நெக்ஸான், சஃபாரி, ஹாரியர் கார்களை போல பஞ்ச் எப்போது அழகாக மாறும்?.. இதுக்கான தகவலே இப்போது வெளியாகிருக்கு!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), தான் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் கார் மாடல்கள் சிலவற்றை புதுப்பித்து விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் சமீபத்தில் ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார் மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை டாடா விற்பனைக்குக் களமிறக்கியது.
இதற்கு முன்னதாக நெக்ஸான் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இன்னும் சில கார் மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனையும் டாடா இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஒரு சிலரின் எதிர்பார்ப்பில் பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் இடம் பெற்றிருக்கின்றது.

டாடா மோட்டார்ஸின் மலிவு விலை கார் என்பதாலும், அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட கார் மாடல் என்பதாலும் இதற்கு இந்தியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பஞ்ச் கார் மாடலுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே நம்ம ஆட்கள் மத்தியில் இந்த கார் மாடலில் புதுப்பித்தலை எதிர்பார்க்க செய்திருக்கின்றது.
இந்த எதிர்பார்ப்பை அடுத்து பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் கார் மாடலின் வருகை எப்போது அமையும் என்கிற விபரம் தற்போது வெளியாகி இருக்கின்றது. இந்த கார் இன்னும் 14 முதல் 15 மாதங்களுக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்றே இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வந்துவிடும் என்றே கூறப்படுகின்றது. டாடா மோட்டார்ஸ் முதன்முதலில் பஞ்ச் கார் மடாலை கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அப்போதில் இருந்து இப்போது வரை விற்பனையில் மிக சிறப்பான வரவேற்பை இந்த கார் மாடல் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இது ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இதை நிறுத்தி வைக்க பெரிய அளவில் இட வசதி தேவையில்லை என்பதனாலேயே இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மேலும், 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கையும் இந்த கார் மாடல் பெற்றிருக்கின்றது. இதன் விலையும் ரூ. 6 லட்சமாக உள்ளது.
இதுபோன்ற காரணத்தினாலேயே வரவேற்பு இந்த காருக்கு தொடர்ச்சியாக இரட்டிப்பாகிக் கொண்டே இருக்கின்றது. இந்த வரவேற்பை இன்னும் பலமடங்கு அதிகரிக்கச் செய்ய வேண்டும் எனில் அடுத்தடுத்து இந்த கார் மாடலில் புதுப்பித்தல்களை வழங்கினால் மட்டுமே முடியும். தற்போது இந்தியாவில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டு விதமான மோட்டார் ஆப்ஷன்களில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
மேலும், இந்த கார் மாடலின் அனைத்து வேரியண்டுகளிலும் 4 அங்குல டிஜிட்டல் திரையை டாடா மோட்டார்ஸ் வழங்குகின்றது. சமீபத்திலேயே இந்த அம்சத்தை பஞ்ச் கார் மாடலின் அனைத்து வேரியண்டுகளிலும் கட்டாயமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. டாடா பஞ்ச் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
ப்யூர், அட்வென்சர், அக்காம்ப்ளிஷ்டு மற்றும் கிரியேட்டீவ் ஆகியவையே அவை ஆகும். ரூ. 5.99 லட்சம் தொடங்கி ரூ. 10.10 லட்சம் வரையிலான விலையில் இது விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் தேர்விலேயே பஞ்ச் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இந்த மோட்டார் 84 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதே எஞ்ஜினிலேயே சிஎன்ஜி ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது. இந்த வசதிக் கொண்ட மோட்டார் அதிகபட்சமாக 76 பிஎச்பி மற்றும் 97 என்எம் டார்க்கை வெளியேற்றும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி ஆகிய இரண்டு விதமான டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் பஞ்சில் வழங்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஞ்ச், புதுப்பிக்கப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்படும் எனில் டாடாவின் சமீபத்திய வெளியீடுகளான நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார் மாடல்களை போல மிகவும் அழகிய மற்றும் அதிநவீன வசதிகளைத் தாங்கியதாக அது மாறும். இந்த நிலை அந்த காருக்கு டிமாண்டை இன்னும் பலமடங்கு இரட்டிப்பாக்கவும் செய்யும்.


Click it and Unblock the Notifications








