ஹேண்டில் செய்வது கஷ்டம்னு நிறைய பேர் சொல்வாங்க... தைரியமாக வாங்கிய முதல் பெண்!!
மஹிந்திரா தார் (Mahindra Thar), இந்தியாவில் தற்போதைக்கு ஆஃப்-ரோடு வாகனங்களை வாங்க விரும்புவோரின் முதன்மையான தேர்வாக உள்ளது. இதற்கு போட்டியாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் ஜப்பானில் விற்பனையில் இருந்த ஜிம்னி (Jimny)-ஐ இந்தியாவில் களமிறக்கிய போதிலும், அது மஹிந்திராவின் ஆதிக்கத்தை தடுக்கவில்லை. ஃபோர்ஸ் மோட்டார்ஸ் (Force Motors) நிறுவனமும் குர்கா (Gurkha) என்கிற ஆஃப்-ரோடு வாகனத்தை விற்பனை செய்கிறது. குர்காவின் விற்பனையும் பெரியதாக இல்லையென்றாலும், அதுவரையில் 3 கதவுகள் உடன் விற்பனை செய்யப்பட்டு வந்த குர்கா வாகனத்தை 5 கதவுகள் உடன் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது.
இந்த நிலையில், இந்தியாவிலேயே முதல்முறையாக பெண் ஒருவர் ஃபோர்ஸ் குர்கா வாகனத்தை வாங்கியுள்ளார். மஹிந்திராவை போல் இந்தியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கடந்த சில வருடங்களாக குர்கா எஸ்யூவி வாகனத்தை விற்பனை செய்து வருகிறது. தோற்றத்தில், மஹிந்திரா தாரும், ஃபோர்ஸ் குர்காவும் ஒத்ததாக இருந்தாலும் குர்கா தோற்றத்தில் பெரியது ஆகும்.

குறிப்பாக, குர்காவின் உயரம் சற்று அதிகம். அதுமட்டுமின்றி, குர்காவில் பிரபலமான மெர்சிடிஸ் (Mercedes) நிறுவனத்தின் என்ஜின் (Engine) பொருத்தப்படுகிறது. இருப்பினும், குர்காவில் 3 கதவுகள் மட்டுமே கொடுக்கப்பட்டது குறையாக பார்க்கப்பட்டு வந்தது. இந்த குறையை களையெடுக்கும் விதமாக 5-கதவுகளுடன் குர்காவை சமீபத்தில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது.
ஃபோர்ஸ் குர்கா 5-டோர் வாகனத்தின் ஆரம்ப விலையாக ரூ.18 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா தாரை விட சில பிரீமியம் தரத்திலான பாகங்களினால், குர்கா 5-கதவு வாகனத்தின் விலை சற்று அதிகமாக உள்ளது. குர்கா 5-கதவு வாகனத்தை புக் செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் கூட துவங்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில், இந்தியாவிலேயே முதல்முறையாக பெண் ஒருவர் குர்காவை டெலிவிரி பெற்றுள்ளார்.

இந்தியாவிலேயே குர்கா 5-டோர் (5-door) வாகனத்தை வாங்கிய முதல் கஸ்டமர் இவர் என கூறப்படுகிறது. ஃபோர்ஸ் குர்கா வாகனம் சிவப்பு, பச்சை, வெள்ளை மற்றும் கருப்பு என 4 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், இந்த முதல் பெண் கஸ்டமர் வாங்கியிருப்பது சிவப்பு நிறத்திலான குர்கா வாகனம் ஆகும்.
கதவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால், அதற்கேற்ப வாகனத்தின் நீளமும் அதிகரித்துள்ளது. மேலும், இதன் காரணமாக கேபினுக்குள் இடவசதியும் அதிகரித்துள்ளது. எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் டி.ஆர்.எல்-களை கொண்ட குர்கா 5-டோர் வாகனத்தில் 18-இன்ச் அலாய் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன. காருக்குள் டேஸ்போர்டில் 9-இன்ச் டச் ஸ்க்ரீன் மற்றும் மேனுவல் ஏசி வழங்கப்படுகிறது.

3-டோர் குர்காவில் வழங்கப்பட்ட அதே 2.6 லிட்டர் டீசல் என்ஜின் தான் குர்கா 5-டோர் வாகனத்திலும் பொருத்தப்படுகிறது. மெர்சிடிஸ் நிறுவனத்தின் உதவியுடன் ஃபோர்ஸ் நிறுவனம் உருவாக்கும் இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 140 எச்பி மற்றும் 320 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. மற்றப்படி, இந்த வாகனத்தில் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் எதுவும் கொடுக்கப்படுவதில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபோர்ஸ் குர்கா போன்ற முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட வாகனம் எல்லாம் ஆண்களுக்கு தான் சரிப்பட்டவை என்கிற தவறான கருத்து மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால், அது அப்படியெல்லாம் இல்லை என்பதை இந்த பெண் ஃபோர்ஸ் குர்கா கஸ்டமர் சொல்லாமல் சொல்லியுள்ளார். இந்த வாகனத்தின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ.18 லட்சமாக இருப்பதால், ரூ.20 லட்சம் செலவு செய்யாமல் இந்த வாகனத்தை பெற முடியாது.


Click it and Unblock the Notifications









