2 முகங்கள் கொண்ட பிஎம்டபிள்யூ சொகுசு கார் இந்தியாவில் அறிமுகம்.. ஒரே ஒரு யூனிட்டை மட்டுமே ஒதுக்கி இருக்காங்க!

உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ (BMW)-வின் அசத்தலான தயாரிப்பாகக் காட்சியளிக்கின்றது, எக்ஸ்எம் லேபல் (XM Label) கார் மாடல். இந்த கார் மாடலை ஒட்டுமொத்த உலக சந்தைக்காகவே சுமார் 500 யூனிட்டுகளை மட்டுமே தயார் செய்திருக்கின்றது, பிஎம்டபிள்யூ. இந்த 500 யூனிட்டுகளில் இருந்தே ஒரே ஒரு யூனிட்டை தற்போது பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவிற்காக ஒதுக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிபியூ வாயிலாகவே இந்த காரை பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

ஆகையால், இதன் விலை சற்று நம்ப முடியாததாக உள்ளது. ரூ. 3.15 கோடி எனும் அதிகபட்ச விலையையே பிஎம்டபிள்யூ நிறுவனம் தற்போது நிர்ணயம் செய்திருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை மூன்றரை கோடிக்கும் அதிகமாக இருக்கும்.

Bmw xm label launched with exclusive features

இத்தகைய மிக விலை உயர்ந்த எக்ஸ்எம் லேபல் காரையே பிஎம்டபிள்யூ இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. மேலும், எக்ஸ்எம் லேபல் சொகுசு கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும். ஆகையால், பெரும் பணக்காரர்கள் அனைவரின் கண்களும் இந்த கார் மாடலின் பக்கம் தற்போது திரும்பியிருக்கின்றது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்எம் லேபல் சொகுசு காரின் சிறப்புகள்: இந்த காரை பிஎம்டபிள்யூ நிறுவனம் மின்சாரம் மற்றும் எரிபொருள் என இரண்டிலும் இயங்கும் வகையில் தயார் செய்திருக்கின்றது. இந்த இரண்டு முகங்களைக் கொண்டிருக்கும் கார்களை ஹைபிரிட் வாகனம் என்பர். பிளக்-இன் ஹைபிரிட் சிஸ்டமே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Bmw xm label interior

இதன் அடிப்படையிலேயே ஓர் எலெக்ட்ரிக் மோட்டார், வி8 எஞ்சின் உடன் வழங்கப்பட்டு உள்ளது. இது இரண்டும் சேர்ந்து 748 எச்பி மற்றும் 1,000 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில் வி8 எஞ்சின் மட்டும் 585 எச்பி ஆற்றலையும், 720 என்எம் டார்க்கையும் உருவாக்கும்.

இதேபோல், எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 197 எச்பி மற்றும் 280 என்எம் டார்க்கை வெளியேற்றும். இத்தகைய திறன் கொண்ட பவர்டிரெயின்களையே இந்த கார் தன்னுள் தாங்கி இருக்கின்றது. இத்துடன் எலெக்ட்ரிக் மோட்டாருக்கான மின்சாரத்தை வழங்கும் விதமாக 25.7 kW லித்தியம் அயன் பேட்டரி பேக் இதில் வழங்கப்பட்டு இருப்பதாக பிஎம்டபிள்யூ தெரிவித்து இருக்கின்றது.

Bmw xm label seat

இதை முழுமையாக சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்பட்சத்தில் 76 கிமீ முதல் 82 கிமீ தூரம் வரை பயணித்துக் கொள்ள முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும். எலெக்ட்ரானிக் வாயிலாக இதன் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

அதேவேளையில், எம் டிரைவர் எனும் பேக்கேஜின் வாயிலாக இதன் வேகத்தை 290 கிமீட்டராக உயர்த்திக் கொள்ள முடியும். இது வெறும் 3.8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் என்பது கவனிக்கத்தகுந்தது. எலெக்ட்ரிக் மோடில் இயங்கும்போது செயற்கையாக ஒலியை வெளியேற்றும் விதமான வசதி இதில் சேர்க்கப்பட்டு உள்ளது. அது, பிஎம்டபிள்யூ ஐகானிக்ஸ் சவுண்ட்ஸ் எலெக்ட்ரிக் எனும் பெயரிலேயே சேர்த்திருக்கின்றனர்.

இந்த காரை சார்ஜ் செய்துக் கொள்ளும் விதமாக வால்பாக்ஸ் சார்ஜரும் வழங்கப்படுகின்றது. இதை வீட்டிலேயே வைத்து இன்ஸ்டால் செய்துக் கொள்ள முடியும். இத்துடன், இந்த காரில் மிக சிறந்த இயக்க அனுபவத்த வழங்கும் விதமாக 8 ஸ்பீடு எம் ஸ்ட்ரெப்ட்ரானிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன், மூன்று விதமான ரைடிங் மோட்களைத் தேர்வுச் செய்துக் கொள்ளும் பொருட்டு எம் ஹைபிரிட் பொத்தானும் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்: இந்த காரில் பிஎம்டபிள்யூ நிறுவனம் பாதுகாப்பு அம்சங்களை மிக தாராளமாக வாரி வழங்கி இருக்கின்றது. மிக முக்கியமாக சுற்றுப்புறத்தை காண்பிக்கும் வசதிக் கொண்ட கேமிரா பார்க்கிங் அசிஸ்ட் பிளஸ் வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது மிகவும் சவாலான பார்க்கிங்கைகூட மிக மிக சுலபமாக்கிவிடும்.

இதுதவிர, 6 ஏர் பேக்குகள், ஏபிஎஸ், அட்டன்டீவ் அசிஸ்டன்ஸ், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல், டைனமிக் பிரேக் கன்ட்ரோல், பெர்ஃபார்மன்ஸ் கன்ட்ரோல், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், கிராஷ் சென்சார் மற்றும் சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை என மிக அதிக அளவிலான பாதுகாப்பு வசதிகளை இந்த கார் தன்னுள் தாங்கியிருக்கின்றது.

வெளிப்புற தோற்றம்: பாதுகாப்பு அம்சத்தில் மட்டுமல்ல இந்த கார் அழகிலும் மிகவும் கவர்ச்சியானதாகக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், இலுமினேட் ஆகும் வசதிக் கொண்ட சுற்றப்புறங்கள் கிட்னி வகை கிரில்-லைச் சுற்றிலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. சிவப்பு நிற மெட்டலே கிட்னி கிரில்லையும், பின் பக்கத்தில் உள்ள டிஃப்யூசரிலும் இன்செர்ட்டாக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த சிவப்பு நிறம் வெளிப்புறத்தில் மட்டுமல்ல உட்பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டு இருக்கும். அதேவேளையில், இந்த சிவப்பு நிற அலங்காரம் பேட்ஜ், வீல் உள்ளிட்டவற்றிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. குறிப்பாக, காரில் வழங்கப்பட்டு இருக்கும் பிரேக் காலிபர்கூட இந்த நிறத்தையேக் கொண்டிருக்கின்றது. மேலும், இந்த காரின் கவர்ச்சிக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக 22 அங்குல எம் லைட் வகை அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

உட்பக்கம்: முன்னதாக கூறியதைப் போலவே இந்த காரின் வெளிப்பக்கதைப் போலவே உட்பக்கமும் கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, கூடுதல் ஸ்போர்ட்டி ஃபீலை காரின் உட்பக்கம் வழங்கும் வகையில் உள்ளது. இதற்கு சான்றாக் அந்த காரின் இருக்கை உள்ளது.

சிவப்பு நிற தையல், மேல் பக்கத்தில் சிவப்பும், அடிப்பக்கம் கருப்பு நிறத்தாலும் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, சிவப்பு நிற இன்செர்ட்டுகள் ஏசி துவாரம், ஸ்டியரிங் வீல், கியல் லிவர் உள்ளிட்டவற்றில் பார்க்க முடிகின்றது. இதில் வழங்கப்பட்டு இருக்கும் இருக்கை பலதரப்பட்ட வசதிகளைத் தாங்கியது என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

காலுக்கான பேட் போன்றவற்றையும் அது பெற்றிருக்கின்றது. இதுதவிர, பிஎம்டபிள்யூவின் வளைவான திரை இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளது. ஒரே நீளமாக இருக்கும் இதில் பாதி, அதாவது, 14.9 அங்குலம் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும், 12.3 அங்குல திரை டிரைவர்களுக்கான திரையாகவும் செயல்படும். இதுதவிர, 1475 வாட் திறன் கொண்ட 20 ஸ்பீக்கர் போவர்கள் மற்றும் வில்கின்ஸ் சரவுண்டு சவுண்ட் சிஸ்டம் போன்றவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சொகுசு கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய மார்க்கெட்டிற்கே ஒரே ஒரு யூனிட்டை பிஎம்டபிள்யூ ஒதுக்கி இருக்கின்றது. ஆகையால், இதை வாங்க பணக்காரர்கள் மத்தியில் பெரும் போட்டி ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 17, 2024, 21:47 [IST]
English summary
First ever bmw xm label launches in india with exclusive features
மேலும்... #bmw #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X