இந்த பணக்காரங்க தேடி போய் அதிகம் வாங்கும் ஸ்கோடா குஷாக் கார் பாதுகாப்பானதா?.. இதோ ஓர் முழு அலசல்!

உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஸ்கோடா (Car), இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கிடைக்கும் அதிக பிரீமியம் அம்சங்கள் நிறைந்த கார் மாடல்களில் குஷாக் (Kushaq)-ம் ஒன்றாகும். இது ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். பணக்காரர்கள் பலரின் மனம் கவர்ந்த கார் மாடலாக குஷாக் எஸ்யூவி இருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் ஓரளவிற்கு வசதிப்படைத்த பணக்காரர்கள் மட்டுமே நுகர (வாங்க)-க் கூடிய ஓர் கார் மாடலாக ஸ்கோடா குஷாக் எஸ்யூவி காட்சியளிக்கின்றது.

இத்தகைய கார் மாடலின் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றியே இந்த பதிவில் ஆராய இருக்கின்றோம். அதாவது, ஸ்கோடா குஷாக் எஸ்யூவி அது விற்பனைக்குக் கிடைக்கும் பிரிவில் அதிக பாதுகாப்பான கார் தானா? என்பதைப் பற்றியே பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Skoda kushaq safety features

பாதுகாப்பிற்கு முன்னுரிமை: இந்தியர்களில் பெரும்பாலானோர் தற்போது பாதுகாப்பிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கிவிட்டனர். இதன் விளைவாகவே டாடாவின் தயாரிப்புகள் முன்பு எப்போது இல்லாத அளவிற்கு தற்போது விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, நிறுவனத்தின் பஞ்ச் மற்றும் நெக்ஸான் ஆகிய கார் மாடல்களின் விற்பனை மிக அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. காரணம் அவை 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்றவை மற்றும் சற்று விலை குறைவானவை.

இதைபோலவே ஸ்கோடா குஷாக் பல நிலைகளில் பாதுகாப்பான காராக காட்சியளிக்கின்றது. இதுவும் பாதுகாப்பு விஷயத்தில் 5 ஸ்டார் ரேட்டிங்கையேப் பெற்றிருக்கின்றது. குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்விலேயே இந்த தரமான ரேட்டிங்கை குஷாக் பெற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய ரேட்டிங்கைக் கொண்டிருப்பதாலும், அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கி இருப்பதாலுமே பணக்காரர்கள் இந்த காரை அதிகளவில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

அப்படி என்னென்ன பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அமைப்புகள் குஷாக் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன? ஸ்கோடா குஷாக் எஸ்யூவி காரில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக ஆறு ஏர்பேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) மற்றும் மல்டி-கோலிஷன் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவற்றையும் இந்த கார் கொண்டுள்ளது. இந்த அம்சங்களே பயணிகளுக்கு விரிவான பாதுகாப்பை வழங்குகிறது.

மிகவும் ஸ்ட்ராங்கான கட்டமைப்பு: காரில் பாதுகாப்பு அம்சங்களை வழங்குவதில் மட்டுமே இந்த நிறுவனம் அதிக அக்கறை காட்டவில்லை. இந்த காரின் உடலை உருவாக்குவதிலும் அதிக கவனம் ஸ்கோடா செலுத்தி இருக்கின்றது. இதன் அடிப்படையில் அதிக வலுவான எஃகு சட்டகம் இந்த காரின் உருவாக்கத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மிக பெரிய மோதல்களையும் தாங்கும் திறன் கொண்டதாக இது இருக்கின்றது. எனவே இதன் ஆயுட்காலமும் மிக அதிகமாக உள்ளது.

டிரைவர் உதவி தொழில்நுட்பங்கள்: ஸ்கோடா குஷாக் பலவிதமான ஓட்டுநருக்கு உதவி செய்யும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கி இருக்கின்றது. அந்தவகையில், ஹில் ஹோல்ட் கண்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றை அது தன்னுள் தாங்கி இருக்கின்றது. ஹில் ஹோல்டு கண்ட்ரோல் செங்குத்தான சரிவுகளில் கட்டுப்பாட்டை பராமரிக்க உதவுகிறது. அதே நேரத்தில் க்ரூஸ் கன்ட்ரோல் நீண்ட டிரைவ்களின் போது சிறந்த இயக்க வசதியை வழங்குகிறது.

குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள்: ஸ்கோடா நிறுவனம் குஷாக் எஸ்யூவியில் குழந்தைகளுக்கான பாதுகாப்பிலும் அதிகம் கவனம் செலுத்தி இருக்கின்றது. இதன் அடிப்படையில் அது குழந்தைகளின் இருக்கைகளுக்கான ஐசோஃபிக்ஸ் (ISOFIX) மவுண்ட்களை வழங்கி உள்ளது. இது, சிறு வயது பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

பாதுகாப்பான பிரேக்கிங் சிஸ்டம்: ஸ்கோடா நிறுவனம் இந்த குஷாக் எஸ்யூவி காரில் மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்)-ஐ வழங்கி இருக்கின்றது. இத்துடன், டிராக்சன் கண்ட்ரோல் சிஸ்டமும் வழங்கப்பட்டு உள்ளது. வழ-வழப்பான மற்றும் ஈரப்பதம் மிகுந்த சாலைகளிலும் கைதேர்ந்த கையாளுதலை இந்த அம்சங்கள் வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பயணிகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள்: ஸ்கோடா குஷாக் காரில் சீட்பெல்ட் ப்ரீடென்ஷனர்கள் மற்றும் லோட் லிமிட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. சீட் பெல்ட்கள் பயணிகளை உறுதியாகப் பிடித்துக் கொள்ளும். எனவே கார் விபத்தைச் சந்தித்தாலும் பயணிகள் தூக்கி வீசப்படாமல் அப்படியே இருக்கையில் பத்திரமாக தங்க வைக்கப்படுவார்கள். இதில் வழங்கப்பட்டு இருக்கும் சுமை கட்டுப்படுத்திகள் (ப்ரீடென்ஷனர்கள்), சீட் பெல்ட்டால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க உதவுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடா குஷாக் பல பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கின்றது. மேம்பட்ட டிரைவிங் அசிஸ்டன்ஸ் முதல் வலுவான கட்டமைப்பு வரை என பல விரிந்த பாதுகாப்பு வளையத்தை இந்த கார் மாடல் அதன் பயணிகளுக்கு வழங்குகின்றது. இதன் விளைவாகவே இந்த காருக்கு 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கும் கிடைத்திருக்கின்றது. மேலும், இந்திய பணக்காரர்கள் மத்தியில் கணிசமான அளவு நல்வரவேற்பையும் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 29, 2024, 17:47 [IST]
English summary
Exploring the safety features of skoda kushaq is it the safest car in its class
மேலும்... #skoda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+