ஜில் 225 கிமீ தூரம் வரை பயணித்து எல்ட்ரா சிட்டி அசத்தியது.

இதன் வாயிலாக எல்ட்ரா சிட்டி அதிக லாபத்தை மட்டுமல்ல குறைந்த செலவு, அதிக செயல்திறன் மற்றும் பூஜ்ஜிய உமிழ்விற்கு உகந்த வாகனம் என்பதையும் தெரியப்படுத்தி இருக்கின்றது. இந்த பயணத்தின் ஒரு பகுதியாக விதான் சௌதா, கப்பன் சாலையில் உள்ள ஹெச்ஏஎல் அஜீத் மற்றும் திப்பு சுல்தானின் கல்லறை போன்ற குறிப்பிடத்தக்க பகுதிகளில் நிறுத்தப்பட்டன.

இறுதியாக இந்த பயணம் மைசூரில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் பூங்காவில் முடிவடைந்தது. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் சிறப்பான எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாக்களில் ஒன்றே எல்ட்ரா சிட்டி ஆகும். இது 10.8 kWh லித்தியம் அயன் பேட்டரி இயங்குகின்றது. இதன் இயக்கத்திற்காக 9.6 kW மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்மூத்தான பயணத்தை செயல்திறனுடன் இது வழங்கும். 528 கிலோ சுமை (பேலோட்) வரை தாங்கும் திறன் கொண்டதே இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ ஆகும். மேலும், 14 டிகிரி கிரேடபிலிட்டி திறனையும் இது கொண்டிருக்கின்றது. 49 என்எம் டார்க் வரை இது வெளியேற்றும்.

இதுபோன்ற இன்னும் பல்வேறு சிறப்பு பண்புகளை இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ தன்னுள் தாங்கியுள்ளது. இதுதவிர, ஹில் ஹோல்ட் அசிஸ்ட்டும் வழங்கப்பட்டு இருக்கும். குறிப்பாக, நகர்ப்புற பயன்பாட்டிற்கு உகந்த ஆட்டோவாக இது காட்சியளிக்கின்றது. கரடு, முரடான பாதையைச் சமாளிப்பது தொடங்கி, பாதுகாப்பான பயணத்தை வழங்குவது வரை என அனைத்திற்குமான வாகனமே இதுவாகும். இந்த நிலையிலேயே மிக மிக அதிக ரேஞ்ஜை தரும் ஆட்டோ என்பதையும் இந்த எல்ட்ரா சிட்டி நிரூபணம் செய்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நாளுக்கு நாள் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்த வண்ணம் வருகின்றது. இவை அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வில் இருந்து பணத்தை மிச்சப்படுத்தவும், அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டில் இருந்து சுற்றுச்சூழலைக் காப்பதிலும் மிக சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. இதன் விளைவாகவே மக்களும் தங்களின் பேராதரவை மின்சார வாகனங்களுக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Friday, August 16, 2024, 15:21 [IST]
English summary
Eltra city e auto breaks record with longest electric ride from bangalore to mysore
மேலும்... #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+