வாகனங்கள் விஷயத்தில் புதிய விதியை அமலுக்கு கொண்டு வர போறாங்க.. இது என்ன புது குண்டா இருக்கு! என்ன அது?..

வாகனங்கள் மாசு உமிழ்வு விஷயத்தில் விரைவில் இந்தியாவில் புதிய விதி அமலுக்குக் கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போதைய நிலவரப்படி பிஎஸ் 6 விதியே அமலில் உள்ளது. புதிய விதி என்ன என்பதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி மாசு உமிழ்வு விதி பிஎஸ் 6 (Bharat Stage 6) அமலில் உள்ளது. இந்த நிலையிலேயே பிஎஸ் 7 (Bharat Stage 7) அமலுக்குக் கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியம் யூரோ மாசு உமிழ்வு விதி 7க்கு ஒப்புதலை வழங்கியது.

Euro 7 regulation

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்படுவது மட்டுமே நிலுவையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது கிடைத்துவிடும் என கூறப்படுகின்றது. இதன் எதிரொலியாகவே இந்தியாவில் யூரோ 7 உமிழ்வு விதிக்கு இணையான மாசு உமிழ்வு விதி இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் சூழல் உருவாகி இருக்கின்றது.

ஐரோப்பிய பாராளுமன்றம் மற்றும் கவுன்சில் தலைவர்களின் ஒப்புதலைத் தொடர்ந்து புதிய விதிகள் பற்றிய விபரங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வ இதழில் வெளியிடப்படும். இது அரங்கேறிய அடுத்த 20 நாட்களுக்குள் புதிய உமிழ்வு விதி ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும்.

இந்த தர நிலைக்கு இணையான புதிய விதிகளே இந்தியாவிலும் அமல்படுத்தப்பட இருக்கின்றது. ஆனால், இது எப்போது அரங்கேறும் என்பது இப்போதைய நிலவரப்படி கேள்விக் குறியாகவே இருக்கின்றது. அதேவேளையில், புதிய மாசு உமிழ்வு சீக்கிரமே இந்தியாவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்போதைய மத்திய அரசு காற்று மற்றும் வாகனங்களால் ஏற்படும் சற்றுச்சூழல் மாசு விஷயத்தில் மிகப்பெரிய அக்கறையைக் கொண்ட அரசாக செயல்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையிலேயே இந்தியாவில் ஃபேம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது மாசுபாட்டை ஏற்படுத்தும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட திட்டம்

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் நாட்டில் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட திட்டமே ஃபேம் ஆகும். இதன் 2 ஆம் கட்டம் 2024 மார்ச் 31 உடன் நிறைவுற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் அடுத்தகட்டம் அல்லது புதிய மின்சார வாகனங்களுக்கான கொள்கை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், எப்போது என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஃபேம் திட்டத்தினாலேயே நாட்டில் மின்சார வாகனங்களின் விலை பல மடங்குக் குறைந்துக் காணப்படுகின்றது. இந்த திட்டத்தின் வாயிலாக மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்குதல் மற்றும் பிற சிறப்பு சலுகைகளை அது வழங்கிக் கொண்டு இருக்கின்றது.

இதுதவிர, காற்று மாசுபாட்டைக் குறைக்கும் பொருட்டு பெட்ரோல், டீசல் வாகனங்கள் மீது அறிவிக்கப்படாத போரையும் அரசு தொடுத்து வருகின்றது. இதன் அடிப்படையிலேயே விரைவில் புதிய யூரோ 7 மாசு உமிழ்வு விதிக்கு இணையான மாசு உமிழ்வு பிஎஸ்7 இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சென்ற ஆண்டில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, "விரைவில் புதிய தலைமுறை மாசு உமிழ்வு விதிக்கு இந்தியாவும், வாகன உற்பத்தியாளர்களும் மாற தயாராக தொடங்குங்கள்" என வலியிறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே ஐரோப்பாவில் யூரோ7 அறிமுகமான அடுத்த ஒரு சில மாதங்களிலேயே இந்தியாவில் பிஎஸ்7 அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய மாசு உமிழ்வு அமல்படுத்தப்படும் எனில் வாகனங்களின் விலை லேசாக அதிகரிக்க நேரிடலாம். வாகனங்களின் உற்பத்தி செலவை புதிய விதி அதிகரிக்கச் செய்யக் கூடும். இந்த சுமையைக் குறைக்கும் பொருட்டு வாகன உற்பத்தியாளர்கள் விலை சுமையை வாடிக்கையாளர்களுக்கு தலைக்கு மாற்றுவார்கள். எனவே புதிய விதி சுற்றுச்சுழலுக்கு நல்லதாகவும், வாடிக்கையாளர்களுக்கு கஷ்டமானதாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 16, 2024, 5:00 [IST]
English summary
Eu council adopted euro 7 regulation here is more details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+