பெட்ரோல் காரை சிஎன்ஜி காராக மாற்ற முடியுமா?.. இதுபோல மாற்ற எவ்வளவு செலவாகும்?.. மாற்றினால் லாபம் கிடைக்குமா?..

இந்தியாவில் சிஎன்ஜி (CNG) வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. இந்த காரணத்தினால்தான் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் பல தங்களின் பிரபலமான கார் மாடல்களில் சிஎன்ஜி ஆப்ஷனை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இதேபோல், இரண்டு சக்கர வாகன உற்பத்தியாளர்களும் சிஎன்ஜியில் இயங்கும் டூ-வீலர்களை விற்பனைக்குக் கொண்டு வருவதில் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். பஜாஜ் (Bajaj) நிறுவனம் ஏற்கனவே இந்த வேலையை தொடங்கிவிட்டது. நிறுவனம் அதன் முதல் சிஎன்ஜியில் இயங்கும் பைக் மாடலை சமீபத்திலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

ஃப்ரீடம் 125 பைக்கையே அது சிஎன்ஜியில் வாகனமாக தயார் செய்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதுவே உலகின் முதல் சிஎன்ஜி பைக்கும்கூட. இதைத்தொடர்ந்து, டிவிஎஸ் நிறுவனமும் அதன் சிஎன்ஜியில் இயங்கும் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான பணியில் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது.

Petrol to cng car

பெட்ரோல் விலைவாசி உயர்வில் இருந்து தங்களின் பாக்கெட்டுகளைக் காக்க வந்த வாகனமாகவே பலர் சிஎன்ஜி வாகனங்களைப் பார்க்கின்றனர். இதன் விளைவாகவே அவை தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றது. இத்தகைய சிஎன்ஜி வாகனங்களை புதிதாகதான் வாங்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

உங்களின் பெட்ரோலில் இயங்கும் வாகனங்களையே சிஎன்ஜியால் இயங்கும் வாகனமாக மாற்றிக் கொள்ள முடியும். இதற்கு ஆகக் கூடிய செலவு என்ன? இந்தியாவில் பெட்ரோல் வாகனங்களை சிஎன்ஜி வாகனமாக மாற்றிக் கொள்ள முடியுமா? என்பது போன்ற முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவில் பெட்ரோல் கார்களை சிஎன்ஜி வாகனங்களாக மாற்றிக் கொள்ள முடியும். இதற்கான சிஎன்ஜி கிட்-கள் ஆஃப்டர் மார்க்கெட்டில் மிக தாராளமாக விற்பனைக்குக் கிடைக்கின்றன. ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 70 ஆயிரம் வரையிலான விலையில் அவை விற்கப்படுகின்றன. தயாரிப்பு பிராண்டைப் பொருத்தும், சிஎன்ஜி கிட்-இன் வகையைப் பொருத்தும் இந்த விலை மாறுபடலாம்.

பொதுவாக, சிஎன்ஜி கிட்-ஐ பொருத்துவதற்கு என தனியாக யாரும் கட்டணம் வசூலிப்பது இல்லை. அதேவேளையில், ஒரு சிலர் இதற்கு தனியாக சில ஆயிரங்களை கட்டணமாக வசூலிப்பதுண்டு. இந்த அளவிற்கு பணம் கொடுத்து செய்யப்படும் மாற்றத்தை சுலபமாக 2 அல்லது 3 ஆண்டுகளிலேயே, சிஎன்ஜி பயன்பாட்டினால் எடுத்துவிட முடியும்.

பெட்ரோலைவிட குறைவான விலை மற்றும் அதிகம் மைலேஜை சிஎன்ஜி வாகனங்கள் வாரி வழங்கும் என்பதால் அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் மிகப் பெரிய சேமிப்பும் வந்து சேரும். ஆகையால், நம்முடைய பாக்கெட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. குறிப்பாக, இதற்கு ஆகக் கூடிய பராமரிப்பு செலவும் மிக மிக குறைவே ஆகும்.

பெட்ரோல் காருக்கு வழங்கப்படுவதைப் போலவே சிஎன்ஜியாக மாற்றிய பின்னரும் அந்த காருக்கு வழக்கமான பராமரிப்பு மிகவும் அவசியமானதாகப் பார்க்கப்படுகின்றது. இதற்கு சராசரியாக ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் தொடங்கி ரூ. 20 ஆயிரம் பராமரிப்பு செலவு ஆகலாம். சிஎன்ஜி காரை பயன்படுத்தி வரும் பெரும்பாலானோர் பெட்ரோல் காரைக் காட்டிலும் குறைவான பராமரிப்பு செலவே தங்கள் செய்வதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுமாதிரியான காரணத்தினாலேயே தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகள் சில சமீபத்தில் சிஎன்ஜி வாகனங்களாக மாற்றப்பட்டன. தினமும் டீசலுக்கு ஏற்படும் செலவைக் குறைக்கும் பொருட்டே இந்த நடவடிக்கையை தமிழக போக்குவரத்து கழகம் கையில் எடுத்தது. சோதனையோட்டமாகவே 6 பேருந்துகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. பெட்ரோலை விட பல ரூபாய் மலிவானதே சிஎன்ஜி.

ரூ. 100க்கும் அதிகமாகவே பெட்ரோலின் விலை இருக்கின்றது. அதேவேளையில், சிஎன்ஜி கிலோ ஒன்று ரூ. 87.50க்கு விற்கப்படுகின்றது. ஒரு கிலோ சிஎன்ஜிக்கு சுமார் 25 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். ஆனால், பெட்ரோல் காரிலோ 18 கிமீட்டருக்கும் குறைவான மைலேஜே பெற முடியும்.

ஆகையால், பல நிலைகளில் சிஎன்ஜி வாகனங்கள் லாபம் ஈட்டித் தரக் கூடியவையாக இருக்கின்றன. இதுமட்டுமில்லைங்க சுற்றுச்சூழலுக்கும் உகந்த வாகனமாக சிஎன்ஜி வாகனங்கள் பார்க்கப்படுகின்றன. பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் சிஎன்ஜி வாகனங்கள் மிக மிக குறைவான அளவிலேயே கார்பனை வெளியேற்றுகின்றது என ஆராய்ச்சி முடிவுகளும் தெரிவிக்கின்றன. இதனால்தான் அரசாங்கம் சார்பிலும் சிஎன்ஜி வாகன பயன்பாடு ஊக்குவிக்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெட்ரோல் காரை சிஎன்ஜிக்கு மாற்றுவது உங்களுக்கு பெரிய செலவாக தெரியலாம். ஆனால், இந்த ஆரம்ப முதலீட்டால் பின்னாளில் மிகப் பெரிய லாபம் கிடைக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். இத்துடன், சுற்றுச்சூழல் நலனில் நம்முடைய பங்கீட்டையும் இந்த வாகன பயன்பாட்டால் வழங்க முடியும். அதேவேளையில், சிஎன்ஜி வாகனமாக மாற்றும் முன்னர் இதற்கான தடையில்லா அனுமதியை ஆர்டிஓ-விடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Sunday, July 21, 2024, 15:00 [IST]
English summary
Exploring the economics the real cost of converting your petrol car to cng in india
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+