6வாரங்களுக்கு கார் உற்பத்தி ரத்து.. அதிரடி குண்டை இறக்கிய பிரபல நிறுவனம்! இந்தியா வரும் பிளானுக்கும் மூடு விழா

உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று அதன் குறிப்பிட்ட கார் மாடல் ஒன்றின் உற்பத்தி பணிகளை நிறுத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது என்ன மாடல்? என்ன காரணத்திற்காக உற்பத்தி நிறுத்தப்பட இருக்கின்றது? என்பது பற்றிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

உலகின் புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனங்களில் ஃபிஸ்கர் (Fisker)-ம் ஒன்றாகும். இந்த நிறுவனமே அதன் குறிப்பிட்ட கார் மாடல் ஒன்றின் உற்பத்தி பணிகளை நிறுத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓசோன் (Ocean) கார் மாடலின் உற்பத்தி பணிகளையே அது நிறுத்த திட்டமிட்டு இருக்கின்றது.

Fisker ocean

இது ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த காரின் உற்பத்தி பணிகளே விரைவில் நிறுத்தப்பட இருக்கின்றது. ஆனால், இது தற்காலிக நிறுத்தம் மட்டுமே ஆகும். ஆறு வாரங்களுக்கு மட்டுமே உற்பத்தியை நிறுத்த இருக்கின்றது, ஃபிஸ்கர். நிறுவனத்தின் இந்த அதிரடி முடிவிற்கு அது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதே காரணமாக இருக்கின்றது.

நிறுவனத்திற்கு ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களிடம் இருந்து 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு கிடைத்திருக்கின்றது. இதன் மதிப்பு தோராயமாக இந்திய ரூபாயில் 1,244 கோடி ஆகும். இருப்பினும், மேலும், சில முதலீட்டாளர்களை ஈர்க்கும் முயற்சியிலேயே ஃபிஸ்கர் களமிறங்கி இருக்கின்றது. தற்போது நிஸான் நிறுவனத்திடம் நிதிக்காக நிறுவனம் கோரிக்கையை முன் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் நிறுவனத்திடம் இருந்து வெளியாகவில்லை. அதேவேளையில், நிறுவனத்திற்கு முதலீடு கிடைக்கும்பட்சத்தில், அடுத்த பணியாக ஓசோனின் உற்பத்தி பணிகளையும் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது நிறுவனம் 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (3,321 கோடி ரூபாய்) முதலீட்டை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.

ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மார்ச் மாதம் 15 ஆம் தேதி வரை சுமார் ஆயிரம் யூனிட்டுகள் மட்டுமே ஓசோன் கார் மாடல் தயாரிக்கப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், 1500 யூனிட்டுகள் வரை அது டெலிவரிக் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி நிறுவனத்தின் கையிருப்பு 4,700 யூனிட்டுகள் என கூறப்படுகின்றது.

இதன் மதிப்பு 1,660 கோடிகள் ஆகும். இந்த நிலையிலேயே போதுமான நிதி கையிருப்பில் இல்லாத காரணத்தினால் இந்த கார் மாடலின் உற்பத்தி பணிகளை ஆறு மாதங்களுக்கு நிறுத்த முடிவு செய்திருக்கின்றது. முன்னதாக இதேபோல் நிறவனத்தின் மலிவு விலை கார் மாடலான பியர் காம்பேக்ட் எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டது.

2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் சுமார் 463.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பை சந்தித்தன் விளைவாக இந்த தீர்க்கமான முடிவை ஃபிஸ்கர் எட்டியது. மேலும், மீதமுள்ள பணத்தை வைத்து ஓசோனின் உற்பத்தியை மேற்கொள்ள திட்டமிட்டது. ஆனால், நிதி நெருக்கடி மேலும் நிறுவனத்தின் கழுத்தை நெருக்க ஆரம்பித்து இருப்பதால் இப்போது அந்த காரின் உற்பத்தியையும் நிறுத்தும் எண்ணித்தில் இருக்கின்றது, ஓசோன்.

ஃபிஸ்கர் நிறுவனம் இந்திய சந்தையில் கால் தடம் பதிக்கும் விதமாக அதன் ஓசோன் கார் மாடலை நாட்டில் அறிமுகம் செய்யும் பிளானில் இருந்தது. முதல் கட்டமாக அந்நிறுவனம் 100 யூனிட்டுகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருந்தது. ஆனால், இப்போது மிகப் பெரிய நிதி பற்றாக்குறை சிக்கலில் ஃபிஸ்கர் சிக்கி இருப்பதால் அந்த நிறுவனத்தின் இந்திய வருகை கேள்விக் குறியாக மாறி இருக்கின்றது.

ஃபிஸ்கர் ஓசோன் ஓர் முழு சார்ஜில் 563 கிமீ வரை ரேஞ்ஜ் தரும். இத்தகைய அதிக ரேஞ்ஜ் தருவதற்காக இந்த காரில் மிகப் பெரிய பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை சார்ஜ் செய்ய சார்ஜிங் பாயிண்ட் தேவையில்லை. சூரிய ஒளி இருந்தாலே போதுமானது.

ஆமாங்க, காரை சுலபமாக சார்ஜ் செய்துக் கொள்ள ஏதுவாக அதன் மேற்கூரையில் சோலார் ஸ்கை எனும் ரூஃப் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த ரூஃப் சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தைச் சேகரிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே வெயில் காலத்தில் கரண்ட் செலவு கொஞ்சமும் இருக்காது.

இதுதவிர, 17.1 அங்குல தொடுதிரை சிஸ்டம், டிஜிட்டல் ரியர் வியூவ் மிர்ரர், பவர் லிஃப்ட்கேட், ஃபிஸ்கர், பல்ஸ் ஆடியோ சிஸ்டம், ஸ்மார்ட் டிராக்சன், முன் மற்றும் பின் பக்கங்களில் ஹீட் வசதி கொண்ட இருக்கைகள் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆகையால், இந்த கார் தொழிலதிபர்கள் மற்றும் லக்சூரி கார் பிரியர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெட்ரோல், டீசல் வாகனங்களைக் காட்டிலும் அதிக லாபம் தரக் கூடியதாக மின்சார வாகனங்கள் பார்க்கப்படுகின்றன. ஆனால், இது வழக்கமான மின்சார வாகனங்களைக் காட்டிலும் மிக அதிக லாபத்தைத் தரக் கூடியது ஆகும். சூரிய ஒளியிலேயே அது சார்ஜ் செய்துக் கொள்ளும் என்பதால், சார்ஜ் செய்ய தேவைப்படும் மின்சாரத்திற்கு ஆகும் செலவும் இங்கு தவிர்க்கப்பட்டு இருக்கின்றது. இத்தகைய கார் மாடலின் உற்பத்தி பணிகளே தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, March 23, 2024, 15:04 [IST]
English summary
Fisker ocean suv car production stopped for 6 weeks
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+