மேட்-இன்-இந்தியா ஜிம்னி மீது இவ்ளோ ஆர்வமா!.. ஸ்பெஷலா இறக்குமதி செஞ்சு அமெரிக்கா கொண்டு போயிருக்காரு!

இந்தியாவில் மஹிந்திரா தார் (Mahindra Thar) காருக்கு போட்டியளிக்கும் விதமாக மாருதி சுஸுகி (Maruti Suzuki)யால் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட கார் மாடலே ஜிம்னி (Jimny) ஆகும். ஐந்து கதவுகள் கொண்ட வெர்ஷனிலேயே இந்தியாவில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், இது இன்னும் அமெரிக்காவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. இந்த நிலையிலேயே, அமெரிக்கர் ஒருவர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐந்து கதவுகள் கொண்ட ஜிம்னியை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவே, அமெரிக்காவின் முதல் மேட்-இன் இந்தியா ஐந்து கதவுகள் கொண்ட மாருதி சுஸுகி ஜிம்னி ஆகும்.

இந்த காரின் மீதுள்ள அதீத ஆர்வம் காரணமாக அமெரிக்கர் அதனை பிரத்யேகமாக இறக்குமதி செய்திருக்கின்றார். மாருதி சுஸுகி ஜிம்னி ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த ஆஃப்-ரோடு பயணங்களுக்கு உகந்த எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்தியர்கள் மத்தியில் கணிசமான அளவு இந்த கார் மாடலுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

Jimny in usa

Image Source: Exotic Motorsports of Oklahoma இந்த நிலையிலேயே வெளிநாட்டினரின் கவனத்தையும் இந்த கார் மாடல் ஈர்க்கத் தொடங்கி இருக்கின்றது என்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது. அமெரிக்கர் வாங்கி இருப்பது இந்தியாவில் வைத்து தயாரிக்கப்பட்ட ஜிம்னி ஆகும். இந்த கார் மாடல் பயன்பாட்டிற்காக வாங்கப்படவில்லை என்பது தெரிய வந்திருக்கின்றது.

அதை அமெரிக்காவில் விற்பனையில் செய்யும் பொருட்டே அந்த அமெரிக்கர் வாங்கி இருக்கின்றாராம். ஓக்லஹோமாவில் உள்ள எக்ஸோடிக் மோட்டார்ஸ்போர்ட்ஸ் எனும் விற்பனையாளரே ஜிம்னியை பிரத்யேகமாக இறக்குமதி செய்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றார். கார் விற்பனை விளம்பரத்தை முகப்புத்தக பக்கத்தில் வெளியிட்டதன் வாயிலாகவே அந்த கார் விற்பனைக்கு வந்திருப்பது தெரிய வந்திருக்கின்றது.

மேலும், அது ஆல்ஃபா ஏடி (Alpha AT) வேரியண்ட் என்பதும் தெரிய வந்திருக்கின்றது. இந்த காரை அமெரிக்காவில் பயன்படுத்துவது சட்டப்பூர்வமானதா என்பதே தற்போது பலரின் சந்தேகமாக மாறியுள்ளது. ஆனால், அந்த டீலரோ, இந்த வாகனம் அமெரிக்காவில் ஓட்டுவது சட்டப்பூர்வமானது என்று தெரிவித்து இருக்கின்றார்.

புத்தம் புதியதாக தென்படும் இந்த கார் சுமார் 7,571 கிமீ பயணித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இவ்வளவு தூரம் பயணித்திருக்கும் அந்த காரை அமெரிக்க விற்பனையாளர் 54,995 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றார். இது இந்திய மதிப்பில் சுமார் 46 லட்ச ரூபாய்க்கும் அதிகம் ஆகும்.

இந்தியாவில் இதே தேர்வு ரூ. 17 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்கப்படுகின்றது. இந்தியாவில் விரைவில் ஐந்து கதவுகள் கொண்ட ஜிம்னியுடன் சேர்த்து விரைவில் மூன்று கதவுகள் கொண்ட ஜிம்னியும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. மேலும், ரூ. 12.74 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

மேலும், ஜீட்டா (Zeta) மற்றும் ஆல்ஃபா (Alpha) ஆகிய இரண்டு வேரியண்டுகளில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த இரண்டிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. 5 ஸ்பீடு மேனுவல், 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷனே வழங்கப்படுகின்றன. எஞ்சினைப் பொருத்த வரை 1.5 லிட்டர் கே15பி பெட்ரோல் மோட்டார் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஒரு சிலர் டெஸ்லா மற்றும் ஃபெர்ராரி போன்ற முன்னணி நிறுவனங்களின் கார்களையே இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே அமெரிக்கர் இந்த காரை பிரத்யேகமாக இறக்குமதி செய்துள்ளார். ஆனால், இறக்குமதி செய்து விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதுதான் இதில் தனித்துவமான ஓர் செயலாக உள்ளது. இந்த யூனிட்டிற்கு டிமாண்ட அதிகரிக்கும் எனில் இன்னும் இதுபோன்று பல்வேறு யூனிட்டுகளை அவர்கள் இறக்குமதி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 26, 2024, 12:06 [IST]
English summary
First made in india maruti jimny lands in usa
மேலும்... #maruti suzuki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+