வெறும் ரூ25/- செலவில் எஃப் 1 கார் ரேஸ் பாக்கலாமா? எப்படி பாக்கனும் தெரியுமா?

ஃபேன்கோடு நிறுவனம் இந்தியாவில் வரும் 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுக்கான எஃப்1 கார் பந்தய போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை பெற்றுள்ளது. இதன்படி இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள மக்களுக்கு எஃப் 1 கார் ரேஸ் போட்டிகளை ஒளிபரப்பு செய்யப் போகிறது. இதை காண்பதற்கு இந்திய மக்கள் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்ற விரிவான விவரங்களை எல்லாம் காணலாம் பாருங்கள்.

உலகம் முழுவதும் நடக்கும் எஃப்1 கார்பந்தய போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமத்தை ஃபேன்கோடு என்ற நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அப்படி இந்த 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு நடக்கும் எஃப்1 கார் ரேஸ் போட்டிகளை இந்த நிறுவனம்தான் ஒளிபரப்பு செய்யப்போகிறது. இதற்கான முதல் போட்டி ஏற்கனவே கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி துவங்கி விட்டது. இந்த ஆண்டு மொத்தம் 29 கார் ரேஸ் போட்டிகள் நடைபெற உள்ளன.

fancode f1 race broadcast

ஃபேன்கோடு நிறுவனம் கார் பந்தயம் குறித்து நடக்கும் பயிற்சி ஆட்டங்கள், தகுதி சுற்றுகள், ஸ்பிரிண்ட் ரேஸ்கள், கிராண்ட் பிக்ஸ், ஆகிய மொத்த சீசன்களையும் ஒளிபரப்பு செய்ய உள்ளது. இதை பார்ப்பவர்கள் எந்த போட்டிகளை எல்லாம் பார்க்க வேண்டும் என தேர்வு செய்து பார்க்கும் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு தனிப்பட்ட ரேஸ் அல்லது ஒட்டுமொத்த சீசன் அல்லது ஒட்டுமொத்த ஆண்டிற்கான அனைத்து சீசனகள் என தேவையானவற்றை சப்ஸ்கிரைப் செய்து பார்த்துக்கொள்ள முடியும்.

ஏற்கனவே இந்த போட்டிகள் எல்லாம் எஃப்1 டிவி ப்ரோ என்ற தளம் மூலம் இந்தியாவில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தளத்தில் அந்த போட்டிகளை காண ஆண்டிற்கு ரூபாய் 2499 செலுத்த வேண்டும் ஆனால் ஃபேன்கோடு தளத்தின் சப்ஸ்கிரிப்ஷன் என்பது குறைவான விலையில் கிடைக்கிறது. ஆண்டு ரூபாய் 599 செலவில் இதே போட்டிகளை காண முடியும். அதாவது ஒரு ரேஸ்கான ரூபாய் 25 மட்டுமே செலவு செய்தால் போதும்.

fancode f1 race broadcast

ஆண்டு முழுவதும் நடக்கும் அத்தனை ரேஸ்களையும் பார்த்துவிட முடியும் அல்லது ஒரு குறிப்பிட்ட ரேஸை மட்டுமே பார்க்க வேண்டும் என நீங்கள் கருதினால் ரூபாய் 49 செலவில் நீங்கள் குறிப்பிட்ட ரேஸை மட்டுமே காண முடியும். சமீபகாலமாக இந்தியாவில் எஃப்1 ரேஸ்களுக்கான ரசிகர்கள் அதிகமாக குவிந்து வருகின்றனர். சர்வதேச அளவில் மோட்டார் பந்தயம் போட்டிகளுக்கு பெருகிவரும் ரசிகர் பட்டாளத்தில் தற்போது இந்தியாவிலும் அதிகமாக இருக்கிறது.

இந்த போட்டியை காண எஃப் 1 டிவி தளத்தில் அதிக செலவு செய்ய வேண்டியது உள்ளதால் பலர் இந்த போட்டியை காண்பதை தவிர்த்து வருகிறார்கள். அல்லது இதைக் காண வேறு வழியை யோசித்து வருகின்றனர். இந்நிலையில் ஃபேன்கோடு நிறுவனம் குறைவான விலையில் ரசிகர்களுக்கு இந்த போட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளது.

எஃப்1 கார் பந்தயப்போட்டிகளில் அடுத்த போட்டி என்பது வரும் சனிக்கிழமை இரவு 8:30 மணிக்கு இந்தியாவில் ஒளிபரப்பாகிறது. பக்ரேனில் நடக்கும் எப்1 போட்டிகள் இதில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. நீங்கள் இந்த எஃப் 1 கார் ரேஸ் போட்டிகளை பார்க்க வேண்டும் என்றால் இப்பொழுதே ஃபேன்கோடு என்ற ஆப் டவுன்லோட் செய்து சப்ஸ்கிரைப் செய்து வைத்துக் கொள்ளுங்கள். மிக குறைவான விலையில் நீங்கள் எஃப் 1 போட்டியை காண முடியும்.

இந்தியாவில் கார் ரேஸ் பந்தயத்தை காண ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலான கார் ரேஸ்கள் வெளிநாடுகளில் நடப்பதால் அந்த போட்டிகளை இந்தியாவில் உள்ள ரசிகர்களால் காண முடிவதில்லை. கார் ரேஸ் போட்டிகளை காண்பதற்கான வழிவகை செய்து கொடுத்தாலே இந்தியாவில் பெரிய அளவில் கார் ரேஸ் பந்தய ரசிகர்கள் பெருகுவார்கள்.

தற்போது ஃபேன்கோடு நிறுவனம் குறைந்த விலையில் கார் ரேஸ் பந்தயத்தை காட்சிப்படுத்துவதன் மூலம் இந்தியாவில் கார் ரேஸ் பந்தயம் மீது மக்களுக்கு மிகப்பெரிய ஆர்வம் ஏற்படும். இதனால் கார் ரேஸ் பந்தயத்தை இந்தியாவில் அடிக்கடி நடத்துவதற்கான வாய்ப்பு உருவாகும். தற்போது எதிர்கால இந்தியாவில் மோட்டார் பந்தயம் மிகப்பெரிய துறையாக மாறப் போவது உறுதியாகி உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மெல்ல மெல்ல கார் ரேஸ் பந்தயத்திற்கான ரசிகர்கள் பெருகிவரும் நிலையில் இப்படியான குறைந்த விலை தளம் மூலம் கார் ரேஸ் பந்தயத்தை ஒளிபரப்பு செய்வது என்பது வரவேற்கப்பட வேண்டியதுதான். இதன் மூலம் எதிர்காலத்தில் கிரிக்கெட்டிற்கு இந்தியாவில் இருக்கும் மார்க்கெட் போல கார் ரேஸ் பந்தயத்திற்கும் மார்க்கெட் பெரிதாகும்.

More from DriveSpark

Article Published On: Monday, March 4, 2024, 12:32 [IST]
English summary
Fancode f1 race broadcast rights india secured
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+