காருக்கு பதிலா இந்த மினி டிரக்க வாங்கிடலாம் போல.. அடாஸ் அம்சத்தைகூட இதுல தந்திருக்காங்க!

இந்தியாவின் கமர்சியல் வாகன (Commercial Vehicle) தேவையைப் பூர்த்தி செய்துக் கொண்டிருக்கும் ஓர் நிறுவனங்களில் யூலர் மோட்டார்ஸ் (Euler Motors)-ம் ஒன்றாகும். இது ஓர் எலெக்ட்ரிக் கமர்சியல் வாகனம் (Electric commercial vehicle)-களை உற்பத்தி செய்யும் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமே தற்போது மின்சாரத்தில் இயங்கும் கார்கோ (electric cargo) வகை வாகனத்தை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஸ்டார்ம் இவி (Storm EV) எனும் பெயர் கொண்ட அந்த கார்கோ மின்சார நான்கு சக்கர வாகனம் இந்தியாவில் இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

ஸ்டார்ம் இவி லாங் ரேஞ்ச் 200 (Storm EV LongRange 200) மற்றும் ஸ்டார்ம் இவி டி1250 (Storm EV T1250) ஆகியவையே அவை ஆகும். இன்டர்சிட்டி மற்றும் இன்ட்ராசிட்டி இரண்டிற்குமான வாகனமாக இவை பயன்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல், இரண்டு வாகனங்களும் 1,250 கிலோ வரையில் எடையை தாங்கும் திறன் கொண்டதாகவும் தயார் செய்யப்பட்டு இருப்பதாக யூலர் மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கின்றது.

ADAS equipped electric lcv

இதுமட்டுமில்லைங்க சொகுசு மற்றும் ஆடம்பர வகை கார்களில் மட்டுமே வழங்கப்படும் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (Advanced Driver Assistance System) கூட இந்த வாகனத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்தியாவில் இந்த அம்சத்தை பெறும் முதல் இலகு ரக வர்த்தக வாகனம் ஸ்டார்ம் இவி-யே ஆகும்.

இந்த அம்சத்தை வேறு எந்த கமர்சியல் வாகனங்களிலும் பார்க்க முடியாது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த அடாஸ் அம்சத்தின் வாயிலாக பாதுகாப்பு திறன்மிக்க வாகனமாக ஸ்டார்ம் இவி மாறி இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, அதிக பயன்பாட்டையும், திறனையும் வெளியேற்றக் கூடியதாகவும் ஸ்டார்ம் இவி காட்சியளிக்கின்றது.

Euler storm ev lcv side design

ஸ்டார்ம் இவி லாங் ரேஞ்ச் 200: இன்டர்சிட்டி பயன்பாட்டிற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஓர் எலெக்ட்ரிக் கமர்சியல் கார்கோ வாகனம் ஆகும். இது ஓர் முழு சார்ஜில் 200 கிமீ வரை ரேஞ்ச் தரும். இந்த ரேஞ்ச் திறனைக் கொண்டு சென்னை-டூ-வேலூர் சென்றுவிடலாம். அதேவேளையில், அதிக வேகமாக சார்ஜ் செய்துக் கொள்ளும் திறனையும் இந்த வாகனத்தில் யூலர் மோட்டார்ஸ் வழங்கி இருக்கின்றது.

இதன்படி ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து வெறும் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் இந்த வாகனத்தில் 100 கிமீ தூரம் வரை பயணித்துக் கொள்ள முடியும். இது ஓர் 10 அடி நீளம் உடல் அமைப்பைக் கொண்ட கார்கோ வாகனம் ஆகும். இந்த வாகனத்தில் 8-லீஃப் வகை சஸ்பென்ஷனே பின் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது. எனவே வழக்கமான கமர்சியல் வாகனங்களைக் காட்டிலும் சற்றே சௌகரியமான ரைடு அனுபவம் ஓட்டுநருக்கு கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

ஸ்டார்ம் இவி டி1250: இந்த மாடல் இன்ட்ராசிட்டிக்கானது ஆகும். இதில் ஓர் முழு சார்ஜில் 140 கிமீ ரேஞ்சை பெற்றுக் கொள்ள முடியும். இதுவும் 8.2 அடி நீளம் உடல் அமைப்பைக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் வால்யூமெட்ரிக் திறன் 220 மற்றும் 260 சிஎஃப்டி என கூறப்படுகின்றது. இந்த வாகனத்தை டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்தும் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும்.

இதில் சுமார் 30 நிமிடம் சார்ஜ் செய்யும்பட்சத்தில் 100 கிமீ தூரம் வரை டிராவல் செய்துக் கொள்ள முடியும். இந்த மாடலில் இரண்டு விதமான வேரியண்டுகள் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இந்த வாகனத்திலும் லாங் ரேஞ்ச் 200-இல் வழங்கப்பட்டு இருக்கும் அதே சஸ்பென்ஷன் செட்-அப்பே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

பேட்டரி பேக்கை பொருத்த வரை இந்த வாகனத்தில் 30 kWh லிக்யூடு கூல்டு பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் தண்ணீர் மற்றும் வாட்டர் ப்ரூஃப் பேட்டரி பேக் ஆகும். ஏஐஎஸ் 38 தர சான்று பெற்றது என்றும் கூறப்படுகின்றது. இதுதவிர, ஐபி67 தர சான்றையும் இந்த பேட்டரி பேக் பெற்றிருக்கின்றது.

தொடர்ந்து, இன்னும் பல நவீன கால அம்சங்களையும் இந்த கமர்சியல் வாகனம் பெற்றிருக்கின்றன. அந்தவகையில், பிரத்யேக செஃபர்டு செயலி இந்த வாகனத்திற்கு வழங்கப்பட இருக்கின்றது. இதன் வாயிலாக வாகனத்தின் இருப்பிடத்தை அறிதல், அருகில் உள்ள சார்ஜிங் மையத்தை அட்வான்ஸ் புக்கிங் செய்தல், மெயின்டனன்ஸ் அலர்ட்டைப் பெறுதல் ஆகியவற்றை செய்துக் கொள்ள முடியும்.

இத்துடன், திருட்டைத் தவிர்க்கும் தொழில்நுட்பம், டேஷ்போர்டு கேமிரா போன்ற அம்சங்களும் இந்த எலெக்ட்ரிக் கமர்சியல் வாகனத்தில் யூலர் மோட்டார்ஸ் வழங்கி இருக்கின்றது. இதேபோல், இந்த கார்கோ வாகனத்தில் 7 அல்லது 10 அங்குல திரை ஒன்றும் வழங்கப்பட்டிருக்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

இது, மேப் (Maps integration) வசதிக் கொண்ட வாட்ஸ் ஆப் (WhatsApp) உள்ளிட்ட அம்சங்களைத் தாங்கியது என்பது கவனிக்கத்தகுந்தது. இதுபோன்று கார்களுக்கு டஃப் கொடுக்கும் அம்சங்கள் பலவற்றை தாங்கியதாகவே யூலர் மோட்டார்ஸ் ஸ்டார்ம் இவி-யை தயார் செய்திருக்கின்றது. ஆகையால், இதற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட முன்னணி பிராண்டுகள் பல தங்களின் டெலிவரி உள்ளிட்ட பிற சேவைகளில் மின்சார வாகனங்களைப் பயன்படுத்த தொடங்கி இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே யூலர் மோட்டார்ஸ் இந்த கார்கோ எலெக்ட்ரிக் வாகனத்தை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 25, 2024, 19:30 [IST]
English summary
Euler motors launches indias first adas equipped electric lcv storm ev
மேலும்... #electric vehicles #india #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+