1 கி.மீக்கு ரூ1 தான் செலவாகும்! பெட்ரோல், டீசல் காரை விட இவி தான் லாபம் எப்படி தெரியுமா?

இந்தியா முழுவதும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மவுசு அதிகமாகி வருகிறது. அதே நேரத்தில் டாடா மற்றும் எம்ஜி நிறுவனங்கள் தனது எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையை கணிசமான அளவு குறைத்துள்ளனர். தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களை விட எலெக்ட்ரிக் வாகனங்கள் தான் லாபகரமான வாகனமாக மாறி உள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

தற்போது எலெக்ட்ரிக் கார் விற்பனை என்பது இந்தியாவில் மிக கணிசமான அளவு வளர்ச்சியை பெற்று வருகிறது. கிட்டத்தட்ட எலெக்ட்ரிக் காருக்கான யுத்தம் நடக்கிறது என்றே சொல்லலாம். ஒரு பக்கம் அரசு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியங்களை வழங்கி வருகிறது. மற்றொரு பக்கம் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதன் விலையை கணிசமான அளவு குறைத்து வருகின்றனர்.

EV are profit than petrol

இதனால் வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை விரும்பி வாங்குவார்கள். இதனால் அந்நிறுவனங்களின் வாகன விற்பனை என்பது கணிசமான அளவு உயரும் என்பதால் இதை செய்து வருகிறார்கள். இதில் டாடா மோட்டார்ஸ் மற்றும் எம்ஜி ஆகிய நிறுவனங்கள் தற்போது தங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையை கணிசமான அளவு குறைத்துள்ளன. இதனால் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவது மிகப்பெரிய பணம் சேமிப்பு செய்யும் விஷயமாக மாறி உள்ளது.

தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்ஸான் இவி மற்றும் டியாகோ இவி ஆகிய கார்களின் விலையை ரூபாய் 1.20 லட்சம் வரை குறைத்துள்ளது. இதனால் நெக்ஸான் இவி கார் தற்போது மார்க்கெட்டில் ரூபாய் 14.49 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது.

EV are profit than petrol

அதன் லாங் ரேஞ்ச் வேரியண்ட் கார் ரூபாய் 16.99 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் ஆகிறது. டியாகோ இவி காரின் விலையும் ரூ70 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இதன் பேஸ் மாடல் உள்ள ரூபாய் 8 லட்சம் என்ற நிலையில் விற்பனைக்கு வருகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களை பொறுத்தவரை அதன் விலை என்பது பெருமளவு அந்த காரில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரிக்காண விலையாக இருக்கிறது. இதன் காரணமாகவே பெட்ரோல், டீசல் கார்களை விட எலெக்ட்ரிக் கார்களின் விலை சற்று அதிகமாக இருக்கிறது. ஆனால் எலெக்ட்ரிக் கார்களில் விலை சற்று அதிகமாக இருக்கிறது என்பதற்காக அந்த காரை வாங்கினால் நஷ்டம் என்பது இல்லை. சொல்லப்போனால் பெட்ரோல் டீசல் காரை விட எலெக்ட்ரிக் காரை வாங்குவதுதான் மிகப்பெரிய லாபமாக இருக்கிறது.

EV are profit than petrol

உதாரணத்திற்காக நெக்ஸான் இவி காரை எடுத்துக் கொள்வோம். இந்த காரை நீங்கள் புதிதாக வாங்கி மூன்று முதல் ஐந்து மாதத்திற்குள் 15,000 கிலோ மீட்டரை ஒட்டுவீர்கள் என்றால், பெட்ரோல் கார் என்றால் 17 கிலோ மீட்டர் என மைலேஜ் வைத்து கணக்கிட்டாலும் பெட்ரோல் செலவு மட்டும் சுமார் ரூ88 ஆயிரம் வரை வருகிறது.

இதுவே இதே காரின் அதிக மைலேஜ் தரும் வேரியன்டான டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் காரை பொறுத்தவரை 24 கிலோ மீட்டர் மைலேஜ் எடுத்துக் கொண்டாலும் ரூபாய் 56 ஆயிரம் வரை டீசல் செலவு வருகிறது. இது வெறும் 3-5 மாதத்திற்கான செலவு தான்.

EV are profit than petrol

நெக்ஸான் இவி காரை பயன்படுத்தும் போது 15,000 கிலோ மீட்டர் பயன்படுத்தினால் அதற்கு சார்ஜ் போடும் செலவு வெறும் ரூ15,000 தான் ஆகிறது. அதாவது ஒரு யூனிட்டுக்கு ரூபாய் பத்து என கணக்கிட்டாலும் வெறும் ரூ15 ஆயிரத்திற்குள் செலவை அடக்கி விடலாம்.

தமிழகத்தில் நீங்கள் வீட்டில் எவ்வளவு யூனிட் மின்சாரம் பயன்படுத்துகிறீர்கள் என்பதை பொறுத்து யூனிட்டுக்கான விலை மாறும். குறைவாக பயன்படுத்தினால் குறைந்த விலையும் அதிகமாக பயன்படுத்தினால் அதிக விலையும் வசூலிக்கப்படுகிறது. அதிகபட்ச விலையை நாம் இங்கு கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளோம். ரூபாய் 15 ஆயிரத்திற்கும் குறைவாக தான் செலவாகும் அதிகமான வாய்ப்புகள் இல்லை.

EV are profit than petrol

அப்படி என்றால் மிகப்பெரிய அளவு பணம் மிச்சம் ஏற்படுகிறது. நெக்ஸான் இவி பெட்ரோல் காரை பொறுத்தவரை ஆன்-ரோடு விலையாக ரூ14.2 லட்சம். இதுவே டீசல் காரை பொறுத்தவரை ரூ15.4 லட்சமாக இருக்கிறது. எலெக்ட்ரிக் காரின் விலை ரூ15.1 லட்சம் என விற்பனையாகிறது. அப்படியென்றால் பெட்ரோல் காரை விட சுமார் ரூ1.1 லட்சம் தான் கூடுதல் விலையில் எலெக்ட்ரிக் கார் விற்பனையாகிறது. டீசல் காரை விட எலெக்ட்ரிக் காரின் விலை குறைவுதான்.

இப்படியாக பார்க்கும் போது நீங்கள் பெட்ரோல் கார் வாங்குவதைவிட எலெக்ட்ரிக் காரை சற்று அதிக விலை கொடுத்து வாங்கினாலும் அதற்காக பெட்ரோல் போடும் செலவை கணக்கிட்டால் ஒரே ஆண்டிற்குள் நீங்கள் கூடுதலாக கொடுத்த பணம் உங்களுக்கு மிச்சமாகிவிடும். அதன் பின் உங்களுக்கு பெட்ரோல் செலவு மிகப்பெரிய அளவில் மிச்சம் தான்.

எம்ஜி நிறுவனமும் தனது கோமெட் இவி என்ற சிறிய ரக எலெக்ட்ரிக் காரின் விலையை ரூபாய் ஒரு லட்சம் வரை குறைத்துள்ளது. தற்போது விலை குறைப்பிற்கு பிறகு ரூபாய் 7 லட்சம் என்ற விலையில் இந்த கார் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது.

எம்ஜி நிறுவனம் இதுபோக இசட்எஸ் மற்றொரு இவி காரையும் விற்பனை செய்து வருகிறது. இந்த கார் தற்போது ரூபாய் 19 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதற்கு முன்னர் இந்த கார் ரூ22 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வந்தது தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது இந்த விலை குறைப்பு மூலம் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் தங்கள் பெட்ரோல், டீசல் கார்களை விட மிக குறைவான செலவில் எலெக்ட்ரிக் கார்களை இயக்க முடியும் என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளனர். நீங்கள் எப்படி கணக்கு செய்து பார்த்தாலும் பெட்ரோல்,டீசல் காரை விட எலெக்ட்ரிக் கார் தான் லாபகரமாக இருக்கிறது. இதனால் விரைவில் எலெக்ட்ரிக் காரின் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 14, 2024, 15:13 [IST]
English summary
Ev profit petrol tata mg cut prices cost 1km rs1
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X