கார் காதலர்களுக்கு மிக பெரிய விருந்து அக்டோபர்ல காத்திருக்கு! தீபாவளிக்கு கார் வாங்க போறவங்களுக்கு கொண்டாட்டம்
வருகின்ற அக்டோபர் மாதம் கார் காதலர்களுக்கு மிகப் பெரிய விருந்தளிக்கும் மாதமாக அமைய இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக பல கார் மாடல்கள் அந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இருப்பினும் இந்த பட்டியலில் நாம் நான்கு முக்கிய அறிமுகங்களையே பார்க்க இருக்கின்றோம். மாருதி சுஸுகி (Maruti Suzuki), கியா (Kia), நிஸான் (Nissan) மற்றும் பிஒய்டி (BYD) உள்ளிட்ட நிறுவனங்களே வரும் அக்டோபர் மாதத்தை அதகளப்படுத்தும் விதமாக தங்களின் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்ய இருக்கின்றனர்.
இந்த நிறுவனங்கள் என்ன மாதிரியான தயாரிப்பை அறிமுகம் செய்ய இருக்கின்றன என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, இந்த கார்கள் வருகின்ற விஜயதசமி மற்றும் தீபாவளியை முன்னிட்டு விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றன. எனவே இந்த பண்டிகைக் காலத்தில் புதிய காரை வாங்க நினைப்பவர்கள் கூடுதலாக இந்த கார்களையும் தங்களின் செக் லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ளலாம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire): இந்தியர்கள் பலரின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக புதிய டிசையர் இருக்கின்றது. இது இப்போது விற்பனையில் இருக்கும் டிசையர் கார் மாடலைக் காட்டிலும் பலமடங்கு மேம்பட்ட கார் மடால் ஆகும். மைலேஜ் தருவதில், தொழில்நுட்பங்களை தாங்கியிருப்பது மற்றும் மைலேஜை தருவது என பலவற்றில் பலமடங்கு முன்னேறிய கார் மாடலாக புதிய டிசையர் தயார் செய்யப்பட்டு உள்ளது.
விஜயதசமி மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே இந்த கார் மாடலை மாருதி சுஸுகி விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த காரின் துள்ளியமான அறிமுக நாள் பற்றிய விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் புதிய டிசையர் இந்த மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படு என தெரிவிக்கின்றன.
புதிய எல்இடி ஹெட்லைட், புதிய கிரில், புதிய பனி மின் விளக்கு, புதிய டைமண்ட் கட் அலாய் வீல், புதிய டெயில் லைட், புதிய ரியர் பம்பர் உள்ளிட்டவற்றாலேயே இந்த கார் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. எனவே டிசையர் கார் காதலர்களை கட்டாயம் இது கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தொடர்ந்து, புதிய டிசையர் கார் மாடலில் புதிய மோட்டாரே பயன்படுத்தப்பட இருக்கின்றது. 1.2 லிட்டர் இசட்12இ, 3 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட இருக்கின்றது. இது ஒரு லிட்டருக்கு 24 கிமீட்டருக்கும் அதிக மைலேஜை வழங்கும் திறன் கொண்டது என கூறப்படுகின்றது. இதே மோட்டாரே புதிய ஸ்விஃப்ட் கார் மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
நிஸான் மேக்னைட் (Nissan Magnite Facelift): நிஸான் நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல் என மேக்னைட் கார் மாடலை கூறலாம். இந்த கார் மாடலின் பக்கம் மக்களின் கவனத்தை கூடுதலாக திசை திருப்பும் பொருட்டே அந்நிறுவனம் தற்போது புதுப்பிக்கப்பட்ட மேக்னைட் கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.
அக்டோபர் 4ஆம் தேதி இந்த காரின் அறிமுகம் அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மாருதி சுஸுகி அதன் டிசையர் கார் மாடலை புதுப்பித்திருப்பதைப் போலவே நிஸான் நிறுவனமும் தன்னுடைய மேக்னைட் கார் மாடலை பலநிலைகளில் புதுப்பித்திருக்கின்றது. ஹெட்லைட், பம்பர், டேஷ்போர்டு ஆகியவற்றை இந்த கார் மாடல் கொண்டிருக்கும்.
இதுதவிர, கூடுதலாக எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கையும் இந்த காரில் இடம் பெற இருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், எஞ்சின் விஷயத்தில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் அழகுப்படுத்துதல் விஷயத்திலேயே இந்த கார் மெருகேற்றப்பட்டு இருக்கும்.
கியா கார்னிவல் (Kia Carnival Facelift): இந்தியாவில் இந்த கார் மாடல் வருகின்ற 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இந்த காருக்கான புக்கிங் பணிகள் ஏற்கனவே நாட்டில் தொடங்கிவிட்டன. இதுவும் இந்தியாவிற்கு ஏற்கனவே பழக்கப்பட்ட கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஆனால், இப்போது அது விற்பனையில் இல்லை. இதன் புதிய தலைமுறை வெர்ஷனே இந்தியாவில் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. கியா கார்னிவல் ஓர் எம்பிவி ரக கார் மாடல் ஆகும். அதிக ஆடம்பர அம்சங்களைத் தாங்கிய வாகனமாகவும் இதனை கியா தயார் செய்திருக்கின்றது. பணக்காரக் குடும்பங்களுக்கு ஏற்ற காராகவே இதனை கியா தயார் செய்துள்ளது.
மிகவும் ஸ்டைலான வெளிப்புற தோற்றம், அழகிய ஹெட்லைட், எல்இடி டிஆர்எல், டூயல் சன்ரூஃப், அலாய் வீல், ஹெட்-அப் திரை, பவர் ஸ்லைடிங் வகை டோர், டிஜிட்டல் ரியர் வியூ மிர்ரர், அதிக சொகுசான இருக்கைகள், இரண்டு பெரிய திரைகள், அடாஸ் அம்சம் போன்ற அம்சங்களையே இந்த காரில் அப்கிரேடின்கீழ் கியா வழங்கி இருக்கின்றது. இத்தகைய அம்சங்களுடனேயே சீக்கிரமே இந்த கார் நாட்டில் மீண்டும் விற்பனைக்கு வர இருக்கின்றது.
பிஒய்டி இ-மேக்ஸ்7 (BYD eMAX 7): சீன நிறுவனத்தின் இந்த கார் மாடலும் இந்தியாவிற்கு பழக்கப்பட்ட கார் மாடலே ஆகும். இந்தியாவில் இப்போது இ6 எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடலையே அப்டேட் செய்து பிஒய்டி விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.
காரை புதுப்பித்ததோடு, அதன் பெயரையும் நிறுவனம் தற்போது மாற்றியிருக்கின்றது. இ-மேக்ஸ் 7 எனும் பெயரிலேயே அது சந்தையைக் களம் காண இருக்கின்றது. இந்த காரில் 6 மற்றும் 7 இருக்கைகள் தேர்வுகள் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகையால், இந்தியாவின் முதல் அதிக இருக்கைகளைக் கொண்ட எலெக்ட்ரிக் கார் மாடலாக இமேக்ஸ் 7 அமைய இருக்கின்றது.
3 வரிசை இருக்கை அமைப்பைக் கொண்ட இந்த கார் மாடல் ஓர் முழு சார்ஜில் 531 கிமீ ரேஞ்சை வழங்கும் என கூறப்படுகின்றது. இந்த காரின் அறிமுகம் நாள் பற்றிய விபரம் வெளியாகவில்லை. அக்டோபர் 8இல் இதை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த காரை புக் செய்யும் முதல் ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 51 ஆயிரத்திற்கான பலனை அது வழங்க இருக்கின்றது. இதுதவிர காம்ப்ளிமென்டரியாக வீட்டில் வைத்து சார்ஜ் செய்வதற்கான கருவியையும் அது வழங்க இருப்பதாக தெரிவித்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பண்டிகைக் காலத்தில் வாகனங்களின் விற்பனை பலமடங்கு அதிகரித்துக் காணப்படும். இந்த நிலையையே தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு வாகன உற்பத்தியளர்கள் புதுப்பிக்கப்பட்ட கார் மாடல்களையும், புதுமுக கார் மாடல்களையும் விற்பனைக்குக் கொண்டு வருவதில் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








