டாடா பஞ்ச் காருக்கு போட்டியா வந்துச்சு! இப்ப ஆளையே காணோம்! இந்த காரை மக்கள் ஏன் விரும்பல தெரியுமா?

டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில், அந்த காருக்கு போட்டியாக ஹூண்டாய் நிறுவனம் எக்ஸ்டர் என்ற மைக்ரோ எஸ்யூவி செக்மெண்ட் கார் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இந்த கார் அறிமுகமான புதிதில் மக்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்தது. இதனால் இந்த காரின் விற்பனை அதிகரித்தது. ஆனால் தற்போது இந்த காரின் விற்பனை குறைந்து வருகிறது. இதனால் இந்த கார் டாப் 10 பட்டியலிலேயே இல்லாத மோசமான சூழ்நிலையை எட்டி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்திய மக்கள் எல்லாம் தற்போது சிறிய ரக கார்களை விட்டுவிட்டு எஸ்யூவி ரக கார்களை தான் அதிகம் விரும்புகிறார்கள் என்பதை புரிந்து கொண்ட டாடா நிறுவனம் மைக்ரோ எஸ்யூவி என்ற செக்மெண்டில் புதிதாக பஞ்ச் என்ற காரை அப்பொழுது அறிமுகப்படுத்தியது. அப்பொழுது இந்த கார் மக்கள் மனதில் மிகப்பெரிய இடம் பிடித்தது. அதுபோக இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களும் அதிகமாக இருந்தால் பலர் இந்த காரை விரும்பி வாங்கினார்கள்.

exter sales july 2024

இந்நிலையில் டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் தற்போது அதிகமாக விற்பனையாகும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் ஜூலை மாதத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் எண்ணிக்கையில் விற்பனையாக எஸ்யூவி காராக இருக்கிறது. இருந்தாலும், டாப் 10 பட்டியலில் டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் இடம் பெற்றுள்ளது. இந்த பஞ்ச் காருக்கு போட்டியாக ஹூண்டாய் நிறுவனம் எக்ஸ்டர் என்ற மைக்ரோ எஸ்யூவி செக்மெண்ட் கார் ஒன்றை அறிமுகப்படுத்தியது.

இந்த கார் அறிமுகமாகும் போது நேரடியாக டாடா நிறுவனத்தின் பஞ்ச் காருக்கு போட்டியாக தான் அறிமுகமானது. இந்த காரின் விலையும் ரூபாய் 6.13 லட்சம் என்ற விலையில் தான் தற்போது விற்பனையாகி வருகிறது. இதனால் இந்த காருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்த நிலையில், இந்த கார் அறிமுகமானபோது நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.

exter sales july 2024

ஆனால் நாட்கள் செல்ல செல்ல இந்த கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. சாலையில் இந்த காரை பார்க்கும்போது மக்களுக்கு பஞ்ச் கார் அளவுக்கு லுக்காக இந்த கார் இல்லை என்பதால் பலர் இந்த காரை வாங்க விரும்பவில்லை. இதன் காரணமாக கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் விற்பனையான எஸ்யூவி கார்களின் டாப் 10 பட்டியலிலேயே இந்த காருக்கு இடம் இல்லாமல் போனது.

கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் ஹூண்டாய் கிரெக்டா கார் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையான எஸ்யூவி காராக இருக்கிறது. மொத்தம் 17,350 கார்கள் விற்பனையாகி உள்ளன. டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் 16,321 கார்கள் விற்பனையாகியுள்ளன. மூன்றாவது இடத்தில் மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் இருக்கிறது. மொத்தம் 14,676 கார்கள் விற்பனையாகி உள்ளன.

exter sales july 2024

இப்படியாக டாடா நெக்ஸான், மஹிந்திரா ஸ்கார்பியோ, மாருதி ஃபிராங்க்ஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்0, கியா சோனட், மாருதி கிராண்ட் விட்டாரா, ஹுண்டாய் வயென்யூ ஆகிய கார்கள் எல்லாம் டாப் 10 பட்டியலில் இருக்கிறது. ஆனால் ஹுண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்டர் கார் இந்த பட்டியலிலேயே இல்லை. கடந்த ஜூலை மாதம் முழுவதும் வெறும் 6,037 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன.

ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்டர் காருக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பு இல்லை என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. இதற்கு முக்கியமான காரணம் இந்த காரின் வடிவமைப்பு மற்றும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ள அம்சங்கள் மக்களுக்கு தேவையானதாக இல்லை என கூறப்படுகிறது. மேலும் டாடா நிறுவனத்தின் பஞ்ச் காரின் விற்பனைக்கு மிக முக்கிய காரணம் அந்த கார் பெற்ற பாதுகாப்பு ரேட்டிங் தான்.

ஆனால் ஹுண்டாய் எக்ஸ்டர் காரின் பாதுகாப்பு ரேட்டிங் குறித்த விபரங்கள் இல்லாததால் மக்களுக்கு இந்த கார் மீது பெரிய அளவில் நம்பிக்கை இல்லை. மேலும் இந்த காரின் வடிவமைப்பும் ரக்கட் லுக்கில் இல்லாமல் கொஞ்சம் சாஃப்டான லுக்கில் இருப்பதால் பலன் இந்த காரை வாங்க பெரிய அளவில் விருப்பம் காட்டவில்லை என தெரிகிறது.

டிரைவ்ஸ்பர்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனம் இந்த காரை கிராஷ் டெஸ்ட் செய்து இதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தகவல்களை வெளியிடும் பட்சத்தில், இந்த காரின் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது மட்டுமல்லாமல் இந்த காரில் தேவையில்லாத பல்வேறு அம்சங்கள் உட்புகுந்து காரின் விலையை அதிகரித்துள்ளது. இதை நீக்கி மக்களுக்கு தேவையான அம்சங்களை கொடுத்தால் மக்கள் இந்த காரை வாங்க வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, August 9, 2024, 7:00 [IST]
English summary
Exter sales july 2024 not in top 10 suvs
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X