இந்த ஹூண்டாய் கார் மாருதியின் கண்களில் விரலை விட்டு ஆட்ட போகுது.. மைலேஜை அள்ளி அள்ளி கொடுக்குமா!

அதீத அழகைப் போலவே அதிகம் மைலேஜ் தரக் கூடியதாகவே ஃபேஸ்லிஃப்ட் ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி தயார் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகையால், அழகு மற்றும் அதிகம் மைலேஜ் ஆகிய இரண்டையும் அதிகம் விரும்புபவர்களுக்கு ஏற்ற கார் மாடலாக புதிய ஹூண்டாய் கிரெட்டா இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. வாருங்கள் இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவில் ஹூண்டாய் மோட்டார்ஸ் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் கிரெட்டா காரை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்தியர்களின் ஃபேவரிட் எஸ்யூவி ரக கார் மாடல்களில் ஹூண்டாய் கிரெட்டாவும் ஒன்றாகும். இதனை அந்நிறுவனம் புதுப்பித்து விற்பனைக்குக் களமிறக்கி இருப்பது அந்த கார் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

Hyundai creta running shot

இந்த நிலையிலேயே, இந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் விதமாக ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டாவின் மைலேஜ் விபரங்களை வெளியிட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக ஃபேஸ்லிஃப்ட் கிரெட்டா அதிகம் மைலேஜ் தரும் கார் மாடலாக உருவாகி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. குறிப்பாக, அதன் டீசல் மோட்டார் தேர்வே அதிகம் மைலேஜை தரக் கூடியதாக இருக்கின்றது.

இதை சற்று குறைவான மைலேஜையே பெட்ரோல் தேர்வு வழங்குகின்றது. ஃபேஸ்லிஃப்ட் ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி 1.5 லிட்டர் நேச்சுரல் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய மோட்டார் தேர்வுகளிலேயே விற்பனைக்குக் கிடைக்கும். இத்துடன், 6எம்டி, 6ஐஎம்டி, 7டிசிடி ஆகிய டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

Hyundai creta climate control

இதில் 7 டிசிடி கியர்பாக்ஸ் தேர்வான 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் தேர்வில் மட்டுமே வழங்கப்படும். இது ஒரு லிட்டருக்கு 18.4 கிமீ வரையில் மைலேஜ் தரும். மற்ற இரண்டு பெட்ரோல் மோட்டார் தேர்வுகளும் 17.4 கிமீ தொடங்கி 17.7 கிமீ வரையில் மைலேஜ் தரும்.

டீசல் மோட்டார் தேர்வில் 6எம்டி கியர்பாக்ஸ் வசதிக் கொண்டது ஒரு லிட்டருக்கு 21.8 கிமீ மைலேஜையும், 6ஏடி கியர்பாக்ஸ் வசதிக் கொண்டது ஒரு லிட்டருக்கு 19.1 கிமீ மைலேஜையும் வழங்கும். இதில், டீசல் 6எம்டி-யே அதிகம் மைலேஜ் வழங்கக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது. இது அராய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ மைலேஜ் விபரம் ஆகும்.

Hyundai creta front seat

ஃபேஸ்லிஃப்ட் கிரெட்டா மொத்தமாக 7 விதமான வேரியண்ட்களில் விற்பனைக்குக் கிடைக்கும். இ (E), இஎக்ஸ் (EX), எஸ் (S), எஸ் ஓ (S O), எஸ்எக்ஸ் (SX), எஸ்எக்ஸ் டெக் (SX Tech) மற்றும் எஸ்எக்ஸ் ஓ (SX O) ஆகியவையே அவை ஆகும்.

இந்த காருக்கு அறிமுக விலையாக ரூ.10,99,900 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஆரம்ப தேர்வான இ-யின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். முந்தைய கிரெட்டாவின் ஆரம்ப விலையை காட்டிலும் ரூ.10,000 மட்டுமே அதிகம் ஆகும். இதன் அதிகபட்ச விலையே ரூ. ரூ.17,23,800 ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

Hyundai creta front view

அறிமுகத்தைத் தொடர்ந்து இந்த காருக்கான புக்கிங் பணிகளும் இந்தியாவில் விறு விறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ரூ. 25 ஆயிரம் முன் தொகையில் இந்த காரை வாடிக்கையாளர்களால் புக் செய்துக் கொள்ள முடியும். இந்த காரில் அப்டேட்டின்கீழ் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

வெளிப்புறத்தில் செய்யப்பட்டு இருக்கும் மிக முக்கியமான மாற்றமாக கிரில், லைட் செட்-அப், பம்பர் மற்றும் டெயில் பகுதியில் மிகப் பெரிய மாற்றங்களை செய்திருக்கின்றது ஹூண்டாய். இதன் முன் பக்கத்தில் செய்யப்பட்டு இருக்கும் மாற்றமானது கிரெட்டா என்பதற்கு பதிலாக இது ஏதோ புதிய கார் என்பதை வெளிக்காட்டும் வகையில் உள்ளது.

Hyundai creta tracking shot

இத்துடன், லெவல் 2 அடாஸ் அம்சம், தொடு திரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஆகியவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், 360 டிகிரி கேமிராவும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கிரெட்டா எஸ்யூவி-க்கு மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்க ஃபேஸ்லிஃப்ட் கிரெட்டாவின் வருகை மிகப் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே இதன் மைலேஜ் விபரமும் வெளியாகி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 16, 2024, 15:56 [IST]
English summary
Facelift hyundai creta suv mileage details revealed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X